TA/Prabhupada 0213 - மரணத்தை நிறுத்துங்கள். பிறகு உங்கள் தாந்திரிகத்தை நான் பார்க்கிறேன்.

Revision as of 16:46, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0213 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Mor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Morning Walk -- June 17, 1976, Toronto

பக்த ஜீன்: இது என் மனதில், ஒரு கேள்வியை எழுப்புகிறது. கி.பி.100 -லிருந்து தற்காலம் வரை தாந்திரிகத்தின் வரலாறு கிறித்துவத்தில் உள்ளது. இதில் சில முக்கிய தாந்திரிகர்கள் இருந்திருக்கிறார்கள். மேலும் பலப் பல முக்கியமில்லாதவர்கள் கூட இருக்கின்றனர். பிராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்கர்கள் போன்ற இந்த கிறிஸ்தவ தாந்திரீகர்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பிரபுபாதா: அது யோகத்தினால் செய்யப்படும் சித்து வேலைகள். அதற்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதாரண மக்கள் இதுபோன்ற அற்புத சித்து வேலைகளை பார்க்க விரும்புகின்றனர். எனவே இந்த தாந்திரீகர்கள், சில அற்புதங்களைக் காண்பித்து அவர்களை ஆச்சரியமடைய செய்துவிடுகிறார்கள்.

பக்த ஜீன்: ஒருகால் என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்களோ. நான் உண்மையிலேயே ஆன்மீக தாந்திரீகர்களைப் பற்றி குறிப்பிட்டேன். சிலுவையின் புனித ஜான், அசிசியின் புனித பிரான்சிஸ் போன்றவர்கள்.

பிரபுபாதா: ஆன்மீக சேவை இருந்தால், அங்கு தாந்திரிகம் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு அவசியமே இல்லை. இறைவன் தான் என் எஜமான், நான் அவரது சேவகன். இந்த அபத்தமான தாந்திரகத்தின் தேவை என்ன?

பக்த ஜீன்: இந்தத் தாந்திரிகம் என்ற பதத்தை பலரும் விளையாட்டுத்தனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன், குறிப்பாக இங்கே அமெரிக்காவில்.

பிரபுபாதா: நமக்கு அந்தப் பலரோடு எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையில் நீங்கள் இறைவனின் சேவகர் என்றால்.. உங்கள் வேலை இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமே. உங்களுக்குத் தாந்திரிகம் எதற்காகத் தேவை? மக்களுக்கு வெறுமனே மாய வித்தை காட்டவா? நீங்கள் இறைவனுக்குச் சேவை புரிகிறீர்கள். அவ்வளவுதான். அது மிக எளிய விஷயம். Man-manā bhava mad-bhakto mad-yājī māṁ namaskuru (BG 18.65). இங்கு தாந்திரிகத்திற்கு ஏது இடம்? இங்கு தாந்திரிகத்திற்கு இடமே இல்லை. இறைவன் "எப்பொழுதும் என்னைப் பற்றியே நினையுங்கள். என் மீது பக்தி செலுத்துங்கள்." என்கிறார். அவ்வளவுதான். இங்கு தாந்திரிகத்திற்கு அவசியம் என்ன? இது எல்லாம் மாய வித்தை.

இந்தியன்: அதில் ஒரு கருத்து இருப்பதாக நான் நினைக்கிறேன். பிரபுபாதா: நீங்கள் உங்கள் கருத்துப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

பிரபுபாதா: நீங்கள் அந்தக் கோணத்திற்கு வராத வரை உங்கள் சிந்தனை அர்த்தமற்றது.

இந்தியன்: இல்லை, ஐயா. அது ஒரு தவறான கருத்து, இந்தத் தாந்திரிகத்தைப் பற்றி. அவர்கள் அது ஆன்மீக முன்னேற்றத்தால் வருகிறது என்று சொல்கிறார்கள். அதைத் தான் அவர் சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

பிரபுபாதா: நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இந்த பௌதீக வாழ்வில் அடுத்தடுத்த பிறவிகளை எடுப்பது தான். நமது நோக்கம் கடவுளிடம் திரும்பிச் செல்வது. அது அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு தாந்திரிகத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் மரணத்தை நிறுத்தட்டும். அப்பொழுது உங்கள் தாந்திரிகத்தை நான் பார்க்கிறேன். என்ன இது அபத்தமான தாந்திரிகம்? உங்களால் மரணத்தை நிறுத்த முடியுமா? அது சாத்தியமா? பிறகு இந்தத் தாந்திரிகத்தின் பொருள் என்ன? எல்லாம் போலி. என் பிரச்சனை என்னவென்றால் நான் இந்த உடலையும் அதன் துன்பத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் உடம்பிற்குள் இருக்கும் வரை நான் துன்பங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். பிறகு நான் இன்னொரு உடலை சிருஷ்டிக்கிறேன். பின்னர் மரணமடைகிறேன். Tathā dehāntara-prāptiḥ (BG 2.13). மீண்டும் மற்றொரு அத்தியாயம் தொடங்குகிறது. இந்த வகையில், ஒரு புல்லாகிய ஜீவனிலிருந்து தேவர்கள் வரை, நான் வெறுமனே உடல் மட்டும் மாறிக் கொண்டு பிறந்து, பின் மடிகிறேன். இது தான் என் பிரச்சனை. ஆக இந்தத் தாந்திரிகத்தால் என்ன செய்ய முடியும்? ஆனால் அவர்களுக்கு பிரச்சினை என்ன என்று தெரியாது. இது தெளிவாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. Janma-mṛtyu-jarā-vyādhi-duḥkha-doṣānudarśanam (BG 13.9). பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தான் உங்கள் பிரச்சினை. மேலும் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை பல பிரச்சனைகள் இருக்கும். Jarā-vyādhi. குறிப்பாக முதுமை மற்றும் நோய். எனவே இது தான் பிரச்சனை. தாந்திரிகம் உங்களுக்கு எப்படி உதவும்? தாந்திரிகம் உங்கள் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோயைத் தடுத்துவிடுமா? அவ்வாறு தடுத்தால் அது அற்புதமானது. இல்லையெனில், அப்படிப்பட்ட முட்டாள் தனத்தினால் என்ன பயன். (இடைவெளி) அவர்கள் உண்மையான பாதையில் இருந்து தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் என்ன, வாழ்க்கையின் பிரச்சனை என்பது தெரியவில்லை. அவர்கள் சில அற்புதங்களை செய்து காட்டுகிறார்கள். அவர்களைப் பின்தொடர சில மூடர்கள் உள்ளனர். அவ்வளவுதான். இதுதான் அற்புதம் என்று கூறுகிறார்கள்.

இந்தியன்: பக்தர்களோடு கொள்ளும் தொடர்பு எவ்வளவு முக்கியம்?

Prabhupāda: ஆம். Satāṁ prasaṅgān mama vīrya-saṁvido bhavanti hṛt-karṇa-rasāyanāḥ kathāḥ (SB 3.25.25). எனவே சாது-சங்கம் தேவை. பக்தர்களின் தொடர்பு நமக்கு வேண்டும். அது கிடைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தாந்திரீகத்தால் அல்ல.