TA/Prabhupada 0231 - பகவான் என்பவர் முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0231 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Germany]]
[[Category:TA-Quotes - in Germany]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0230 - வேத கால அடிப்படையில் நான்கு வகையான சமுதாயம் இருந்தது|0230|TA/Prabhupada 0232 - கடவுளுக்கு கூட பொறாமை குணம் கொண்ட எதிரிகள் உள்ளனர்.. அவர்களை அரக்கர்கள்என்று கூறுவோம்|0232}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|hGFUWwUNLqk|பகவான் என்பவர் முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்<br />- Prabhupāda 0231}}
{{youtube_right|Dv56ArqPmiU|பகவான் என்பவர் முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்<br />- Prabhupāda 0231}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/740616BG.GER_clip2.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/740616BG.GER_clip2.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
 
கிருஷ்ணர், மெய்ஞானத்தில் அதிகாரம் வாய்ந்தவர்களால் பகவானாக, அதாவது  முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். மேலும் பகவான் என்பவர் யார்? பகவான் என்பவர், ஆறு வகையான செல்வங்கள் அனைத்திற்கும் ஒரே சொந்தக்காரர். அனைத்து ஐசுவரியங்களுக்கும் ஒரே சொந்தக்காரர் என்றால் பகவானைப் போன்ற செல்வந்தர் யாரும் கிடையாது. கடவுள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். சிறிதளவு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்ட நாமே இவ்வளவு பெருமை படுகிறோம், ஆனால் கடவுள் இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தக்காரர். எனவே, அவர் மீப்பெரிய செல்வந்தர். அதுபோலவே அவரைவிட வலிமை வாய்ந்தவர் யாரும் கிடையாது. அவரே மீப்பெரு விவேகமுள்ளவர். மற்றும் அதுபோலவே அவர் மிகச்சிறந்த அழகானவர். இப்பேர்ப்பட்ட மீப்பெரு செல்வந்தரை, அழகரை, விவேகமுள்ளவரை, வலிமை வாய்ந்தவர் ஒருவரை நீங்கள் கண்டுபிடித்தால் - அவர் தான் பகவான், கடவுள். கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரித்திருந்தபொழுது அவரே இந்த ஆறு ஐசுவர்யங்களுக்கும் சொந்தக்காரர் என்பதை நிரூபித்தார். உதாரணத்திற்கு, அனைவரும் திருமணம் செய்துகொள்வார்கள், ஆனால் கிருஷ்ணர் 16,108 பெண்களை மணந்தார். அவர் அந்த 16,108 மனைவிகளுக்கும் ஒரே ஆளாக தோற்றம் அளிக்கவில்லை. அவர் 16,108 மனைவிகளுக்கும் தனித் தனியாக மாளிகைகளை அமைத்துக்கொடுத்தார். ஒவ்வொரு மாளிகையும், சிறந்த பளிங்கு கற்களாலும், அறைகலன் எல்லாம் தந்தத்தினாலும், மற்றும் ஆசனங்கள் மென்மையான பஞ்சால் செய்யப்பட்டவை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வெளிப்புறம் பூமரங்களால் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் தன்னை பதினாறாயிரம் கிருஷ்ணர்களாக விரிவாக்கம் செய்துகொண்டார். இவ்வாறு அவர் ஒவ்வொரு மனைவியுடனும் வாழ்ந்தார். இது கடவுளுக்கு கஷ்டமான காரியம் ஒன்றும் அல்ல. கடவுள் எங்கும் இருக்கின்றார். நம் பார்வைக்கு அவர் பதினாறாயிரம் வீடுகளில் தோன்றினால் அவருக்கு அதில் என்ன கடினமாக இருக்க போகிறது? ஆக இங்கு கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஸ்ரீ பகவான் உவாச. மீப்பெரு சக்தி வாய்ந்த அதிகாரி பேசுகிறார். எனவே அவர் என்ன சொன்னாலும் அதை சத்தியம் என்று தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த பௌதிகத்தால் கட்டுண்ட வாழ்வில், நம்மிடம் நான்கு வகையான குறைபாடுகள் உள்ளன : நாம் தவறுகள் செய்யக்கூடியவர்கள், நாம் மாயைக்கு வசப்பட்டவர்கள், நாம் ஏமாற்ற விரும்புவர்கள், நம் புலன்கள் குறையுற்றவை. இந்த நான்கு விதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெற்ற அறிவும் குறையுள்ளதாகத் தான் இருக்கும். இந்த நான்கு வகையான குறைபாடுகளை கடந்த நிலையில் உள்ளவரிடம் பெற்ற அறிவு தான் பிழையற்ற அறிவாகும். நவீன விஞானிகள் சொந்த கோட்பாடுகளை கூறுகிறார்கள், " இது அப்படி இருக்கலாம், அது இப்படி இருக்கலாம்," ஆனால் அது பிழையற்ற ஞானம் அல்ல. குறையுள்ள புலன்களால் ஊகித்தால், அப்பேர்பட்ட ஞானத்திற்கு என்ன மதிப்பு? அந்த ஞானம் ஓரளவுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் அது முழுமையான ஞானம் அல்ல. எனவே பிழையற்ற ஒரு நபரிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வது தான் நாம் அறிவை அடையும் முறை. ஆகவே நாம் கிருஷ்ணரிடமிருந்து அறிவை பெறுகிறோம். அந்த அறிவு முழுமையானது, பிழையற்றது. ஒரு குழந்தையைப் போல் தான். அவனுக்கு அறிவு பத்தாமல் இருக்கலாம், ஆனால் அவன் தந்தை, "என் அன்பு மகனே, இது தான் கண்ணாடி," என்று கூறினால், பிறகு அந்த குழந்தை "இது கண்ணாடி" என்று கூறினால், அந்த அறிவு பிழையற்றது. ஏனெனில் அந்த குழந்தை அந்த அறிவைப் பெற சொந்த ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. அந்த சிறுவன், தாயிடமோ அல்லது தந்தையிடமோ,"அது என்ன அப்பா? இது என்ன அம்மா?"  என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வான். அதற்கு அந்த தாயும், "மகனே, இது இப்படி." என்று சொல்லித் தருவாள். இன்னோரு உதாரணமும் சொல்லலாம். ஒரு குழந்தைக்கு, தன் தந்தை யார் என்று தெரியாமல் இருந்தால், அவனால் அதை சொந்தமாக ஆராய்ந்து அறிய முடியாது. அவன் தன் தந்தை யார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க முயன்றால், அவனால் தன தந்தையை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், "என் தந்தை யார்?" என்று அவன் தன் தாயிடம் கேட்டால், அதற்கு "இவர் தான் உன் தந்தை," என்று அவள் கூறினால், அது தான் சரியான அறிவு. ஆக, கடவுளைப் பற்றிய அறிவு நம்முடைய புலன்களுக்கு எட்டாத விஷயம். பிறகு அதை உங்களால் எப்படி ஆராய்ந்து அறிய முடியும்? எனவே, அந்த அறிவை கடவுளிடமிருந்து நேரடியாகவோ அல்லது அவருடைய பிரதிநிதியிடமிருந்தோ பெற்றுக்கொள்ளவேண்டும். ஆக இங்கு பரமபுருஷரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரே பேசுகிறார். அது தான் இறுதிச்சொல். அதற்கு மறுபேச்சே கிடையாது. அவர் அர்ஜுனரிடம் பின்வருமாறு கூறுகிறார். அவர் சொல்கிறார், அஷோசயன் அன்வஷோசஸ் த்வம் ப்ரஞா-வாதாம்ஸ் ச பாஷஸேஹே ([[Vanisource:BG 2.11 (1972)|பகவத் கீதை 2.11]]). "அன்பு அர்ஜுனா! நீ பெரிய அறிவாளியைப் போல் பேசுகிறாய், வருந்தக்கூடாத ஒரு விஷயத்தைப் பற்றி நீ வருத்தப்படுகிறாய்." கதாசூன் அகதாசூம்ஸ் ச நானுஷோசந்தி  பண்டிதஹ.
