TA/Prabhupada 0176 - கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்



Lecture on SB 1.8.45 -- Los Angeles, May 7, 1973

நம்மிடம் இந்த மர்ம சக்தி உள்ளது, ஆனால் நமக்கு தெரியாது. இதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. கஸ்தூரி மான், அதனுடைய தொப்புளிலிருந்து, கஸ்தூரி மணம் தோன்றும். அந்த நறுமணத்தை தேடி, அந்த மான் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருக்கும். இந்த மணம் எங்கிருந்து வருகிறது? அந்த வாசனை அதனுடைய தொப்புளிலிருந்து வருகிறது என்பது அந்த மானுக்கு தெரியாது. புரிகிறதா. அதனுள்ளேயே நறுமணத்தை வைத்துக்கொண்டு அது வெளியே தேடுகிறது, "எங்கே ? எங்கே ?" அதுபோலவே, நமக்குள், பல செயலிழந்த மர்ம சக்திகள் உள்ளன. நாம் அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் மர்ம யோக முறைகளை பயின்றால், அவற்றில் சிலவற்றை உங்களால் சிறப்பாக வளர்க்க முடியும். உதாரணத்திற்கு பறவைகள் பறப்பதை போல் நம்மால் பறக்க இயலாது. சிலசமயம் நாம் ஆசை படுகிறோம், "ஒருவேளை எனக்கு புறாவின் இறக்கைகள் இருந்தால்... " இப்படி கவிதைகள் உள்ளன: "நான் உடனே பறந்துச் செல்வேன்." ஆனால் அந்த மர்ம சக்தி உங்களிடமும் உள்ளது. நீங்கள் யோகத்தை சரியான முறையில் பயின்றால், நீங்களும் காற்றில் பறக்கலாம். அது சாத்தியம். சித்தலோகம் என்று ஒரு கிரகம் உள்ளது. சித்தாலோகத்தில் வசிப்பவர்களுக்கு... சித்தாலோகம் என்றால் அவர்களுக்கு பற்பல மர்ம சக்திகள் உண்டு. நாம் நிலவிற்கு செல்ல பல இயந்திரங்களை வைத்து முயல்கிறோம். ஆனால் அவர்களால் பறக்க முடியும். நினைத்தவுடன் அவர்களால் அங்கு செல்ல முடியும். ஆக மர்ம சக்தி அனைவரிடமும் உள்ளது. அதை நாம் வளர்க்க வேண்டியது தான். பரஸ்ய சக்திர் விவிதைவ ஷ்ரூயதே (சைதன்ய சரிதாம்ருதம் 13.65, பொருள் விளக்கம்). நம்மிடம் பல செயல்படுத்தாத சக்திகள் உள்ளன. அவைகளை பயின்று வளர்க்க வேண்டியது தான். கிருஷ்ண உணர்வைப் போல் தான். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் யார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் தகுந்த பயிற்சியின் மூலம் உங்களால், கடவுள் என்றால் என்ன, அவருடன் நம் உறவு என்ன, இப்படி கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்க்கை என்பது இத்தகைய பயிற்சிக்காகத் தானே ஒழிய, உணவு, உடை, ஒதுங்குமிடம், உடலுறவு போன்றவற்றைத் தேடி அலைவதற்கு அல்ல. இவை எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. தஸ்யைவ ஹெதோஹோ ப்ரயதேத கோவிதோ ந லப்யதே ... (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18). நாம் கேட்டறிய வேண்டிய விஷயங்கள் இவை அல்ல. ஏனென்றால் இவை ஏற்கனவே உள்ளவை தான். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கே இவை எல்லாம் எளிதாக கிடைக்கும் போது மனிதனுக்கு என்ன பிரச்சனை? ஆனால் அவர்கள் அவ்வளவு அயோக்கியர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் வெறும் உணவு ,உடை, உடலுறவு, தற்காப்பைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். இதுதான் தவறாக வழிநடத்தப்பட்ட நாகரீகம். மிருகங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எந்த குறையும் இன்றி இவையெல்லாம் கிடைப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. மனித சமுதாயத்திற்கு மட்டும் எப்படி இத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும்? அது ஒரு பிரச்சினையே இல்லை. நமக்கு மறுபடியும் மறுபடியும் நிகழும் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் எனும் சுழற்சியை நிறுத்துவது தான் உண்மையான பிரச்சனை. அது தான் உண்மையான பிரச்சனை. அந்த பிரச்சனையை இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தால் தீர்த்து வைக்க முடியும். நீங்கள் வெறும் கிருஷ்ணர் என்றால் என்னவென்பதை புரிந்துகொண்டால் போதும், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (பகவத் கீதை 4.9), பிறகு இந்த ஜடவுலகில் மறுபிறவி என்பதே கிடையாது. நீங்கள் கிருஷ்ணருடன் நட்பை வளர்த்தால், பிறகு உங்களால் கிருஷ்ணருடன் பேச முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. யுதிஷ்டிர மஹாராஜா கேட்டது போல் : "கிருஷ்ணா, தயவு செய்து என்னுடன் இன்னும் சில நாட்கள் இருப்பாயா ?" ஆக, சில நாட்களுக்காக மட்டுமல்ல, கிருஷ்ணரை நாம் நேசித்தால் , கிருஷ்ணர் நிரந்தரமாக நம்முடன் இருப்பார். மிக்க நன்றி