TA/Prabhupada 0219 - எஜமான் ஆக வேண்டும் என்ற முட்டாள்தனமான இந்த எண்ணத்தை கைவிடுங்கள்

Revision as of 17:13, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0219 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 7.9.24 -- Mayapur, March 2, 1976

உங்கள் நாட்டில் எண்பது மற்றும் தொண்ணூறு சதவிகித மக்கள் மலேரியா நோயினாலும், மேகப்புண் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டிற்கும் வேறுபாடு என்ன? ஒரு மருத்துவராக, நீங்கள் ஏன் ‘இந்த நோய்க்கு அந்த நோய் பரவாயில்லை’ என்ற வேறுபாட்டை உருவாக்குகிறீர்கள்? நோய் என்பது நோய்தான். உண்மையிலேயே அதுதான் உண்மை. “மலேரியாவில் நாம் கஷ்டப்படுகிறோம். மேகப் புண்ணில் கஷ்டப்படுவதை விட இது பரவாயில்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அப்படியல்ல. நோய் என்பது நோய்தான். இதுபோலவே, பிரம்மாவாகட்டும் அல்லது எறும்பாகட்டும், எவ்வாறு எஜமான் ஆவது என்று சிந்திப்பதே நோயாகும். இதுதான் நோய். எனவே, இதை குணப்படுத்துவதற்கு கிருஷ்ணர் வர வேண்டும், வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், “மூடர்களே, நீங்கள் எஜமானர்கள் அல்லர்; நீங்கள் என்னுடைய சேவகர்கள். என்னிடம் சரணடைவீர்களாக." இதுதான் நோய்க்கான மருந்து. ஒருவர் இனிமேல் "நான் எஜமானர் ஆவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை" என்று முடிவு செய்தால், அதுதான் நோய்க்கான மருந்தாகும். எனவே தான் பிரகலாத மஹாராஜா சொன்னது போல் , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இவ்வாறு கூறினார் "nija bhṛtya-pārśvam: (SB 7.9.24)" உங்கள் வேலைக்காரனின் வேலைக்காரனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையேதான் சைதன்ய மஹாபிரபு சொன்னார், கோபி-பஹர்துர் படா-கமலயோர் தாச-தாச அனுதஷா (சிசி மத்திய 13.80) ஆகையால் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் என்பதன் அர்த்தம் என்னவென்றால் எஜமான் ஆக வேண்டுமென்ற இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் என்பதாகும். இதுதான் கிருஷ்ண உணர்வு ஆகும். நாம் எவ்வாறு வேலைக்காரன் ஆவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். வேலைக்காரன் மட்டுமல்ல, வேலைக்காரனின் வேலைக்காரன் ஆக வேண்டும்… அதுதான் மருந்து. “ஆகையால், எஜமானன் ஆகவேண்டுமென்ற இந்த முட்டாள் தனமான எண்ணத்தை புரிந்து கொண்டேன் .” என பிரஹலாத மகாராஜா சொன்னார். எனது அப்பாவும் கூட எஜமானாக முயற்சித்தார். எனவே இது குறித்த முழு அறிவை நான் பெற்றிருக்கிறேன். எஜமானாவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. "நீங்கள் தயவாய் எனக்கு ஏதாவது ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்பினால், தயவுசெய்து என்னை தங்களின் வேலைக்காரனின் வேலைக்காரனாக்குங்கள்.” இதுதான் ஆசிர்வாதம் ஆகையால் கிருஷ்ணரின் வேலைக்காரனின் வேலைக்காரன் ஆவதற்கு கற்றுக் கொண்டவர்தான் முற்றுப்பெற்றவர் ஆவார். எனவேதான் சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், திர்நாட் அபி சுனிசேன தரார் அபி சஹிஸ்னுனா. ஒரு