TA/Prabhupada 0205 - மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை

Revision as of 15:25, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0205 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Mor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Morning Walk -- May 20, 1975, Melbourne

பிரபுபாதா: நீங்கள் அவர் கிருஷ்ண உணர்வு நிலை அடைந்ததை பார்க்கவேண்டும் என்பதில்லை. கிருஷ்ண உணர்வை அடைதல் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் அல்ல. அது பல பிறவிகள் எடுக்கும். bahūnāṁ janmanām ante (BG 7.19) ஆனால் நீங்கள் உங்கள் கடமையை செய்ய வேண்டும். நீங்கள் சென்று போதிக்க வேண்டும் .. Yāre dekha, tāre kaha 'kṛṣṇa'-upadeśa (CC Madhya 7.128). அத்துடன் உங்களின் கடமை முடிந்துவிட்டது. கண்டிப்பாக அவரை மாற்ற நீங்கள் முயற்சி செய்யவீர்கள். அவர் மாறவில்லை என்றால், நீங்கள் உங்களின் கடமையிலிருந்து விலகி செல்கிறீர்கள் என்று பொருள் அல்ல. நீங்கள் சாதாரணமாக சென்று பேசவேண்டும். என்னை போல்.. உங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன் , நான் இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எனக்கும் தெரியும், சட்டவிரோதமான உடல்உறவு கூடாது என்றும், மாமிசம் உண்ண கூடாது என்றும் நான் கூறினால் என்னை உடனே நிராகரிகரித்து விடுவார்கள் என்று" (சிரிப்பலைகள்). எனவே நான் நம்பிக்கையாக இல்லை.

பக்தர்(1): அவர்கள் அவைகளுக்கு அடிமையாகிவிட்டனர். ஆனால் அது உங்களின் தயவு நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் எப்பொழுதும் எதிர்பாரக்கவில்லை "இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று" எப்பொழுதுமே எதிர்பார்க்கவில்லை.

ஹரி சவுரி: எனவே நாம் கிருஷ்ணரை மட்டும் முழுமையாக நம்ப வேண்டும்..

பிரபுபாதா : அது மட்டும் தான் நம்முடைய வேலை..

ஹரி சவுரி: நாம் பலனை எதிர்பார்த்தால் பிறகு.. ...

பிரபுபாதா: நம்முடைய ஆன்மிக குரு சொல்லிகுடுத்த கடமைகளை நாம் செய்யவேண்டும். Guru-kṛṣṇa-kṛpāya (CC Madhya 19.151). அப்பொழுதுதான் இரண்டு பக்கத்திலிருந்தும் நன்மைகள் கிடைக்கும் .. ஆன்மிக குரு மற்றும் கிருஷ்ணரிடம் இருந்தும் அது தான் வெற்றி