TA/Prabhupada 0254 - வேத அறிவு குருவால் விவரிக்கப்படுகிறது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0254 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0253 - Le vrai bonheur est décrit dans la Bhagavad-gita|0253|FR/Prabhupada 0255 - Les devas sont les ministres du gouvernement de Dieu|0255}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0253 - உண்மையான சந்தோஷம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது|0253|TA/Prabhupada 0255 - பகவானின் அரசாங்கத்தில், பல இயக்குநர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தேவர்கள் என்று ஆழைக்|0255}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|3esSfjCKHUk|Vedic Knowledge is Explained by Guru<br />- Prabhupāda 0254}}
{{youtube_right|BkfRcXFFRWU|வேத அறிவு குருவால் விவரிக்கப்படுகிறது<br />- Prabhupāda 0254}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 29: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
எனவே முதலில் நாம் அனைவரும் மனிதர்களே, யாரும் மனித த் தன்மையற்று இல்லை. கிருஷ்ணர் சொல்கிறார் ... அவர் சொல்வார்: “இந்த வீரர்களும், இந்த அரசர்களும், நீயும், நானும், என் அன்பே அர்ஜுனா, நாம் கடந்த காலத்தில் வாழ்ந்திருக்காமல் ஒன்றும் இல்லை. எதிர்காலத்தில் நாம் இல்லாமலும் போகப்போவதில்லை." எனவே கிருஷ்ணரின் இந்தக் குறிப்பிட்ட போதனையான: "நான், நீ மற்றும் இந்த அரசர்கள் அனைவரும், மேலும் இங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும், அவர்கள் முன்பும் இருந்தார்கள். இப்போது நாம் இருப்பது போலவே, தனிப்பட்ட நபர்களாக, அதே போல் அவர்களும் தனிப்பட்ட நபர்களாக இருந்தார்கள். மேலும் எதிர்காலத்திலும் நாம் தனிப்பட்ட நபர்களாக இருப்போம்". எனவே, அங்கு மனிதத்தன்மை இல்லாததைப் பற்றிய கேள்வி எங்கே? இந்த முட்டாள்தனமான மனிதத்தன்மை துறந்தவர்கள், சூனியவாதிகள். எனவே, இங்குக் கொள்கை என்னவென்றால், ஒருவர் விஷயங்களை உண்மையில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அர்ஜுன ன் அணுகியதைப் போல் கிருஷ்ணரை அணுக வேண்டும், śiṣyas te 'ham: ([[Vanisource:BG 2.7|BG 2.7]]) "இப்போது நான் உங்கள் சிஷ்யன். நீங்கள் எனக்குப் போதனை செய்யுங்கள். Śādhi māṁ prapannam. நான் சரணடைகிறேன். நான் உங்களோடு சம நிலையில் பேச முயற்சிக்கவில்லை” என்று. ஒரு குருவை ஏற்றுக்கொள்வதென்றால் அவர் கூறுவதை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ஒரு குருவை உருவாக்காதீர்கள். அதை ஒரு நாகரீகமாக்காதீர்கள். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான் prapannam  என்று அழைக்கப்படுகிறது. Tad viddhi praṇipātena [[Vanisource:BG 4.34|BG 4.34]]). சரணடைவதால் மட்டுமே நீங்கள் புரிந்து கொள்ள முடியும், குருவை சோதித்து இல்லை. "நான் அவரைச் சோதிக்துப் பார்க்கிறேன், எவ்வளவு, எவ்வளவு அவருக்குத் தெரியும் என்று” பின் குருவை ஏற்றுக் கொண்டு என்ன பயன்? இல்லை. எனவே அர்ஜுனன் சொல்கிறார்: "உம்மைத் தவிர, இந்தக் குழப்பமான நிலையில் எனக்கு ஆறுதல் தர வேறு யாரும் கிடையாது" என்று. Yac chokam ucchoṣaṇam indriyāṇām ([[Vanisource:BG 2.8|BG 2.8]]). "எனது உணர்ச்சிகள் வறண்டு போய்விட்டது”. ஏனெனில் மேலோட்டமான உணர்ச்சிகள்... உண்மையான