கிருஷ்ணர், அங்கீகரிக்கப்பட்ட சாதுக்களால் பகவானாக அல்லது முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பகவான் என்பவர் யார். பகவான் என்பவர், ஆறு வகையான ஐஸ்வர்யங்களை உள்ளடக்கியவர். அனைத்து ஐஸ்வர்யங்களை கொண்டுள்ளவர் என்றால் அவர் தான் மிகப் பெரிய செல்வந்தர். கடவுள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று நம்மால் புரிந்து கொள்ளமுடியும். சிறிது நிலங்களை வைத்திருக்கும் நாமே இத்தனைபெருமை கொள்ளும்போது.. கடவுள் இந்த பிரபஞ்சத்தையே ஆள்பவர். எனவே, பகவானே மிகப் பெரிய செல்வந்தர். மிக அதிக வலிமையானவர். அவரே மிகுந்த விவேகமுள்ளவர். மற்றும் அவரே மிகவும் அழகானவர். இந்த வகையில் , ஒருவர் மிகப் பெரிய செல்வந்தராகவும், மிகவும் அழகாகவும், மிகுந்த விவேகம் உள்ளவராகவும் மற்றும் மிகுந்த பலமானவராகவும் ஒருவரைக் கண்டுபிடித்தால்.. அவரே கடவுள் ஆவார். கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரித்திருந்தபொழுது அவரிடம் இந்த ஆறு ஐஸ்வர்யங்களும் நிரம்பி இருந்தன. உதாரணத்திற்கு, அனைவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் 16,108 பெண்களை திருமணம் செய்துகொண்டார். அவர் ஒரு ஆளாக 16,108 பெண்களுக்கும் கணவனாக இருந்தார் என்று பொருள் அல்ல. அவர் 16,108 மனைவிகளுக்கும் தனி தனியாக மாளிகைகள் அமைத்துக்கொடுத்தார். ஒவ்வொரு மாளிகையும், முதல் ரக பளிங்கு கற்களாலும், வீட்டு உபயோக பொருட்கள் யானை தந்தங்களாலும் செய்யப்பட்டது. அரியணைகள் மென்மையான பஞ்சு கொண்டு செய்யப்பட்டது. இவ்வாறாக விவரிக்கப்படுகிறது. மற்றும் வெளிப்புற இடங்கள், பூமரங்களால் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் 16108 கிருஷ்ணர்களாக தன்னை விரித்துக்கொண்டார். இவ்வாறு அவர் ஒவ்வொரு மனைவியுடனும் வாழ்ந்தார். இது கடவுளுக்கு கஷ்டமான காரியம் அல்ல. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கின்றார். நம் பார்வைக்கு அவர் 16000 இடங்களில் இருக்கிறார் என்றால்.. அவருக்கு அதில் என்ன கடினமாக இருக்கபோகிறது? எனவே இதில் சொல்லப்பட்டது śrī-bhagavān uvāca. முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எனவே அவர் என்ன சொன்னாலும் அதை சத்தியம் என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த நிர்பந்தமான வாழ்வில், நம்மிடம் நான்கு வகையான குறைபாடுகள் இருக்கின்றன. நாம் தவறுகள் செய்கிறோம், நாம் மாயையால் பாதிக்கப்பட்டுள்ளோம், நாம் ஏமாற்றுகிறோம், நம் புலன்கள் குறையுள்ளவை. இதை போல் குறைபாடுகள் உள்ள ஒருவரிடமிருந்து பெறப்படும் அறிவு நிறைவான அறிவு அல்ல. இந்த நான்கு வகையான குறைபாடுகளை கடந்த நிலையில் உள்ளவரிடம் பெறப்படும் அறிவு சிறந்தது. நவீன அறிவியல் வல்லுநர்கள் சொல்வது போல " இது அப்படி இருக்கலாம், இது இப்படி இருக்கலாம் " என்று சொல்வதெல்லாம் சரியான அறிவு அல்ல. குறையுள்ள புலன்களால் ஆராயப்படும் அறிவு எவ்வாறு முழுமையான அறிவாக இருக்க முடியும்? இந்த அறிவு ஒரு சிறு பகுதியாக தான் இருக்குமே ஒழிய, முழு அறிவாக இருக்காது. எனவே நாம் சரியான நபரிடமிருந்து அறிவைப் பெறுவதே சிறந்தது. எனவே நாம் கிருஷ்ணரிடமிருந்து அறிவை பெறுகிறோம். அந்த அறிவு முழுமையானது. ஒரு குழந்தையை போல. குழந்தைக்கு முழுமையான அறிவு இருக்காது. ஆனால் அதன் தந்தை இது தான் கண்ணாடி என்று கூறினால்.. பிறகு அந்த குழந்தை "இது கண்ணாடி" என்று கூறுகிறது. இந்த அறிவு சிறந்தது. ஏனெனில் அந்த குழந்தை ஆராய்ந்து பார்ப்பதில்லை. அது தாயிடமோ அல்லது தந்தையிடமோ அது என்ன இது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்கிறது. மற்றும் தாயானவள் குழந்தையிடம் , இது என்ன என்று சொல்லி தருகிறார். இன்னோரு உதாரணமும் சொல்லலாம். குழந்தைக்கு, குழந்தை பருவத்தில் இருக்கும்போது... அதனின் தந்தை யார் என்று தெரியாமல் இருந்தால் அதனால் எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட முடியாது. அது தன் தந்தை யார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அது தாயிடம், தன் தந்தை யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது. இது உண்மையான அறிவாக இருக்கும். எனவே, கடவுளை பற்றிய அறிவு என்பது நம்முடைய புலன்களின் அறிவிற்கு எட்டாதது என்பதால், நம்மால் எவ்வாறு அறிய முடியும். எனவே, நாம் கடவுளிடமிருந்து நேரடியாக அந்த அறிவை பெறவேண்டும். அல்லது அவருடைய பிரதிநிதியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். எனவே இங்கு கிருஷ்ணர் கூறுவதையே அதிகாரப்பூர்வமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறுகிறார். அவர் சொல்கிறார் aśocyān anvaśocas tvaṁ prajñā-vādāṁś ca bhāṣase: ([[Vanisource:BG 2.11|BG 2.11]]). "அன்பு அர்ஜுனா! அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில்... கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய்." Gatāsūn agatāsūṁś ca nānuśocanti paṇḍitāḥ. Gatāsūn என்றால் இந்த உடல். இருக்கும்போதும் சரி, இறக்கும்போதும் சரி. ஜட எண்ணத்துடன் இருப்பது முட்டாள்தனமாகும். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை. வேதத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் "எவன் ஒருவன் புலனின்ப வாழ்க்கையில் மூழ்கி உள்ளானோ, அவன் மிருகத்திற்கு ஒப்பாவான்." தற்போது , ஆத்ம ஞானம் இல்லாமல் இந்த உலகமே புலனின்ப வாழ்க்கையில் மூழ்கி உள்ளது. புலனின்ப வாழ்க்கை என்பது, மிருகங்களிடத்தும் உள்ளது. நாய்களும் பூனைகளும் , பெரியனவாக வளர்வதில் மிகுந்த பெருமை கொள்கின்றன. இதைப் போலவே மனிதனும் தான் ஒரு பெரிய அமெரிக்கன் என்றோ அல்லது பெரிய ஜெர்மானியன் என்றோ பெருமை கொண்டால், அவற்றிற்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நாம் நாய்களைப் போலவும், பூனைகளைப் போலவும் சண்டை போடுகிறோம்.  
கதாசூன் என்றால் இந்த உடல். உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்பது  முட்டாள்தனமாகும். ஆக நன்கு கற்றவன் எவனும் இந்த உடலுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்க மாட்டான். எனவே வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், "யாரொருவன் உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறானோ, அவன் வெறும் ஒரு மிருகத்திற்கு சமமானவன்." தற்போது , ஆத்ம ஞானம் இல்லாமல் இந்த உலகமே உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறது. மிருகங்களை பொறுத்தவரை, வாழ்க்கைக்கு அடிப்படையானது இந்த உடல் தான். நாய்களும் பூனைகளும், ஒரு பெரிய நாயாகவோ ஒரு பெரிய பூனையாகவோ வளர்ந்தால் அதை பெருமையாக கருதும். இதைப் போலவே மனிதனும், "நான் ஒரு பெரிய அமெரிக்கன்", "பெரிய ஜெர்மன்," "பெரிய இன்னார்," என்று பெருமைப் பட்டால், அவனுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது, மேலும் அவர்கள் நாய்களையும் பூனைகளையும் போல் சண்டை போடுகிறார்கள். நாளை நாம் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவோம்.  
 
இதை நாம் நாளை விவாதிப்போம் ..
