TA/Prabhupada 0236 - ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி நன்கொடை வாங்கலாம், ஆனால் ஒரு க்ஷத்ரியன், வைசியன் கூடாது

Revision as of 18:56, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0236 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

எனவே சைதன்ய மகாபிரபு viṣayīra anna khāile malīna haya mana (CC Antya 6.278) என்று சொன்னார். பக்தரல்லாதவரிடமிருந்து பிராமணர்கள் பணம் பெறுவதால், அவர்களையும் அறியாமை என்னும் இருள் சூழுகிறது. பௌதீகவாதியிடமிருந்து நான் பணம் பெற்றுக்கொண்டால், அது என்னையும் பாதிக்கும். நானும் அப்படி ஆகிவிடுவேன். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். எனவே , சைதன்ய மஹாபிரபுவின் எச்சரிக்கை என்னவென்றால், "யார் ஒருவன் பக்தனாக இல்லையோ, அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாதே. ஏன் என்றால், அது உன் மனதை மாசு படுத்தி விடும். எனவே பிராமணனும், வைணவனும் நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் பிக்ஷையாக ஏற்றுக்கொள்வார்கள். இங்கே அதை bhaikṣyam என்று கூறுகிறார்கள். Śreyo bhoktuṁ bhaikṣyam apīha loke (BG 2.5). மிகவும் பௌதீக எண்ணம் கொண்ட மனிதரிடம் பிச்சை எடுப்பது கூட, சில சமயம் தடைசெய்யப்படுகிறது. ஆனால் பிக்ஷை, சன்யாசிகளுக்கும் பிராமணர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. எனவே அர்ஜுனர் சொல்கிறார், "மதிப்பிற்குரிய குருமார்களாகவும், மகாத்மாக்களாகவும் இருக்கும் இவர்களை.. கொலை செய்வதற்கு பதிலாக.." பிச்சையெடுப்பது மேல்." அனால் அர்ஜுனன் க்ஷத்திரியன். ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி பிக்ஷை எடுக்கலாம்.. ஆனால் ஒரு க்ஷத்ரியன், ஒரு வைசியன் பிக்ஷை எடுக்க அனுமதி இல்லை. அர்ஜுனர் ஒரு ஷத்ரியன். எனவே அவர் கூறுகிறார் "நான் ஒரு பிராமணனின் தொழிலை எடுத்துக்கொள்வதே மேல். " என் குருமார்களை கொன்று இந்த ராஜ்யத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, நான் வீடு வீடாக சென்று பிக்ஷை எடுக்கிறேன். அது அவனின் திட்டம். மொத்தத்தில் அர்ஜுனன் மாயையில் சிக்கிக்கொண்டான். மாயை என்றால் அவனின் கடமையை மறந்துவிட்டான். ஒரு ஷத்ரியனின் கடமை , சண்டையிடுவது. எதிரில் நிற்பது அவனின் மகனாகவே இருந்தாலும் அதை பற்றி சிந்திக்கக்கூடாது. ஒரு ஷத்ரியன், தன் மகனே விரோதியாக வந்தாலும், அவனை கொல்ல தயங்கமாட்டான். அதே போல், மகனும், தன் தந்தையே விரோதியாக வந்து நின்றாலும், கொல்ல தயங்கமாட்டான். இது க்ஷத்ரியனின் கடுமையான கடமை. மாற்று கருத்தே இல்லை. ஒரு க்ஷத்ரியன் பிச்சையெடுக்க அனுமதியில்லை. எனவே கிருஷ்ணர் கூறுகிறார்.. " நீ ஏன் கோழையாக இருக்கிறாய்? ஏன் பயப்படுகிறாய்?" என்று பல விஷயங்களை சொல்லி, பிறகு கிருஷ்ணர் ஆன்மீக உபதேசங்களை வழங்குகிறார். இந்த விஷயங்களைத்தும் இரு நண்பர்களுக்கிடையில் நடக்கும் சாதாரண உரையாடல் போலிருக்கும். அவ்வளவே. நன்றி .