TA/Prabhupada 0211 - எங்களின் குறிக்கோள் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றுவது



Lecture on CC Adi-lila 1.4 -- Mayapur, March 28, 1975

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை இல்லாமல் கிருஷ்ண உணர்வில் முன்னேற முடியாது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழியாக செல்வதென்றால், ஆறு கோசுவாமிகள் மூலம் செல்லவேண்டும். இது பரம்பரை முறை. எனவே நரோத்தம தாச தாகூர் சொல்கிறார், ஏய் சாய் கோஸாயி ஜார-தார முயி தாஸ. தா-ஸபார பத-ரேணு மோர பஞ்ச-க்ராஸ். இதுதான் சீடப்பரம்பரையின் முறை. உங்களால் தாண்டிச் செல்ல முடியாது. நீங்கள் பரம்பரையின் வழியாகத் தான் செல்லவேண்டும். தங்களது குரு மூலமாகத் தான் கோஸ்வாமிகளை அணுக வேண்டும். கோஸ்வாமிகளின் மூலமாகத் தான் உங்களால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அணுகமுடியும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மூலமாக கிருஷ்ணரை நெருங்க முடியும். இது தான் வழி. எனவே நரோத்தம தாச தாகூர் சொல்கிறார், ஏய் சாய் கோஸாயி ஜார-தார முயி தாஸ். நாம் தொண்டனுக்கு தொண்டன். அதுதான் சைதன்ய மஹாபிரபுவின் அறிவுறை : கோபி-பர்துஹு பத-கமலயோர் தாஸ-தாஸானுதாஸஹ (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 13.80). நான் அடியானுக்கு அடியான் என்ற எண்ணம் பெருக பெருக, அதே அளவுக்கு நீங்கள் பக்குவத்துவம் அடைவீர்கள். தீடிரென்று ஆச்சாரியார் ஆக முயன்றால் நரகத்திற்கு தான் செல்வீர்கள். அவ்வளவு தான். அதை செய்யாதீர்கள். அது தான் சைதன்ய மஹாபிரபுவின் கற்பித்தல். அடியான், அவருக்கு அடியான், அடுத்த அடியான் என சீடப்பரம்பரை வழியாக பணிபுரிந்தால் நீங்கள் பக்குவம் அடைவீர்கள். நான் ஏற்கனவே ஆச்சாரியார் ஆகிவிட்டேன் என்று நினைத்தால், பிறகு நரகத்திற்கு போகவேண்டியது தான். இது தான் முறை. தாஸ-தாஸானுதாஸ . சைதன்ய மஹாபிரபு கூறினார். அடியாருக்கு அடியார், அவருக்கு அடியார் என நூறு முறை தாழ்ந்த அடியாராக தம்மை எண்ணினால், அப்பொழுதே அவன் பக்குவம் அடைகிறான். அவன் முன்னேற்றம் அடைகிறான். நேராக தம்மை பெரிய ஆச்சாரியாராக கருதுபவன் நரகத்தில் வாழ்கிறான். ஆக அனர்பித-சரீம் சிராத். நாம் எப்பொழுதுமே ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் அறிவுரையை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஸ்ரீ-சைதன்ய-மனோ-பீஷ்டம் ஸ்தாபிதம் யேன பூ-தலே என நாம் பிரார்த்தனை செய்வது அதனால் தான். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றுவது தான் நம் குறிக்கோள். அது தான் நம்முடைய வேலை. ஸ்ரீ-சைதன்ய-மனோ-பீஷ்டம் ஸ்தாபிதம் யேன பூ-தலே. ஸ்ரீல ரூப கோஸ்வாமி அதை செய்தார். அவர் நமக்கு பல நூல்களை தந்திருக்கிறார். குறிப்பாக, பக்தி ரசாம்ருத சிந்து. இதை நாங்கள் ஆங்கிலத்தில் "நெக்டார் ஆஃப் டிவோஷன்" என்று மொழிபெயர்த்துள்ளோம். பக்தித்தொண்டின் விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள இது உதவும். இது ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் மிகப்பெரிய இலக்கியம். பக்தன் ஆவது எப்படி? என்பதை விளக்குகிறது. பக்தன் ஆவது எப்படி. இது உணர்ச்சி வசப்பட்டு கற்கவேண்டிய விஷயம் அல்ல; இது ஒரு விஞ்ஞானம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு பெரும் விஞ்ஞானம். யத் விஞ்ஞான-ஸமன்விதம். ஞானம் மே பரமம் குஹ்யம் யத் விஞ்ஞான-ஸமன்விதம். இது உணர்ச்சிக்கருத்தல்ல. இதை உணர்ச்சிக்கருத்தாக நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் குழப்பத்தை உண்டாக்குவீர்கள். இது ரூப கோஸ்வாமியின் அறிவுரை. அவர் கூறினார், ஷ்ருதி-ஸ்ம்ருதி-புராணாதி-பஞ்சராத்ரிகி-விதிம் வினா ஐகாந்திகீ ஹரேர் பக்திர் உத்பாதாயைவ கல்பதே (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.101).