வேலைக்காரன் சகித்துக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள். சிலநேரங்களில் எஜமான் வேலைக்காரனிடம் அநேக வேலைகளை கட்டளையிடுகிறார், அதனால் அவன் கலக்கமடைந்து விடுகிறான். இருப்பினும், அவன் அவற்றை செய்ய வேண்டும் மற்றும் சகித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முற்றுபெற்ற நிலையாகும். இந்தியாவில் இன்றும் ஒரு நபர் திருமணம் செய்யப் போகும்போது, இது ஒரு பழக்கவழக்கமாகும். அவனுடைய அம்மா மணமகனிடம் கேட்கிறாள், “எனது அன்பு மகனே, நீ எங்கே போகிறாய்?” அவன் பதிலளிக்கிறான், “அம்மா, நான் உங்களுக்கு ஒரு வேலைக்காரியை கொண்டுவரப் போகிறேன்.” இதுதான் அங்கு உள்ள முறை ஆகும். “அம்மா, நான் உங்களுக்கு ஒரு வேலைக்காரியை கொண்டுவரப் போகிறேன்.” அதன் அர்த்தம் என்னவென்றால் “எனது மனைவி, அதாவது உங்கள் மருமகள், உங்களுக்கு வேலைக்காரியாக சேவைபுரிவாள்.” இதுதான் வேத நாகரீகம். கிருஷ்ணர் அவருடைய பதினாயிரம் மனைவிகளுடன் அஸ்தினாபுராவிற்கு சென்றார். அங்கு திரௌபதி இருந்தாள்.… தங்களுடைய கணவர் குறித்து பேசுவது பெண்ணுகளுக்கு இடையிலான இயல்பான காரியமாகும். இதுதான் இயற்கை. எனவேதான் துரோபதி கிருஷ்ணரின் ஒவ்வொரு மனைவியரிடமும் விசாரித்தாள். அனைவரிடமும் அல்ல. பதினாயிரம் பேரிடமும் விசாரிக்க முடியாது. பிரதான ராணிகளிடமிருந்து ஆரம்பித்தாள்… ருக்மணி, ஆம். ஆகையால் ஒவ்வொருவரும் “என்னுடையது இவ்வாறு இருந்தது…” என்று தங்களுடைய திருமணச் சடங்கை விவரித்துக் கொண்டிருந்தார்கள். ருக்மணி விவரித்தாள், “எனது அப்பா என்னை கிருஷ்ணரிடம் ஒப்படைக்க விரும்பினார், ஆனால் எனது மூத்த சகோதரன் ஒத்துக்கொள்ளவில்லை. நான் சிசுபாலாவை திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். எனக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. நான் கிருஷ்ணருக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினேன், அதாவது ‘நான் எனது வாழ்வை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கிறது. தயவுசெய்து வந்து என்னை கடத்திக் கொண்டு போங்கள்.’ எனவே கிருஷ்ணர் என்னை கடத்திக் கொண்டுபோய் இவ்விதமாய் அவருடைய வேலைக்காரியாக்கினார்.” ராணியின் மகள், ராஜாவின் மகள்… என அனைவரும் ராஜாவின் மகளாயிருந்தனர். அவர்கள் சாதாரண மனிதனின் மகள்களாக இல்லை. ஆனால் அவர்கள் கிருஷ்ணருக்கு வேலைக்காரியாக விரும்பினர். இதுதான் வேலைக்காரனாவதற்கும் வேலைக்காரியாவதற்குமான யோசனையாகும். இது மனித நாகரீகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அவளது கணவனின் வேலைக்காரியாக முயற்சிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணருக்கு நூறு மடங்கு வேலைக்காரனாக முயற்சிக்க வேண்டும். இதுதான் இந்திய நாகரீகம், “கணவனுக்கு மனைகவிக்கும் சம உரிமை உள்ளது” என்பது இந்திய நாகரீகம் அல்ல. ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “சம உரிமைகள்” இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது வேத நாகரீகம் அல்ல. வேத நாகரீகம் என்பது கணவனானவன் கிருஷ்ணருக்கு ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டும். மற்றும் மனைவியானவள் கணவனுக்கு ஒரு உண்மையுள்ள வேலைக்காரியாக இருக்க வேண்டும்.