TA/Prabhupada 0248 - கிருஷ்ணருக்கு 16.108 மனைவிகள். ஒவ்வொரு முறையும் அவர் மனைவியை அடையப் போராட வேண்டியிருந்

Revision as of 06:24, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0248 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.6 -- London, August 6, 1973

பிரத்யும்னன்: "எது நல்லது என்றும் நமக்குத் தெரியாது- அவர்களை வெல்வதா, அல்லது அவர்களால் வெல்லப்படுவதா. திருதிராஷ்டரனின் மகன்கள் – எவர்களை வதம் செய்வதென்பது, நாம் உயிர் வாழ்வதற்கு ஒரு பொருட்டாகாதோ - - அவர்கள் இப்போது இந்தப் போர்க்களத்தில் நமக்கு முன்னே நின்று கொண்டிருக்கின்றனர்". ரபுபாதா: எனவே ஒன்றுவிட்ட சகோதரர்களான இந்த இரு பிரிவினரும் ... மகாராஜா பாண்டுவிற்கு ஐந்து மகன்கள் இருந்தனர். மேலும் திருதிராஷ்டருக்கு நூறு மகன்கள் இருந்தனர். எனவே அது ஒரு குடும்பம், ஒரே குடும்பம், மேலும் அவர்களுக்கிடையே ஒரு புரிதல் இருந்தது, குடும்பத்தைச் சாராத மற்றவர்கள் யாரேனும் தாக்க வந்தால், அவர்கள் 105 சகோதரர்களும், ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று. ஆனால் அவர்களுக்குள்ளே ஒரு போர் மூண்டபோது - ஒரு புறத்தில், நூறு சகோதரர்கள்; மறு புறத்தில், ஐந்து சகோதரர்கள். ஏனெனில் ஒரு சத்திரியக் குடும்பத்தில், போர் நடந்து கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் திருமணத்திற்கும் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் சத்திரியக் குடும்பத்தில் எந்தத் திருமணமும் நடக்காது. கிருஷ்ணருக்கு 16.108 மனைவிகள். மேலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர் தன் மனைவியை அடையப் போராட வேண்டியிருந்தது. அது ஒரு விளையாட்டு. சத்திரியர்களுக்கு போர் என்பது ஒரு விளையாட்டு. எனவே அவர் இம்மாதிரியான சண்டையை ஊக்குவிப்பதா வேண்டாமா என்று குழம்புகிறார். வங்கத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, khābo ki khābo nā yadi khāo tu pauṣe என்று. "சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், சாப்பிடாமல் இருந்துவிடுவதே நல்லது." சில நேரங்களில் நாம் இந்த மாதிரியான நிலைக்கு வந்துவிடுவோம், "எனக்குப் பசிக்கவில்லை, நான் சாப்பிடவா வேண்டாமா?". அந்தச் சமயத்தில் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது, சாப்பிடுவது அன்று. ஆனால் நீங்கள் சாப்பிட வேண்டும் என்றால், டிசம்பர் மாதத்தில் சப்பிடலாம், Pauṣa. ஏன்? வங்காளத்தில்... ... வங்காளம் வெப்பமண்டலத்தின் சீதோஷ்ண நிலையைக் கொண்டது, ஆனால் குளிர்காலத்தில் “நீங்கள் சாப்பிடுவதால் அவ்வளவு பாதகம் இல்லை, ஏனெனில் அது செரித்துவிடும்” என்று அறிவுறுத்தப்படுகிறது. . நீண்ட இரவு நேரங்களாலோ, அல்லது குளிர் காலம் என்பதாலோ, செரிமான சக்தி நன்றாக இருக்கும். எனவே “செய்வதா வேண்டாமா?” என்று நீங்கள் குழம்பும் போது, jābo ki jābo nā yadi jāo tu śauce: “நான் போகவா வேண்டாமா?” என்று நீங்கள் எண்ணும்பொழுது போகாமல் இருப்பதே சிறந்தது. ஆனால் இயற்கையின் அழைப்பிற்கென்றால், நீங்கள் போகத் தான் வேண்டும். Jābo ki jābo nā yadi jāu tu śauce, khābo ki khābo nā yadi khāo tu pauṣe. இவை பொது அறிவு தான். இதேபோல், அர்ஜுனன் இப்போது குழம்புகிறான்," நான் போரிடவா வேண்டமா? " என்று. இது எங்கும் நிலவுகிறது. நவீன அரசியல்வாதிகளுக்கு இடையே போர் அறிவிப்பு இருக்கும் போது, அவர்கள் கருத்தாய்வு செய்கின்றனர்… கடந்த இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் போருக்கு தயாராகிக் கொண்டிருந்த சமயத்தைப் போல... ஹிட்லர் பதிலடி கொடுக்கப் போகிறார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது ஏனெனில் முதலாம் உலகப் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டார். எனவே ஹிட்லர் மீண்டும் தயார்படுத்திக் கொண்டிருந்தார். என் ஞான சகோதரர் ஒருவர், ஜெர்மானியர், அவர் 1933-ல் இந்தியா வந்தார். அந்த நேரத்தில் அவர் "போர் மூண்டுவிடும். ஹிட்லர் பலத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார். போர் மூளும்." என்று தெரிவித்தார். எனவே அந்த நேரத்தில், உங்கள் நாட்டுப் பிரதமராக திரு.சேம்பர்லின் இருந்தார் என்று நினைக்கிறேன். அவர் போரை நிறுத்துவதற்காக ஹிட்லரைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். ஆகையால் அதே போல், இந்தப் போராட்டத்திலும், கடைசி நிலைவரை, கிருஷ்ணர் போரைத் தவிர்க்க முயற்சி செய்தார். அவர் துரியோதனனிடம் “அவர்கள் சத்திரியர்கள், உன் ஒன்று விட்ட சகோதரர்கள். நீ அவர்களின் ராஜ்யத்தை பறித்துக்கொண்டு விட்டாய். எதோ ஒரு வழியிலே அதை எடுத்துக் கொண்டுவிட்டாய். பரவாயில்லை. ஆனால் அவர்கள் சத்திரியர்கள். அவர்கள் பிழைப்பிற்கு எதோ ஒரு வழி வேண்டும். . எனவே, அந்த ஐந்து கொடுக்க சகோதரர்களுக்கு, ஐந்து கிராமங்களைக் கொடுத்துவிடு. உலகம் முழுவதுமான இந்தப் பேரரசில், அவர்களுக்கு நீ ஒரு ஐந்து கிராமங்களைக் கொடுத்துவிடு." எனவே அவர் ... "இல்லை, நான் போர் இல்லாமல் ஒரு அங்குல நிலத்தைக் கூட கொடுக்கப் போவதில்லை." ஆகையால், இம்மாதிரியான சூழ்நிலையில், போர் நடந்தே தீர வேண்டும்.