TA/Prabhupada 0228 - அழிவற்ற நிலையை எப்படி அடைவது என்று உணர்ந்துகொள்



Lecture on BG 2.15 -- London, August 21, 1973

ஆக அவர்களின் மாநாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அறிவியல் முன்னேற்றம், கல்வி அமைப்பு, தத்துவம், இப்படி பல விஷயங்கள் அனைத்துமே இந்த பௌதிக உலகில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்காகத் தான். க்ரிஹ-வ்ரதானாம். இந்த உலகில் எப்படி இன்பம் பெறுவது என்பது தான் நோக்கம். அது சாத்தியம் இல்லை. இதை அந்த மூடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் கிருஷ்ணரிடம் வந்தே ஆகவேண்டும். மாம் உபேத்ய து கௌந்தேய துக்காலயம் அஷாஷ்வதம் நாப்னுவந்தி (பகவத் கீதை 8.15). கிருஷ்ணர் கூறுகிறார், "ஒருவன் என்னிடம் ஒருமுறை வந்துவிட்டால், துக்கம் நிறைந்த இந்த உலகிற்கு அவன் மீண்டும் திரும்புவதில்லை." துக்காலயம். இந்த ஜட உலகை கிருஷ்ணர் துக்காலயம் என்று கூறுகிறார். ஆலயம் என்றால் இடம், மற்றும் துக்க என்றால் துயரம். இங்கு எல்லாமே துயரம் நிறைந்தது தான். ஆனால் மாயா சக்தியின் மயக்கத்திலுள்ள மூடர்கள், இந்த துயரத்தை இன்பமாக கருதுகிறார்கள். இது வெறும் மாயை. இது இன்பமே கிடையாது. ஒரு மனிதன் இரவும் பகலும் உழைக்கிறான். எதற்காக? "எங்களுக்கு இறைவன்மீது நம்பிக்கை உண்டு. இந்த காகிதத்தை பெற்றுக்கொள், இந்தா நூறு டாலர். நீ ஒரு ஏமாளி." என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை பெறுவதற்காக. இல்லையா? "கடவுளின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நான் உனக்கு இதன் மதிப்பை செலுத்த கடமை பட்டிருக்கிறேன். இப்போதைக்கு இந்த காகிதத்தை பெற்றுக்கொள்." ஒரு பைசா கூட மதிப்பில்லாத காகிதம். ஆனால் நூறு டாலர் என்று எழுதப்பட்டிருக்கிறது. "ஆகா எனக்கு இந்த காகிதம் கிடைத்திருக்கிறது." நான் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்துவிட்டேன் என நினைக்கிறோம். அவ்வளவு தான். ஏமாற்றுக்காரர்களும் ஏமாளிகளும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் இந்த பௌதிக உலகத்தின் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டு பாதிப்படைய கூடாது. கிருஷ்ண பக்தியை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். எப்படி செயல்படுத்துவது? சைதன்ய மகாபிரபு இதற்கு ஒரு சுலபமான வழிமுறையை வழங்கியிருக்கிறார்: ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி எவ நாஸ்தி எவ நாஸ்தி எவ கதிர் அன்யதா (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21) இந்த கலியுகத்தில், உங்களால் கடும் தவங்களையோ, நோன்புகளையோ கடைபிடிக்க முடியாது. ஹரே கிருஷ்ண நாமத்தை ஜெபித்தால் போதும். அதையும் நம்மால் செய்ய முடிவதில்லை. போதுமா? நாம் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள். இது தான் கலியுகத்தின் நிலைமை. மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்ய உபத்ருதாஹா (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). அவர்கள் அயோக்கியர்கள், மந்த. மந்த என்றால் மிகவும் மோசமான, மந்த. மற்றும் சுமந்த-மதயஹ. அதாவது அவர்கள் எதையாவது மேம்படுத்த நினைத்தால், யாரோ ஒரு அயோக்கிய குருஜி மகாராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். மந்தாஹா சுமந்த-மதயஹ. மக்களுக்கு சாஸ்திரங்களிலிருந்து முறையாக எதுவும் வழங்காத ஒருவனை: "ஆகா எவ்வளவு நல்லவர்," என அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆக முதலில் இவர்கள் எல்லாருமே மோசமானவர்கள், மேலும் இவர்கள் ஏதாவது ஏற்றுக்கொண்டால் அதுவும் மோசமானதாகத் தான் இருக்கும். ஏன்? துரதிருஷ்டசாலிகள். மந்தாஹா சுமந்த-மதயோ மந்த-பாக்யாஹா (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). மந்த-பாக்யாஹா என்றால் துரதிஷ்டசாலிகள். அதற்கும் மேல் உபத்ருதாஹா. கடுமையான வரி கட்டணங்கள், வறட்சி, உணவு பஞ்சம் இப்படி பல விஷயங்களால் எப்பொழுதும் துன்பப்படுகிறார்கள். இது தான் கலியுகத்தின் நிலைமை. எனவே சைதன்ய மகாபிரபு சொன்னார்... சைதன்ய மகாபிரபு அல்ல. அது வேத இலக்கியங்களில் இருக்கிறது. அதாவது உங்களால் இந்த யுகத்தில் யோக பயிற்சியோ, தியானமோ, பெரிய பெரிய யாக யஞ்யங்களையோ செய்யமுடியாது, கடவுளை வழிபடுவதற்கு பெரிய பெரிய கோயில்களையும் கட்ட முடியாது. இந்த காலத்தில் அது மிக மிக கடினமான காரியம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே என்று ஜெபித்தாலே போதும், பிறகு படிப்படியாக நீங்களே அழிவற்ற நிலையை பெறுவது எப்படி என்பதை புரிந்துகொள்வீர்கள். மிக்க நன்றி.