TA/Prabhupada 0196 - வெறுமனே ஆன்மீக காரியங்களில் பேராவல் கொள்வீர்கள்

Revision as of 14:28, 27 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0196 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.58-59 -- New York, April 27, 1966

ஆகையால் நாம் அதன் பொருளை கற்றுக் கொள்ள வேண்டும், அதாவது ஆன்மீக வாழ்வின் அருமையை நாம் எவ்வாறு காண்பது என்று. பிறகு, இயல்பாக, நாம் பௌதிக செயல்களிலிருந்து விலகி இருக்க முயல்வோம். எவ்வாறு என்றால் ஒரு குழந்தையை, ஒரு பையனைப் போல். அவன் நாள் முழுவதும் விஷமம் செய்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பான், ஆனால் அவனுக்கு சில சிறந்த ஈடுபாடுகள் கொடுக்கப்பட்டால்..... கல்வி இலாக்காவால், இப்பொழுது பலவிதமான சாதனம் உள்ளது, பாலர் பள்ளி அமைப்பு அல்லது இந்த அமைப்பு அல்லது அந்த அமைப்பு. ஆனால் அவன் ஈடுபாடு கொண்டால், "ஓ, 'ஏ' படிவம், 'பி' படிவம்". ஆகையால் அவன் அதே நேரத்தில் ஏபிசி கற்கிறான், மேலும் அதே நேரத்தில் விஷமத்தனமான செயல்களிலிருந்து விலகுகிறான். அதேபோன்று, அங்கே காரியங்கள் உள்ளன, ஆன்மீக வாழ்க்கையின் பாலர் பள்ளி அமைப்பு. நம் செய்முறைகளை அந்த ஆன்மீக செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டால், அதன் பிறகு தான் இந்த பௌதிக செயல்களிலிருந்து நாம் விலகுவது சாத்தியமாகும். நடவடிக்கைகள் நிறுத்தப்பட முடியாது. நடவடிக்கைகள் நிறுத்தப்பட முடியாது. அதே மாதிரியான உதாரணம், அதாவது அர்ஜுன.... முதலில், பகவத்-கீதை கேட்பதிற்கு முன்பாக, அவர் போர் செய்யக் கூடாது என்று, செயலிழந்தார். ஆனால் பகவத்-கீதையை கேட்ட பிறகு, அவர் அதிக துடிபடைந்தார், ஆனால் உன்னதமான துடிப்பு. ஆகையால் ஆன்மீக வாழ்க்கை, அல்லது உன்னதமான வாழ்க்கை, என்றால் நாம் நடவடிக்கைகளில் இருந்து சுதந்திரமாக இருக்கலாம் என்று பொருள்படாது. வெறுமனே இயற்கைக்கு மாறாக, நாம் உட்கார்ந்திருந்து, "ஓ, ஜட சாதனங்கள் எதையும் இனிமேல் நான் செய்யப் போவதில்லை. நான் வெறுமனே தியானம் செய்வேன்," ஓ, நீங்கள் என்ன தியானம் செய்வீர்கள்? உங்களுடைய தியானம் ஒரு நொடியில் தடைப்பட்டுவிடும், எவ்வாறு என்றால், விஸ்வாமித்ர முனிவர் போல், அவரால் தியானத்தை தொடர முடியவில்லை. நாம் எப்பொழுதும் நூறு சதவிகிதம், ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அது நம் வாழ்க்கையின் திட்டமாக இருக்க வேண்டும். ஆன்மீக வாழ்க்கையில் அதை தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்களுக்குமிக அதிகமான ஈடுபாடுகள் இருக்கும். ரஸ-வர்ஜம். மேலும் அந்த ஈடுபாடு நீங்கள் உன்னதமான மகிழ்ச்சியை அதில் காணும் போதுதான் சாத்தியமாகும். ஆகையால் அது நடத்தப்படும். அது நடத்தப்படும். ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: (CC Madhya 23.14-15). ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது, முதலில், ஷரடா, கொஞ்சம் சமய நம்பிக்கை. எவ்வாறு என்றால் நீங்கள் நான் கூறுவதைக் கேட்க இங்கு அன்புடன் வருகிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் சமய நம்பிக்கை இருக்கிறது. இதுதான் அதன் ஆரம்பம். நம்பிக்கை இல்லாமல், உங்களால் ஓய்வு நேரத்தை இங்கே கழிக்க முடியாது, ஏனென்றால் இங்கே திரைப்படம் ஓடவில்லை, அரசியல் சொற்பொழிவு இல்லை, அதைப் போன்று எதுவும் இல்லை. ஒருவேளை, சிலருக்கு அது சாரமற்ற பொருளாக இருக்கும். மிகவும் சாரமற்ற பொருளாக.(வாய்க்குள் சிரிப்பு) இருப்பினும், நீங்கள் வருகிறீர்கள். ஏன்? ஏனென்றால் உங்களுக்கு கொஞ்சம் சமய நம்பிக்கை இருக்கிறது, "ஓ, இங்கு பகவத்-கீதை இருக்கிறது. நாம் அதை கேட்டுக் கொள்வோம்." ஆகையால் நம்பிக்கை தான் தொடக்கம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எந்த ஆன்மீக வாழ்க்கையும் கிடைக்காது. நம்பிக்கை தான் தொடக்கம். ஆதெள ஷரடா. ஷரடா. மேலும் இந்த நம்பிக்கை, விசுவாசம், அது எந்த அளவுக்கு தீவிரப்படுகிறதோ, அவ்வளவுக்கு நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். ஆகையால் இந்த நம்பிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். தொடக்கமே நம்பிக்கை தான். இப்பொழுது, உங்கள் நம்பிக்கையை தீவிரப்படுத்த தொடங்கியதும், நீங்கள் ஆன்மீக வழியில் முற்போக்கு சிந்தனை உடையவராகிறிர்கள். ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: (CC Madhya 23.14-15). உங்களுக்கு சிறிது விசுவாசம் இருந்தால், பிறகு நீங்கள் சில சாதுக்களை தேடிக் கண்டறிவீர்கள், சாது அல்லது சில துறவிகள், சில முனிவர்கள், உங்களுக்கு ஆன்மீக அக ஒளியை கொடுக்கக் கூடியவர்கள். அதுதான் சாது-சண்க: (CC Madhya 22.83) என்று அழைக்கப்படுகிறது. ஆதெள ஷரடா. அதன் அடிப்படை கொள்கை ஷரடா, மேலும் அதன் அடுத்த படி சாது-சண்க:, ஆன்மீகத்தை கற்றுணர்ந்தவர்களின் சகவாசம். அது சாது என்றழைக்கப்படுகிறது... ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: அதா பஜன-க்ரியா. உண்மையிலேயேஅங்கே ஆன்மீகத்தை கற்றுணர்ந்தவர்களின் சகவாசம் இருந்தால், பிறகு அவர் உங்களுக்கு ஆன்மீக செயல்முறைகள் சிலவற்றை அளிப்பார். அதனை பஜன-க்ரியா என்று அழைக்கிறோம். ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: அதா பஜன-க்ரியா ததா: அநர்த-நிவ்ருதி: ஸ்யாத். மேலும் நீங்கள் ஆன்மீக செயல்களில் மேலும் மேலும் ஈடுபாடு கொள்ளும் போது, ஆக, சரிசம விகிதத்தில், உங்கள் ஜட நடவடிக்கையும் ஜட செயல்களில் இருக்கும் தாக்கமும் குறைந்துக் கொண்டு வரும். எதிரிடையான செயல். நீங்கள் ஆன்மீக செயலில் ஈடுபடும் போது, உங்களுடைய ஜட செயல்கள் குறைந்துவிடும். ஆனால் ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஜட செயல்களுக்கும் ஆன்மீக செயல்களுக்கும், உள்ள வேறுபாடுகள் யாதெனில்... ஒருவேளை நீங்கள் மருத்துவராக ஈடுப்பட்டிருந்தால். நீங்கள் இவ்வாறு நினைக்காதீர்கள் அதாவது "நான் ஆன்மீகத்தில் ஈடுபட்டால், பிறகு நான் என் தொழிலை கைவிட வேண்டும்." இல்லை, இல்லை. அவ்வாறே அல்ல. நீங்கள் உங்கள் தொழிலை ஆன்மீகமாக்க வேண்டும். எவ்வாறு என்றால் அர்ஜுனர் போல், அவர் இராணுவகாரர். அவர் ஆன்மீகவாதியானார். எவ்வாறு என்றால் இராணுவச் செயல்களை ஆன்மீகமாக்கினார். ஆகையால் இதுதான் அதன் நுணுக்கமுறை. ஆகையால் ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: அதா பஜன-க்ரியா ததா: அநர்த-நிவ்ருதி: ஸ்யாத் (CC Madhya 23.14-15). அநர்த என்றால்... அநர்த என்றால் அதாவது என் அவல நிலையை உருவாக்குவது. ஜட செயல்கள் என் அவல நிலையை தொடர்ந்து அதிகமாக்கும். மேலும் நீங்கள் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டால், பிறகு உங்களுடைய ஜட அவலநிலை படிப்படியாக குறைந்துவிடும், அத்துடன் நடைமுறைக்கு ஏற்ப உறுப்பிலாகிவிடும். மேலும் நாம் உண்மையிலேயே ஜட விருப்பங்களில் இருந்து விடுபட்டால், பிறகு நம்முடைய உண்மையான ஆன்மீக வாழ்க்கை தொடங்கிவிடும். அதாசக்தி. நீங்கள் இணைந்துவிடுவீர்கள். இன்மேலும் நீங்கள் கைவிட்டுவிட முடியாது. உங்களுடைய அநர்த-நிவ்ருதி:, உங்களுடைய ஜட செயல்கள் முற்றிலும் தடைப்பட்டால், பிறகு உங்களால் கைவிட்டுவிட முடியாது. அதாசக்தி ஆதெள ஷரடா ததா: சாது-சண்க: அதா பஜன-க்ரியா ததொ அநர்த-நிவ்ருதி: ஸ்யாத் ததொ நிஸ்தா (CC Madhya 23.14-15). நிஸ்தா என்றால் உங்களுடைய நம்பிக்கை மிகவும் உறுதிஆகிறது, நிலைநாட்டப்படுகிறது, நிதானமானது. ததொ நிஸ்தா ததொ ருஸி:. ருஸி என்றால் நீங்கள் வெறுமனே ஆன்மீக காரியங்களில் பேராவல் கொள்வீர்கள். ஆன்மீக தகவல்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் கேட்க விருப்பம் கொள்ளமாட்டீர்கள். ஆன்மீக செயல்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்ய விருப்பம் கொள்ளமாட்டீர்கள். ஆன்மீகம் அல்லாத எதையும் நீங்கள் உண்ண விருப்பம் கொள்ளமாட்டீர்கள். ஆகையால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். ததொ நிஸ்தா அதாசக்தி:. பிறகு இணைப்பு, பிறகு பாவ. பிறகு நீங்கள் உன்னதமாக, நான் சொல்வதாவது, பெருவகைக்கு ஆளாவீர்கள். அங்கே கொஞ்சம் மெய் மறந்த மகிழ்ச்சி இருக்கும். மேலும் அதுதான்... உயர்ந்த ஆன்மீக தளத்திற்கு இதுதான் வெவ்வேறான படிகள். ததொ பாவ:. ததொ பாவ:. பாவ அந்த நிலை, சரியான ஆன்மீக தளம், அங்கிருந்து நீங்கள் நேரடியாக முழுமுதற் கடவுளுடன் உரையாடலாம்.