உணர்ச்சிகள் இல்லை. உண்மையான உணர்வு உள்ளிருந்து வருவதே. Hṛṣīkeṇa hṛṣīkeśa-sevanam ([[Vanisource:CC Madhya 19.170|CC Madhya 19.170]]). நாம் கிருஷ்ணருக்கு சேவை புரிய வேண்டும், Hṛṣīkeśa -ருக்கு... கிருஷ்ணர் தான் நிஜம், நாம் அந்த உண்மை நிலைக்கு வர வேண்டும். பின் நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடியும். Hṛṣīkeṇa. Tat paratvena nirmalam. நம் உணர்வுகள் புனிதமடையும்போது. Indriyāṇi parāṇy āhur indriyebhyaḥ paraṁ manaḥ, manasas tu paro buddhir ([[Vanisource:BG 3.42|BG 3.42]]). இதில் பல்வேறு நிலைகள் உள்ளன. இந்த உடல் சம்பந்தப்பட்ட வாழ்க்கை தத்துவம் உணர்வுகளைக் குறிக்கிறது. ஆனால் நீங்கள் இந்த உணர்வுகளைக் கடந்தால் மன ரீதியான மேடைக்கு வந்துவிடுகிறீர்கள். நீங்கள் அந்த மன ரீதியான மேடையைக் கடக்கும்போது அறிவுப்பூர்வமான மேடைக்கு வருகிறீர்கள். அறிவுப்பூர்வமான மேடைக்கு வரும்போது, அதைக் கடந்தபின், பிறகு நீங்கள் ஆன்மீக மேடைக்கு வருகிறீர்கள். அது தான் ஆன்மீக வடிவம். அதில் வெவ்வேறு நிலைகளும் படிகளும் உள்ளன. மொத்த உடலாகிய மேடையிலிருந்து நாம் pratyakṣa-jñānam-த்தைக் கோருகிறோம். Pratyekṣa  என்றால் நேரடி கருத்து என்று அர்த்தம். ஞானத்தில் பல்வேறு நிலைகள் உள்ளன. Pratyakṣa, aparokṣa, pratyakṣa, parokṣa, aparokṣa, adhokṣaja, aprakṛta. இவை ஞானத்தின் பல்வேறு நிலைகள். எனவே இந்த  உடல் சம்பந்தப்பட்ட மேடையிலிருந்து நாம் பெறும் அறிவு, நேரடி கருத்தாகுமே தவிர உண்மையான ஞானம் ஆகாது. எனவே, விஞ்ஞானிகளுக்குச் சவால் விடலாம், விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு. அவர்களது அடிப்படை அறிவின் தத்துவம் வாழ்வின் உடல் சார்ந்த கருத்தைச் சார்ந்தது, Pratyekṣa, சோதனை அறிவு. சோதனை அறிவு என்பது மொத்த உணர்வுகளின் கருத்தாகும். அது சோதனைகளைச் சார்ந்ததாகும். Pratyakṣa. அனைவரும்: "நாம் கடவுளைக் காண்பதில்லைஎன்று சொல்கிறார்கள். கடவுள் ஒன்றும் நீங்கள் Pratyekṣa- நேரடி உணர்வை வைத்துக் காணும்படியான கருப்பொருள் கிடையாது. கடவுளுக்கு Anubhāva என்று மற்றொரு பெயர் இருக்கிறது. Anubhāva. இந்த அறையிலிருந்து நம்மால் சூரியனைக் காண இயலாததைப் போல். ஆனால் சூரியன் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இது பகல் நேரம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் பார்க்கவில்லை. ஆனால் பிற வழிகளின் மூலம் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். அது தான் aparokṣa என்று அழைக்கப்படுவதுPratyakṣa parokṣa aparokṣa. இதே ரீதியில்,  கிருஷ்ண பக்தி உணர்வு, என்பது  adhokṣaja-வாக, aprakṛta-வாக இருக்கிறது, உணர்வுகளுக்கு அப்பால். எனவே, பகவத் கீதையில் adhokṣaja என்று கூறப்பட்டுள்ளது. நேரடி உணர்வுகள்  அங்கே  அடைய முடியாது. எனவே நேரடி உணர்வுகள்  அடைய முடியாதெனில், நீங்கள் எப்படி anubhāva-வை உணர முடியும்? அது தான் śrota-panthā. அது śruti என்பதாகும்.  நீங்கள் வேதங்களிலிருந்து அறிவைப் பெற வேண்டும். அந்த வேத அறிவோ குருவால் விவரிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் கிருஷ்ணரையோ அவரது பிரதிநிதியையோ உயர் நிலை குருவாகக் கொண்டு புகலிடம் பெற வேண்டும். பிறகு இந்த அனைத்துப் பிரச்சனைகளையும், அதாவது அறியாமையை, போக்கிவிடலாம். Yac chokam ucchoṣaṇam indriyāṇām ([[Vanisource:BG 2.8|BG 2.8]]).  
