TA/Prabhupada 0228 - அழிவற்ற நிலையை எப்படி அடைவது என்று உணர்ந்துகொள்

Revision as of 11:23, 13 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0228 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 2.15 -- London, August 21, 1973

அவர்களின் மாநாடு, ஐக்கிய நாடுகள் , அறிவியல் முன்னேற்றம் , கல்வி அமைப்பு ... தத்துவம் மற்றும் பல, எல்லாமே எதற்காக என்றால், இந்த இயந்திரமயமான உலகத்தில் எப்படி சந்தோஷமாக வாழ்வது என்பதை பற்றி தான் Gṛha-vratānām. நோக்கம் எதுவென்றால் , எப்படி சந்தோஷமாக இருப்பது இந்த எந்திர உலகில் அது சாத்தியம் இல்லை என்பதை அந்த மூடர்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கிருஷ்ணரிடம் சரண்புக வேண்டும். Mām upetya tu kaunteya duḥkhālayam aśāśvataṁ nāpnuvanti (BG 8.15). கிருஷ்ணர் கூறுகிறார் " ஒருவன் என்னிடம் ஒருமுறை வந்துவிட்டால், மீண்டும் கவலைகள் நிறைந்த இந்த உலகிற்கு வரமாட்டன்." Duḥkhālayam. இந்த இயந்திரமயமான உலகத்தை கிருஷ்ணர் duḥkhālayam என்று கூறுகிறார். ஆலயம் என்றால் இடம். துக்க என்றால் துயரம். இங்கே எல்லாமே துயரம் நிறைந்தது. ஆனால் மாயா சக்தியால் மறைக்கப்பட்டுள்ள மூடர்கள், இந்த துயரத்தை இன்பமென எண்ணுகின்றனர். இது வெறும் மாயை.. இது சந்தோஷம் அல்ல. ஒரு மனிதன் இரவும் பகலும் உழைக்கிறான்.. எதற்கென்றால் இவ்வாறு எழுதப்பட்ட ஒரு காகிதத்தை பெறுவதற்காக... 100 டாலர் என்று எழுதப்பட்ட காகிதப்பணத்தை பெறுவதற்காக. இல்லையா? நான் கடவுளை நம்புகிறேன் . நான் சத்தியம் செய்கிறேன் உனக்கு பணம் செலுத்த . இந்த காகிதத்தை எடுத்துக்கொள். ஒரு சென்ட் மதிப்பு கூட இல்லாதது.. ஆனால் 100 டாலர் என்று எழுதி இருக்கிறது. நான் என்ன நினைத்துக்கொள்கிறேன் என்றால், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக .. எனக்கு பணம் வந்துவிட்டது என்று. அவ்வளவு தான் .. ஏமாற்றுபவர்கள் , ஏமாறுகிறவர்கள் .. இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே நாம் இந்த இயந்திரமயமான உலகத்தின் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டு கலங்கிவிட கூடாது. கிருஷ்ண உணர்வை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி நம் எண்ணங்கள் இருக்க வேண்டும். எப்படி செயல்படுத்துவது. சைதன்ய மகாபிரபு இதற்கு ஒரு சிறந்த சூத்திரம் கொடுத்துள்ளார் : harer nāma harer nāma harer

harer nāma harer nāma harer nāmaiva kevalam
kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
(CC Adi 17.21)

இந்த கலியுகத்தில், உங்களால் துறவறத்தையோ அல்லது நோன்புகளையோ கடைபிடிக்க இயலாது. ஹரே கிருஷ்ணா நாமத்தை ஜெபியுங்கள். அதையும் நம்மால் செய்ய முடிவதில்லை. நாம் எவ்வளவு துரதிருஷ்ட வசமானவர்கள். இது தான் கலியுகத்தின் நிலைமை Mandāḥ sumanda-matayo manda-bhāgyā upadrutāḥ (SB 1.1.10). அவர்கள் படுபாவிகள் .. மண்டா . மண்டா என்றால் தீயது என்று பொருள். And sumanda-matayaḥ..அவர்கள் எதையாவது மேம்படுத்த நினைத்தால், யாரோ ஒரு முட்டாளை கூட குருவாக ஏற்றுக்கொள்வார்கள். Mandāḥ sumanda-matayaḥ. அங்கீகாரம் இல்லாத ஒரு கூட்டம் அதை சரி என்று ஏற்றுக்கொண்டு நன்றாக இருக்கின்றது என்று புகழ்வர். எனவே, இவர்கள் எல்லாருமே தீயவர்கள் .. இவர்கள் ஏற்றுக்கொள்ளும் அனைத்தும் தீயவை. ஏன்? துரதிஷ்டம் . Mandāḥ sumanda-matayo manda-bhāgyāḥ (SB 1.1.10). Manda-bhāgyāḥ என்றால் துரதிஷ்டம். அதற்கும் மேல் upadrutāḥ. வட்டி, வரி போன்றவற்றால் தொந்தரவுகள், மழை இல்லாமை, உணவு பற்றாக்குறை, இது போல் பல. இது தான் கலியுகத்தின் நிலைமை. எனவே சைதன்ய மகாபிரபு சொன்னார்... அவர் மட்டும் சொல்லவில்லை. வேதம் சொல்கிறது.. யோகா போன்றவற்றை செய்ய முடியாது. தியானம், பெரிய தானங்களை செய்யவது, பெரிய தியாகங்களை செய்வது, இறைவனை பூஜிக்க பெரிய பெரிய கோவில்களை கட்டுவது. இந்த காலத்தில் அது மிக மிக கடினம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ... ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே என்று கடவுளின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருங்கள். படிப்படியாக நீங்களே அழிவற்ற நிலையை பெறுவது பற்றி புரிந்துகொள்வீர்கள் ..மிக்க நன்றி..