TA/Prabhupada 0211 - எங்களின் குறிக்கோள் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றுவது

Revision as of 16:31, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0211 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on CC Adi-lila 1.4 -- Mayapur, March 28, 1975

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை இல்லாமல் கிருஷ்ணரை உணர்வதை நாம் நேரடியாக செய்யமுடியாது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழியாக செல்வதென்றால் ஆறு கோசுவாமிகள் மூலம் செல்லவேண்டும். இது பரம்பரை சம்பிரதாயம். எனவே நரோத்தம தாசர் தாகூர் சொல்கிறார்,

ei chay gosāi jār-tār mui dās
tā-sabāra pada-reṇu mora pañca-grās

இது பரம்பரை முறையில் வந்தது.. நீங்கள் அதை தாண்டி செல்ல இயலாது. நீங்க பரம்பரை முறையில் தான் செல்லவேண்டும். உங்களின் குரு மூலமாக கோஸ்வாமிகளை அணுக வேண்டும். கோஸ்வாமிகளின் மூலமாக நீங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அணுகமுடியும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மூலமாக கிருஷ்ணரை நெருங்க முடியும். இது தான் வழி. எனவே நரோத்தம தாசர் தாகூர் சொல்கிறார், ei chay gosāi jār-tār mui dās. நாம் வேலைக்காரனுக்கு வேலைக்காரன். இது சைதன்ய மஹாபிரபுவின் அறிவுறுத்தல் : gopī-bhartuḥ pada-kamalayor dāsa-dāsānudāsaḥ (CC Madhya 13.80). இன்னும் இன்னும் பணியாளுக்கு பணியாளாக இருந்தால் ... நீ இன்னும் இன்னும் பூரணமடைகிறாய். தீடிரென்று குருவாகவேண்டும் என்றால் நரகத்திற்கு தான் செல்லமுடியும். அதை செய்யாதே .. அது தான் சைதன்ய மஹாபிரபுவின் போதனை. பணியாட்கள் மூலம் செல்ல செல்ல, நீ முதுநிலை தேர்ச்சியை அடைவது உறுதி. இப்பொழுதே நீ குரு என்று எண்ணிக்கொண்டால் .. நீ நரகத்திற்கு தான் செல்வாய். இது தான் முறை ... Dāsa-dāsānudāsaḥ. . சைதன்ய மஹாபிரபு கூறினார். பணியாள், பணியாள் ஒரு நூறு முறை பணியாளாக இருந்தவன் முன்னேற்றம் அடைகிறான் .. முன்னேற்றம் அடைந்துவிடுகிறான். நேராக குருவாக ஆகிறவன் நரகத்தில் வாழ்கிறான்.

anarpita-carīṁ cirāt. நாம் எப்பொழுதுமே ஸ்ரீல ரூபா கோஸ்வாமி அவர்களின் அறிவுரையை நினைவில் கொள்ளவேண்டும். எனவே நம் பிரார்த்தனை, ṣrī-caitanya-mano-'bhīṣṭaṁ sthāpitaṁ yena bhū-tale. எங்களின் குறிக்கோள் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றுவது. அது தான் நம்முடைய வேலை . Śrī-caitanya-mano-'bhīṣṭaṁ sthāpitaṁ yena bhū-tale. ஸ்ரீல கோஸ்வாமி அதை செய்தார் ..அவர் நமக்கு பல புத்தகங்களை தந்துள்ளார். குறிப்பாக , பக்தி ரசாம்ருத சிந்து.. இதை நாங்கள் ஆங்கிலத்தில் "நெக்டார் ஆப் டிவோஷன்" என்று மொழிபெயர்த்துள்ளோம். பக்தி சேவையின் அறிவியலை புரிந்துகொள்ள. இது ஸ்ரீல ரூபா கோஸ்வாமியின் மிகப்பெரிய பங்களிப்பு .. பக்தனாவது எப்படி ?. பக்தனாவது எப்படி .. இது உணர்ச்சிக்கனிவு அல்ல.. இது அறிவியல். இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் ஒரு நல்ல அறிவியல். Yad vijñāna-samanvitam. Jñānaṁ me paramaṁ guhyaṁ yad vijñāna-samanvitam.. இது உணர்ச்சிகனிவு அல்ல. இதை உள்ளப்பாடாக நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் குழப்பமடைவீர்கள். இது ரூபா கோஸ்வாமியின் அறிவுரை. அவர் கூறினார் ,

śruti-smṛti-purāṇādi-
pañcarātriki-vidhiṁ vinā
aikāntikī harer bhaktir
utpātāyaiva kalpate
[Brs. 1.2.101]