TA/Prabhupada 0244 - எங்கள் தத்துவம் யாதெனில் அனைத்துமே பகவானுக்கு சொந்தமானது

Revision as of 11:24, 30 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0244 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.9 -- London, August 15, 1973

மற்றொரு நாளில் பாரிஸ் நகரில் ஒரு பத்திரிகை நிருபர் என்னை சந்திக்க வந்தார் .. சோசிலைஸ்ட் பத்திரிகையை சேர்த்தவர் நான் அவரிடம் கூறினேன். எங்கள் தத்துவம்.. எல்லாமே கடவுளுடையது என்பதே என்று.. கிருஷ்ணர் கூறுகிறார் bhoktāraṁ yajña-tapasāṁ sarva-loka-maheśvaram (BG 5.29). "நான் அனுபவிப்பவன் bhoktā"என்றால் அனுபவிப்பவன் bhoktāraṁ yajña-tapasāṁ. இந்த உடம்பு வேலை செய்வது போல அனைவரின் உடலும் முழுமையாக வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றது.. வாழ்க்கையை அனுபவிக்க.. ஆனால் அந்த மகிழ்ச்சியான அனுபவம் எங்கிருந்து தொடங்குகிறது ? அந்த மகிழ்ச்சியான அனுபவம் வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது வயிற்றுக்கு நீங்கள் சரியான உணவை கொடுக்கவேண்டும் தேவையான அளவு ஆற்றல் இருந்தால் ஜீரணம் செய்ய முடியும். அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் எல்லா உறுப்புகளையும் சக்தி பெற செய்கிறது அப்படி இருந்தால், புலன்கள் திருப்தியடையும். இல்லாவிடில் அது சாதியம் இல்லை உன்னால் ஜீரணம் செய்ய முடியாவிட்டால்.. வயதானவர்களை போல.. அப்பொழுது புலனின்பம் கொள்வது பற்றியே கேள்வி இல்லை எனவே புலனின்பம் வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது ஒரு மரத்தின் செழிப்பான வளர்ச்சி, அதனின் வேரிலிருந்து கிடைக்கிறது .. அங்கே தேவையான அளவு தண்ணீர் இல்லையென்றால் .. எனவே மரங்களை pada-pa. என்று சொல்கிறோம் அவை தண்ணீரை கால்கள் மூலமாக குடிக்கிறது.. தலையிலிருந்து இல்லை நாம் முகத்தில் இருக்கும் உறுப்பு மூலம் உண்பதை போல.. இங்கே பலவகையான ஏற்பாடுகள் இருக்கின்றது நாம் வாயின் மூலமாக உண்பதை போல.. மரங்கள் அவற்றின் கால்களின் மூலகம உண்கிறது ஆனால் உணவு உட்கொண்டு ஆகவேண்டும் . Āhāra-nidrā-bhaya-maithuna. உணவு உண்பது என்பது இருந்தே ஆகவேண்டும்.. கையால் உண்டாலும், காலால் உண்டாலும்.. கிருஷ்ணரை பொறுத்தவரை.. அவர் எப்படி வேண்டுமானாலும் உண்ணமுடியும் அவர் கையால், வாயால், கண்ணால் , காதால் , எப்படி வேண்டுமானாலும் உண்ண முடியும் அவர் உருவமற்றவர்.. அவரின் கண்ணுக்கும், தலைக்கும், கால்களுக்கும், எந்த வேறுபாடும்இ ல்லை That is stated in the Brahma-saṁhitā, aṅgāni yasya sakalendriya-vṛttimanti paśyanti pānti kalayanti ciraṁ jaganti ānanda-cinmaya-sadujjvala-vigrahasya govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi. (Bs. 5.32) எனவே, நம் உடம்பில் புலனின்பம் வயிற்றிலிருந்து தொடங்குகிறது மரம் செழிப்போடு வளர்வது, வேரிலிருந்து ஆரம்பமாவது போல அதே போல கிருஷ்ணர் அனைத்திற்கும் ஆரம்பமானவர் ஆவர்.. anmādy asya yataḥ (SB 1.1.1), root. கிருஷ்ணர் உணர்வு இல்லாமல்.. கிருஷ்ணரை மகிழ்விக்காமல் நீ சந்தோஷம் கொள்ள இயலாது இது தான் அமைப்பு.. எனவே , கிருஷ்ணரை எப்படி மகிழ்விப்பது? கிருஷ்ணர் எப்பொழுது மகிழ்ச்சி கொள்வார் என்றால்.. நாம் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகள்.. கடவுளின் குழந்தைகள் அனைத்துமே கிருஷ்ணருடைய சொத்து .. இது தான் நிஜம் எனவே நாம் கிருஷ்ணரின் பிரசாதத்தை எடுத்துக்கொள்வது மூலமாக சந்தோஷமடைய முடியும்.. அவனே அனைத்திற்கும் சொந்தக்காரன்.. அனுபவிப்பவன் .. அனைத்தையும் முதலில் கிருஷ்ணருக்கு படைத்துவிட்டு பின்னர் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் .. அது உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும்... அதை பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார்கள்.. Bhuñjate te tv aghaṁ pāpaṁ ye pacanty ātma-kāraṇāt: (BG 3.13) ஒருவன் தனக்காக மட்டும் சமைத்து உண்கிறான் என்றால் அவன் பாவத்தை உண்கிறான் என்று பொருள்.. Bhuñjate te tv aghaṁ pāpaṁ ye pacanty ātma... Yajñārthāt karmaṇo 'nyatra loko' yaṁ karma... அனைத்துமே கிருஷ்ணருக்காக செய்யவேண்டும்.. உண்பது.. அனைத்துமே அணைத்து புலனின்பமும் நீ பெறலாம்.. கிருஷ்ணர் முதலில் பெற்ற பின்னர் நீ பெற்றால்.. பின்னர் நீ உணவு உண்ணலாம்.. எனவே கிருஷ்ணரின் பெயர் Hṛṣīkeśa .. அவர் தான் அனைத்திற்கும் தலைமையானவர் அனைத்து உணர்வுகளுக்கான தலைவன் அவனே.. நீ மட்டும் உன் உணர்வுகளை தனியாக அனுபவிக்க முடியாது வேலைக்காரன் போல.. வேலைக்காரன் அனுபவிக்க முடியாது.. சமையல் செய்பவன் மிக சுவையான உணவு வகைகளை சமைத்துவிட்டு அவனால் முதலில் உண்ண முடியாததை போல.. அவன் அப்படி செய்யமுடியாது... அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள் தலைமையானவர் முதலில் அனைத்தையும் எடுத்துக்கொண்ட பிறகு மற்றவர்கள் சுவையான உணவை உண்ணமுடியும்