TA/Prabhupada 0235 - தகுதியற்ற குரு என்றால் சீடனுக்கு வழிகாட்டத் தெரியாதவர் என்று பொருள்

Revision as of 18:47, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0235 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

எனவே gurūn ahatvā. கிருஷ்ணரின் பக்தன் ஒருவன், தேவை ஏற்பட்டால், தகுதியற்ற குருவாக இருந்தால் ... தகுதியற்ற குரு என்றால் சீடனுக்கு வழிகாட்டத் தெரியாதவர் என்று பொருள். குருவின் கடமை வழிகாட்டுதல் ஆகும். ஆக, அம்மாதிரியான குருவைக் குறைந்தது நிராகரித்துவிடலாம். அதாவது Jīva Gosvāmī's... Kārya-kāryam ajānataḥ. ஒரு குருவுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது தெரியாமல், தவறுதலாக, தவறாக அப்படி ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டிருந்தேன் ஆனால், அவரை நிராகரிக்கலாம். அவரை நிராகரிப்பதன் மூலம், ஒரு உண்மையான நம்பிக்கையான குருவை ஏற்க முடியும். ஆகவே, ஒரு குரு அழிக்கப்படுவதில்லை, ஆனால் நிராகரிக்கப்படலாம். அது தான் சாஸ்திரத்தின் நியமம். எனவே பீஷ்மதேவரோ அல்லது துரோணாச்சாரியாரோ, நிச்சயமாக அவர்கள் குருக்கள் தான், ஆனால் கிருஷ்ணர் மறைமுகமாக, அர்ஜுனனுக்கு எச்சரித்தது, "அவர்கள் குருவின் நிலையில் இருந்தாலும், நீ அவர்களை நிராகரிக்கலாம்" என்பதே. Kārya-kāryam ajānataḥ. "அவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது." இந்த பீஷ்மதேவர், அவர் பொருளாதர ரீதியில் தனது நிலையைக் கருதினார். அவருக்குத் தொடக்கத்திலிருந்து அனைத்தும் தெரியும், பாண்டவர்கள், அவர்கள் பெற்றவரை இழந்தவர்கள், தந்தையில்லாதவர்கள், தாமே அவர்களை வளர்த்தோம் என்று அனைத்தும் தெரியும். அது மட்டுமல்ல, அவர் பாண்டவர்களிடம் எவ்வளவு பாசம் கொண்டிருந்தார் என்றால், அவர் இவ்வாறு எண்ணினார் அவர்களைக் காட்டுக்கு அனுப்பியபோது, அவர்கள் நாடுகடத்தப்பட்டபோது, அந்த சமயத்தில் பீஷ்மதேவர் இவ்வாறு அழுதார், “இந்த ஐந்து சிறுவர்களும், மிகவும் பரிசுத்தமானவர்கள், மிக நேர்மையானவர்கள். பரிசுத்தம், நேர்மை மட்டுமல்லாமல், அர்ஜுனனும் பீமனும் மிகவும் சக்தி வாய்ந்த வீரர்கள். இந்த திரௌபதியோ சாக்ஷாத் அதிர்ஷ்ட தேவதை தான். மேலும் தெய்வீகத்தின் தலையாய ஆளுமை பொருந்திய கிருஷ்ணரையே நண்பராகக் கொண்டவர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கா இந்தத் துன்பம்?" என்று அவர் அழுதார். அவருக்கு அவ்வளவு பாசம் இருந்தது. எனவே அர்ஜுனன் சிந்திக்கிறான், "நான் எப்படி பீஷ்மரைக் கொல்ல முடியும்?" ஆனால் கடமை மிகவும் சக்தி வாய்ந்தது. கிருஷ்ணர்.ஆலோசனை வழங்குகிறார், "ஆமாம், அவர் கொல்லப்பட வேண்டும். ஏனென்றால் அவர் வேறு பக்கத்திற்குச் சென்று விட்டாரே. அவர் தனது கடமையை மறந்து விட்டார். அவர் உங்களோடு சேர்ந்திருக்க வேண்டும். எனவே அவர் உங்களுடைய குருவின் நிலையில் இப்போது இல்லை. நீ அவரை கொல்லத் தான் வேண்டும். அவர் தவறாக வேறு கட்சியில் சேர்ந்துவிட்டார். எனவே அவரைக் கொல்வதில் எந்தப் பாதகமும் இல்லை. அதே போல் துரோணாச்சாரியாரும். அதே போல் துரோணாச்சாரியாரும். அவர்கள் சிறந்த ஆளுமை பொருந்தியவர்கள், பெரும் பாசம் படைத்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் பொருள் சார்ந்த நோக்கத்தில் தான் அவர்கள் அங்கு சென்றுள்ளனர். " பொருள் சார்ந்த நோக்கம் என்றால் என்ன? பீஷ்மர் எண்ணினார் “நான் துரியோதனனின் செல்வத்தால் பராமரிக்கப் படுகிறேன். துரியோதனன் என்னைப் பராமரிக்கிறான். இப்போது அவன் ஆபத்தில் இருக்கிறான் " என்று. நான் அந்தப் பக்கத்திற்குச் சென்றுவிட்டால், நான் நன்றி கெட்டவனாக ஆகிவிடுவேன். அவன் என்னை இவ்வளவு நாள் பராமரித்து வந்தான். நான், ஆபத்து நேரத்தில், போர் நடக்கும்போது, வேறு பக்கத்திற்கு சென்று விட்டால்...”அவர் இவ்வாறு எண்ணினார். அவர் இப்படி நினைக்கவில்லை, " துரியோதனுக்கு நான் கடமை பட்டிருக்கலாம். ஆனால் அவன் பாண்டவர்களின் சொத்தைப் பறித்துக் கொண்டுவிட்டானே.” ஆனால், அது தான் அவருடைய மகத்துவம். ஏனெனில் கிருஷ்ணர் இருப்பதால் அர்ஜூனன் கொல்லப்பட மாட்டான் என்று அவருக்குத் தெரியும். "ஆகையால் பொருள் சார்ந்த நோக்கத்தில், நான் துரியோதனனுக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டும்." அதே நிலையில் தான் துரோணாச்சாரியாரும் இருந்தார். அவர்கள் கடமைப்பட்டு இருந்தார்கள்.