TA/Prabhupada 0244 - எங்கள் தத்துவம் யாதெனில் அனைத்துமே பகவானுக்கு சொந்தமானது



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

அன்றொரு நாள் பாரிஸ் நகரத்தில் ஒரு பத்திரிகையாளர் என்னை சந்திக்க வந்தார், ஸோஷியலிஷ்ட் பிரெஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர். "எல்லாமே கடவுளுக்குச் சொந்தமானது என்பது தான் எங்கள் தத்துவம்," என்பதை நான் அவருக்கு அறிவித்தேன். கிருஷ்ணர் கூறுகிறார், 'போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்' (பகவத் கீதை 5.29). "நானே அனுபவிப்பவன், போக்தா." போக்தா என்றால் அனுபவிப்பவன். போக்தாரம் யக்ஞ-தபஸாம். இந்த உடலைப் போல் தான். உதாரணத்திற்கு, இந்த உடலின் பாகங்கள் அனைத்தும் உழைக்கின்றன. எதற்காக? வாழ்க்கையில் இன்பம் பெறுவதற்காக தான். அனைவருக்கும் அப்படித்தான். ஆனால் அந்த இன்பத்தின் தொடக்கம் எங்கே? அந்த இன்பத்தின் தொடக்கம் வயிற்றிலிருந்து தான். வயிற்றுக்கு நீங்கள் தேவையான அளவுக்கு நல்ல உணவை கொடுக்க வேண்டியிருக்கிறது. தேவையான அளவு சக்தி இருந்தால்தான் நம்மால் ஜீரணம் செய்ய முடியும், அப்போது தான் மற்ற புலன்களுக்கும் அனுபவிப்பதற்கு தேவையான சக்தி கிடைக்கும். பிறகு உங்களால் புலனின்பத்தை அனுபவிக்க முடியும். இல்லாவிடில் அது சாதியம் இல்லை. உங்களால் உணவை செரிக்க முடியாவிட்டால்... எனக்கு வயதாகிவிட்டது, என்னால் சரியாக செரிக்க முடியாது. ஆக எனக்கு புலன்களை திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆக புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து ஆரம்பமாகிறது. வேரில் தேவையான அளவு தண்ணீர் இருந்தால் மரம் செழிப்பாக வளரும். எனவே மரங்களுக்கு பாத-ப எனப் பெயர். அவை தண்ணீரை கால்களிலிருந்து, அதாவது வேரிலிருந்து அருந்துகின்றன தலையிலிருந்து அல்ல. நாம் எப்படி முகம் வழியாக உணவை ஏற்கிறோம், அப்படித்தான். இப்படி பல வகையான உடல் அமைப்புகள் இருக்கின்றன. நாம் எப்படி வாய் வழியாக உண்கிறோமோ அப்படி மரங்கள் கால்கள் வழியாக உண்கின்றன. ஆக ஒவ்வொரு ஜீவனும் உண்டு தான் ஆக வேண்டும். ஆஹார-நித்ரா-பய-மைதுன. உணவு உண்பது என்பது இருந்தே ஆகவேண்டும், அதை கையால் உண்டாலும் சரி, காலால் உண்டாலும் சரி, வாய் வழியாக உண்டாலும் சரி. ஆனால் கிருஷ்ணரை பொறுத்தவரை, அவரால் எப்படி வேண்டுமானாலும் உண்ணமுடியும். அவரால் கையால், வாயால், கண்ணால் , காதால் , எப்படி வேண்டுமானாலும் உண்ண முடியும் அவர் உடல் முற்றிலும் ஆன்மீகத்தன்மை வாய்ந்தது. அவரது கண்ணுக்கும், தலைக்கும், கால்களுக்கும், எந்த வித்தியாசமும் கிடையாது. அது பிரம்ஹ-சம்ஹிதாவில் குறிக்கப்பட்டிருக்கிறது, அங்கானி யஸ்ய ஸகலேந்திரிய-வ்ருத்திமாந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி. ஆனந்த-சின்மய-ஸதுஜ்வல-விக்ரஹஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. (பிரம்ஹ சம்ஹிதா 5.32) ஆக நம் உடலில் எப்படி புலன் இன்பம் என்பது வயிற்றிலிருந்து தொடங்கவேண்டுமோ, ஒரு மரத்தின் செழிப்பான வளர்ச்சி எப்படி வேரிலிருந்து தொடங்குகிறதோ, அதுபோலவே அனைத்திற்கும் மூலமானவர் கிருஷ்ணரே, ஜன்மாதி அஸ்ய யதஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1), வேர். கிருஷ்ண உணர்வு இல்லாமல், கிருஷ்ணரை திருப்திப்படுத்தாமல், ஒருவரால் சந்தோஷமாக இருக்க முடியாது. இது தான் வழிமுறை. ஆக கிருஷ்ணரை எப்படி மகிழ்விப்பது? கிருஷ்ணர் எப்படி மகிழ்வார் என்றால்... நாம் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகள், கடவுளின் குழந்தைகள். அனைத்துமே கிருஷ்ணருக்கு சொந்தமானது. இது தான் உண்மை. இந்த மனப்பான்மையுடன் நாம் கிருஷ்ண பிரசாதத்தை பெற வேண்டும் ஏனென்றால் அவரே அனைத்திற்கும் உரிமையாளர், போக்தா, அனுபவிப்பாளர். ஆக அனைத்தும் முதலில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும், பிறகு அதை அவரது பிரசாதமாக பெற்றுக்கொள்ளுங்கள். அது தான் உங்களை திருப்திப்படுத்தும். அது பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கிறது. புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம-காரணாத்: (பகவத் கீதை 3.13). "சுய இன்பத்தை மட்டுமே கருதி, சமைத்து சாப்பிடுபவர்கள், வெறும் பாவத்தை உண்கிறார்கள்." புஞ்ஜதே த்வ அகம் பாபம் யே பசந்தி ஆத்ம... யஞ்யார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோ அயம் கர்ம... அனைத்துமே கிருஷ்ணருக்காக செய்யவேண்டும், உண்பது கூட, அனைத்துமே. எதுவாக இருந்தாலும் சரி, முதலில் கிருஷ்ணர் அனுபவித்த பிறகு நீங்கள் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். அவர் ஏற்ற பிறகு நீங்கள் உண்ணலாம். எனவேதான் கிருஷ்ணரின் பெயர் ஹ்ருஷீகேஷ. அவரே அனைத்திற்கும் உரிமையாளர். அனைத்து புலன்களுக்கும் அவரே சொந்தக்காரர். புலன்களை உங்களால் சுதந்திரமாக அனுபவிக்க முடியாது. ஒரு வேலைக்காரனைப் போல் தான். வேலைக்காரனால் மனம் போல் அனுபவிக்க முடியாது. ஒரு சமையல்காரன் மிக சுவையான உணவு வகைகளை சமைப்பான், ஆனால் அவையை முதலாவதாக உண்பவன் அவன் இல்லை. அது சாத்தியம் இல்லை. அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். எஜமான் தான் முதலாவதாக ஏற்க வேண்டும். அதன் பிறகு அந்த சுவையான உணவுவகைகளை அவர்கள் அனுபவிக்கலாம்.