TA/Prabhupada 0188 - கிருஷ்ணரை கட்டுப்படுத்துங்கள் - அதுதான் விருந்தாவன வாழ்க்கை

Revision as of 13:49, 27 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0188 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 2.3.17 -- Los Angeles, July 12, 1969

விஷ்ணுஜன்: பிரபுபாதா தாங்கள் விவரித்தீர்கள், அதாவது பகவான்தான் காரணம், மூலக் காரணம் என்று, மேலும் ஒருவருக்கும் பகவானை பற்றி தெரியாதென்பதால், மக்களுக்கு அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்தை அறிந்துக் கொள்வது எவ்வாறு சாத்தியமாகும்? அவர்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எவ்வாறு தெரிந்துக் கொள்வார்கள், மேலும் அவரே மூலவர் என்று ஒருவரும் கிருஷ்ணரை அறிந்திருக்கவில்லை? அதாவது கிருஷ்ணரால்தான் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று அவர்கள் எவ்வாறு தெரிந்துக் கொள்வார்கள்? பிரபுபாதர்: அரசாங்கத்தால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எவ்வாறு நீங்கள் தெரிந்துக் கொண்டீர்கள்? எவ்வாறு நீங்கள் தெரிந்துக் கொள்வீர்கள்? விஷ்ணுஜன்: அரசாங்கத்திற்கு சட்டபுத்தகம் உள்ளது. பிரபுபாதர்: ஆகையினால் நமக்கும் சட்டபுத்தகம் உள்ளது. அனாதி பஹிர்முஹ ஜீவ க்ருஷ்ண பூலி கெலா, அதிவ க்ருஷ்ண வேத-புராணே கரிலா. ஏனென்றால் நீங்கள் கிருஷ்ணரை மறந்துவிட்டீர்கள், ஆகையினால் கிருஷ்ணர் உங்களுக்கு நிறைய புத்தகங்கள், வேத இலக்கியங்கள் கொடுத்திருக்கிறார். ஆகையினால் நான் வற்புறுத்துகிறேன், உங்கள் நேரத்தை வெற்றுரை இலக்கியங்களை படித்து வீணாக்காதீர்கள். உங்கள் மனத்தை சும்மா வேத இலக்கியத்தில் ஒருநிலைப்படுத்துங்கள். பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்வீர்கள். இந்த புத்தகங்கள் என் அங்கு இருக்கிறது? சும்மா உங்களை சட்டபூர்வமானவர்களாக மாற ஞாபகப்படுத்த. ஆனால் நீங்கள் சாதகப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை தகாத வழியில் நடத்துகிறிர்கள். இந்த சமயச் சொற்பொழிவாற்றும் வேலை, இந்த புத்தகங்களை பதிப்பிடுவது, இலக்கியம், சஞ்சிகை, கிருஷ்ண பக்தி இயக்கம், அனைத்தும் நாம் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த, நித்தியமான கட்டுப்பாட்டாளர் யார், உங்கள் வாழ்க்கை எவ்வாறு வெற்றிகரமாகும், கட்டுப்படுத்தப்பட்ட இந்த வாழ்க்கையிலிருந்து எவ்வாறு நீங்கள் விடுவிக்கப்படலாம், சுதந்திரமான வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு பெறலாம். இதுதான் இந்த இயக்கம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அந்த குறிக்கொள் உடையது; மற்றபடி, இந்த இயக்கத்தின் உபயோகம் என்ன? இது ஒரு "இஸம்" அல்ல சும்மா தற்காலிகமாக திருப்திப்படுத்த. வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது இறுதியான தீர்வு. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். மேலும் இந்த ஜெபித்தல் இதயத்திற்காண நடைபாதை, எவ்விடத்தில் நீங்கள் இந்த தகவலை பெறுவீர்கள். சேதோ-தர்பண-மார்ஜன (CC Antya 20.12), இதயத்தை தூய்மைப்படுத்தல். பிறகு நீங்கள் தகவலை பெறும் திறமை அடைவீர்கள். ஆகையால் எங்கள் செயல்முறை மிகவும் அறிவுப்பூர்வமானது, அதிகாரப்பூர்வமானது, மேலும் இதை யாரும் ஏற்றுக் கொண்டால், அவர் படிப்படியாக உணர்வார், மேலும் அவர் உயர்த்தப்படுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.