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:44, 29 June 2021



Lecture on BG 2.1-5 -- Germany, June 16, 1974

கிருஷ்ணர், மெய்ஞானத்தில் அதிகாரம் வாய்ந்தவர்களால் பகவானாக, அதாவது முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். மேலும் பகவான் என்பவர் யார்? பகவான் என்பவர், ஆறு வகையான செல்வங்கள் அனைத்திற்கும் ஒரே சொந்தக்காரர். அனைத்து ஐசுவரியங்களுக்கும் ஒரே சொந்தக்காரர் என்றால் பகவானைப் போன்ற செல்வந்தர் யாரும் கிடையாது. கடவுள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். சிறிதளவு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்ட நாமே இவ்வளவு பெருமை படுகிறோம், ஆனால் கடவுள் இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தக்காரர். எனவே, அவர் மீப்பெரிய செல்வந்தர். அதுபோலவே அவரைவிட வலிமை வாய்ந்தவர் யாரும் கிடையாது. அவரே மீப்பெரு விவேகமுள்ளவர். மற்றும் அதுபோலவே அவர் மிகச்சிறந்த அழகானவர். இப்பேர்ப்பட்ட மீப்பெரு செல்வந்தரை, அழகரை, விவேகமுள்ளவரை, வலிமை வாய்ந்தவர் ஒருவரை நீங்கள் கண்டுபிடித்தால் - அவர் தான் பகவான், கடவுள். கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரித்திருந்தபொழுது அவரே இந்த ஆறு ஐசுவர்யங்களுக்கும் சொந்தக்காரர் என்பதை நிரூபித்தார். உதாரணத்திற்கு, அனைவரும் திருமணம் செய்துகொள்வார்கள், ஆனால் கிருஷ்ணர் 16,108 பெண்களை மணந்தார். அவர் அந்த 16,108 மனைவிகளுக்கும் ஒரே ஆளாக தோற்றம் அளிக்கவில்லை. அவர் 16,108 மனைவிகளுக்கும் தனித் தனியாக மாளிகைகளை அமைத்துக்கொடுத்தார். ஒவ்வொரு மாளிகையும், சிறந்த பளிங்கு கற்களாலும், அறைகலன் எல்லாம் தந்தத்தினாலும், மற்றும் ஆசனங்கள் மென்மையான பஞ்சால் செய்யப்பட்டவை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வெளிப்புறம் பூமரங்களால் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் தன்னை பதினாறாயிரம் கிருஷ்ணர்களாக விரிவாக்கம் செய்துகொண்டார். இவ்வாறு அவர் ஒவ்வொரு மனைவியுடனும் வாழ்ந்தார். இது கடவுளுக்கு கஷ்டமான காரியம் ஒன்றும் அல்ல. கடவுள் எங்கும் இருக்கின்றார். நம் பார்வைக்கு அவர் பதினாறாயிரம் வீடுகளில் தோன்றினால் அவருக்கு அதில் என்ன கடினமாக இருக்க போகிறது? ஆக இங்கு கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஸ்ரீ பகவான் உவாச. மீப்பெரு சக்தி வாய்ந்த அதிகாரி பேசுகிறார். எனவே அவர் என்ன சொன்னாலும் அதை சத்தியம் என்று தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த பௌதிகத்தால் கட்டுண்ட வாழ்வில், நம்மிடம் நான்கு வகையான குறைபாடுகள் உள்ளன : நாம் தவறுகள் செய்யக்கூடியவர்கள், நாம் மாயைக்கு வசப்பட்டவர்கள், நாம் ஏமாற்ற விரும்புவர்கள், நம் புலன்கள் குறையுற்றவை. இந்த நான்கு விதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெற்ற அறிவும் குறையுள்ளதாகத் தான் இருக்கும். இந்த நான்கு வகையான குறைபாடுகளை கடந்த நிலையில் உள்ளவரிடம் பெற்ற அறிவு தான் பிழையற்ற அறிவாகும். நவீன விஞானிகள் சொந்த கோட்பாடுகளை கூறுகிறார்கள், " இது அப்படி இருக்கலாம், அது இப்படி இருக்கலாம்," ஆனால் அது பிழையற்ற ஞானம் அல்ல. குறையுள்ள புலன்களால் ஊகித்தால், அப்பேர்பட்ட ஞானத்திற்கு என்ன மதிப்பு? அந்த