TA/Prabhupada 0232 - கடவுளுக்கு கூட பொறாமை குணம் கொண்ட எதிரிகள் உள்ளனர்.. அவர்களை அரக்கர்கள்என்று கூறுவோம்

Revision as of 11:52, 13 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0232 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

பிரத்யும்னா: "மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல். உலக இலாபங்களை விரும்பும்போதிலும், அவர்கள் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருக்கும்."

பிரபுபாதா: எனவே அர்ஜுனரின் முதல் பிரச்னை தன் இனத்தவரையே, தன் குடும்பத்தாரையே எப்படி கொல்வது என்பது தான். கிருஷ்ணர் ஒரு நண்பராக அர்ஜுனனை கடிந்து கொள்கிறார். "நீ இவ்வளவு பலவீனமாக இருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்கிறார். பலவீனம் அடையாதே. இது மனத்தளர்ச்சி . இந்த வகையான இரக்கம் மனத்தளர்ச்சி எனப்படும். Uttiṣṭha. நீ எழுந்து போராடு. பொதுவாக நாம் ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்தால் நிறைய நொண்டிச் சாக்குகளை சொல்லுவோம். அவ்வாறு அர்ஜுனனும் தனது குருவை நொண்டிச் சாக்காக சொல்கிறான். உண்மை தான் கிருஷ்ணா. என்னுடைய பலவீனம் என் உறவுகள்தான். ஆனால் எனது குருவையும் நான் கொல்ல வேண்டும் என்று எவ்வாறு எனக்கு அறிவுறுத்துகிறாய்? துரோணாச்சார்யார் என் குரு. பீஷ்மரும் எனது குரு. என் குருதேவரை கொல்ல சொல்கிறாயா? Gurūn hi hatvā. சாதாரண குரு அல்ல. இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. மகாத்மாக்கள். பீஷ்மர் சிறந்த பக்திமான். அதே போல் துரோணாச்சாரியாரும் நல்ல மனிதர். மகாத்மா. kathaṁ bhīṣmam ahaṁ saṅkhye droṇaṁ ca madhusūdana (BG 2.4). "எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்?" கிருஷ்ணர் மது சூதனன் என்று அழைக்கப்படுகிறார். மது சூதனன் என்றால்.. மது என்பவன் ஒரு அரக்கன். கிருஷ்ணர் அவனை கொல்கிறார். "நீ மதுசூதனன் .. நீ எதிரிகளை கொன்றிருக்கிறாய்.. குருவை கொன்றதாக உதாரணம் ஏதாவது உள்ளதா?." "ஏன் என்னை மட்டும் இதை செய்ய சொல்கிறாய் ?" . இது தான் இந்த பதத்தின் அர்த்தம். Iṣubhiḥ pratiyotsyāmi pūjārhāv ari-sūdana. மேலும் அரி-ஸுதன எனப்படுகிறார். அரி என்றால் எதிரி. மது என்ற அரக்கனை அழித்ததால் மதுசூதனன் எனப்படுகிறார். அடுத்தது அரி-ஸுதன .. அரி என்றால் எதிரி. கிருஷ்ணர் எதிரிகளைப் போல் வந்த பல அரக்கர்களை வதைத்திருக்கிறார். எனவே அவர் அரி-ஸுதன என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ணருக்கே எதிரிகள் இருக்கும்போது நம்மைப்பற்றி என்ன சொல்வது. இந்த ஜட உலகத்தில் அனைவருக்கும் எதிரிகள் இருந்தே தீருவர். Matsaratā .. Matsaratā என்றால் பொறாமை. இந்த ஜட உலகம் அப்படிப்பட்டது தான். கடவுளிடம் பொறாமை கொண்டு அவருக்கு எதிரிகளாக பலர் இருக்கின்றனர். அவர்களை அரக்கர்கள் என்று கூறுவோம். எதிரிகள் என்பது ஒரு இயல்பான விஷயம் தான். ஆனால் கடவுளிடம் கூட சிலர் அவ்வாறு இருக்கின்றனர். நேற்று இரவு என்னை காண ஒருவர் வந்திருந்தார். அவர் என்னிடம் வாதம் செய்தார் "ஏன் கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?" என்று. அது அவரின் விவாதம். எனவே கிருஷ்ணருக்கும் எதிரிகள் உண்டு. அவர் மட்டும் அல்ல. இந்த இயந்திரமயமான உலகத்தில் வாழும் அனைவரும் கிருஷ்ணரின் எதிரிகளே. அனைவருமே! ஏன் என்றால் அவர்கள் கிருஷ்ணரை போட்டியாக நினைக்கின்றனர். கிருஷ்ணர் கூறுகிறார் bhoktāram: நானே உயர்ந்த அனுபவிப்பாளன். Sarva-loka-maheśvaram: (BG 5.29) அனைத்தையும் ஆள்பவன் நானே. வேதங்களும் இதை தான் கூறுகின்றது .. īśāvāsyam idaṁ sarvam (ISO 1). அனைத்துமே கடவுளுக்குச் சொந்தமானது. Sarvaṁ khalv idaṁ brahma. இவையெல்லாம் வேதத்திலுள்ள கருத்துக்கள். Yato vā imāni bhūtāni jāyante: "யாரிடத்திலிருந்து அனைத்தும் வந்ததோ.." Janmādy asya yataḥ (SB 1.1.1). இவை வேதங்களில் சொல்லப்பட்டவை. இருந்தும் நாம் அவரின் எதிரிகளை போல.. "கிருஷ்ணர் எப்படி அனைத்திற்கும் அதிபதி ஆக முடியும்? நான் தான் உரிமையாளன்." என்று கூறிக்கொண்டிருக்கிறோம். "கிருஷ்ணர் மட்டும் எப்படி கடவுளாக இருக்க முடியும். எனக்கு இன்னொரு கடவுள் கிடைத்திருக்கிறார். இதோ அந்த இன்னொரு கடவுள்." என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.