ஞானம் ஓரளவுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் அது முழுமையான ஞானம் அல்ல. எனவே பிழையற்ற ஒரு நபரிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வது தான் நாம் அறிவை அடையும் முறை. ஆகவே நாம் கிருஷ்ணரிடமிருந்து அறிவை பெறுகிறோம். அந்த அறிவு முழுமையானது, பிழையற்றது. ஒரு குழந்தையைப் போல் தான். அவனுக்கு அறிவு பத்தாமல் இருக்கலாம், ஆனால் அவன் தந்தை, "என் அன்பு மகனே, இது தான் கண்ணாடி," என்று கூறினால், பிறகு அந்த குழந்தை "இது கண்ணாடி" என்று கூறினால், அந்த அறிவு பிழையற்றது. ஏனெனில் அந்த குழந்தை அந்த அறிவைப் பெற சொந்த ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. அந்த சிறுவன், தாயிடமோ அல்லது தந்தையிடமோ,"அது என்ன அப்பா? இது என்ன அம்மா?" என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வான். அதற்கு அந்த தாயும், "மகனே, இது இப்படி." என்று சொல்லித் தருவாள். இன்னோரு உதாரணமும் சொல்லலாம். ஒரு குழந்தைக்கு, தன் தந்தை யார் என்று தெரியாமல் இருந்தால், அவனால் அதை சொந்தமாக ஆராய்ந்து அறிய முடியாது. அவன் தன் தந்தை யார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க முயன்றால், அவனால் தன தந்தையை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், "என் தந்தை யார்?" என்று அவன் தன் தாயிடம் கேட்டால், அதற்கு "இவர் தான் உன் தந்தை," என்று அவள் கூறினால், அது தான் சரியான அறிவு. ஆக, கடவுளைப் பற்றிய அறிவு நம்முடைய புலன்களுக்கு எட்டாத விஷயம். பிறகு அதை உங்களால் எப்படி ஆராய்ந்து அறிய முடியும்? எனவே, அந்த அறிவை கடவுளிடமிருந்து நேரடியாகவோ அல்லது அவருடைய பிரதிநிதியிடமிருந்தோ பெற்றுக்கொள்ளவேண்டும். ஆக இங்கு பரமபுருஷரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரே பேசுகிறார். அது தான் இறுதிச்சொல். அதற்கு மறுபேச்சே கிடையாது. அவர் அர்ஜுனரிடம் பின்வருமாறு கூறுகிறார். அவர் சொல்கிறார், அஷோசயன் அன்வஷோசஸ் த்வம் ப்ரஞா-வாதாம்ஸ் ச பாஷஸேஹே (பகவத் கீதை 2.11). "அன்பு அர்ஜுனா! நீ பெரிய அறிவாளியைப் போல் பேசுகிறாய், வருந்தக்கூடாத ஒரு விஷயத்தைப் பற்றி நீ வருத்தப்படுகிறாய்." கதாசூன் அகதாசூம்ஸ் ச நானுஷோசந்தி பண்டிதஹ. கதாசூன் என்றால் இந்த உடல். உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்பது முட்டாள்தனமாகும். ஆக நன்கு கற்றவன் எவனும் இந்த உடலுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்க மாட்டான். எனவே வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், "யாரொருவன் உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறானோ, அவன் வெறும் ஒரு மிருகத்திற்கு சமமானவன்." தற்போது , ஆத்ம ஞானம் இல்லாமல் இந்த உலகமே உடலை அடிப்படையாகக் கருதி வாழ்க்கையை வாழ்கிறது. மிருகங்களை பொறுத்தவரை, வாழ்க்கைக்கு அடிப்படையானது இந்த உடல் தான். நாய்களும் பூனைகளும், ஒரு பெரிய நாயாகவோ ஒரு பெரிய பூனையாகவோ வளர்ந்தால் அதை பெருமையாக கருதும். இதைப் போலவே மனிதனும், "நான் ஒரு பெரிய அமெரிக்கன்", "பெரிய ஜெர்மன்," "பெரிய இன்னார்," என்று பெருமைப் பட்டால், அவனுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது, மேலும் அவர்கள் நாய்களையும் பூனைகளையும் போல் சண்டை போடுகிறார்கள். நாளை நாம் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவோம்.