ஆக உண்மையில் நாம் அனைவரும் ஆளுமை வாய்ந்த நபர்கள், அருவமான ஆளுமையற்றவர்கள் அல்ல. கிருஷ்ணரும் கூறுகிறார்... அவர் சொல்வார்: "இந்த வீரர்கள், இந்த அரசர்கள், நீ, நான், என் அன்புக்குரிய அர்ஜுனா, நாம் அனைவருமே கடந்த காலத்தில், இந்த ஜென்மத்திற்கு முன்பும் இல்லாமல் இல்லை. எதிர்காலத்தில் நாம் இல்லாமலும் போகப்போவதில்லை." எனவேதான் கிருஷ்ணரின் இந்தக் குறிப்பிட்ட உபதேசம், அதாவது : "நான், நீ மற்றும் இந்த அரசர்கள், வீரர்கள், இங்கு கூடியிருக்கும் அனைவரும் இந்த ஜென்மத்திற்கு முன்பும் இருந்தோம். இப்போது நாம் இருப்பது போலவே தான், தனித்துவம் வாய்ந்த நபர்களாக; அவர்களும் தனித்துவம் வாய்ந்த நபர்களாக இருந்தார்கள். மேலும் எதிர்காலத்திலும் நாம் தனித்துவம் வாய்ந்த நபர்களாக தொடர்ந்து இருப்போம்". ஆக அருவ, ஆளுமையற்ற கருத்துக்கு இடமே இல்லை. இந்த அருவவாதிகள், பூஜ்ஜியவாதிகள் எல்லாம் அர்த்தமற்ற கருத்துகளை கொண்டவர்கள். எனவே, இங்கு கொள்கை என்னவென்றால், விஷயங்களை உள்ளபடி உண்மையுருவில் புரிந்துகொள்வதற்கு, அர்ஜுனர் அணுகியதைப் போல், கிருஷ்ணரை நாம் அணுக வேண்டும், ஷிஷ்யாஸ் தே (அ)ஹம் ([[Vanisource:BG 2.7 (1972)|பகவத் கீதை 2.7]]) "இப்போது நான் உங்கள் சிஷ்யன். நீங்கள் எனக்கு கற்றுக்கொடுங்கள். ஷாதி மாம் ப்ரபன்னம். நான் சரணடைகிறேன். நான் உங்களுடன் சம நிலையில் பேச முயலவில்லை." குருவை ஏற்றுக்கொள்வதென்றால், அவர் எதை சொன்னாலும், நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் குரு என்று யாரையும் ஏற்காதீர்கள். வீண் பெருமைக்காக குருவை ஏற்காதீர்கள். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான் 'ப்ரபன்னம்'. தத் வித்தி ப்ரணிபாதேன ([[Vanisource:BG 4.34 (1972)|பகவத் கீதை 4.34]]). சரணடைவதால் மட்டுமே உங்களால் புரிந்து கொள்ள முடியும், குருவை வெறும் சோதித்துப் பார்க்கும் மனப்பான்மையுடன் அல்ல. "நான் அவரை சோதிக்துப் பார்க்கிறேன், அவருக்கு எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கட்டும்." பிறகு குருவை ஏற்று என்ன பயன்? அப்படி கூடாது. எனவே அர்ஜுனர் கூறுகிறார்: "உம்மைத் தவிர, இந்தக் குழப்பமான சூழ்நிலையில் எனக்கு உண்மையிலேயே திருப்திகரமாக வழிகாட்ட வேறு யாராலும் முடியாது." யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்  ([[Vanisource:BG 2.8 (1972)|பகவத் கீதை 2.8]]). "எனது புலன்கள் வறண்டு போய்விட்டன". ஏனென்றால் இந்த வெளிப்பார்வைக்கு தென்படும் புலன்கள்... அவை உண்மையான புலன்கள் அல்ல. உண்மையான புலன்கள் இந்த உடலுக்குள் இருக்கின்றன. ஹ்ருஷீகென ஹ்ருஷீகேஷ-ஸேவனம் ([[Vanisource:CC Madhya 19.170|சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170]]). நாம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய வேண்டும், ஹ்ருஷீகேஷ... கிருஷ்ணர் தான் உண்மை, நாம் அந்த உண்மையை உணர வேண்டும். பிறகு நம்மால் கிருஷ்ணருக்கு பணிபுரிய முடியும். ஹ்ருஷீகேன. தத் பரத்வேன நிர்மலம். நம் புலன்கள் புனிதமடையும்போது. இந்த்ரியாணி பராணி ஆஹூர் இந்த்ரியேப்யஹ பரம் மனஹ, மனசஸ் து பரோ புத்திர் ([[Vanisource:BG 3.42 (1972)|பகவத் கீதை 3.42]]). இதில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்றால் எல்லாமே இந்த புலன்கள் தான். ஆனால் உங்கள் சிந்தனை இந்த புலன்களைக் கடந்ததும், நீங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். மனம் என்ற தளத்திலிருந்து உயர்ந்ததும், நீங்கள் புத்தியை, அதாவது மெய்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். ஞானம் என்னும் தளத்திலிருந்து முன்னேரியவுடன், நீங்கள் ஆன்மீக தளத்திற்கு வருவீர்கள். அது தான் ஆன்மீக வடிவம். அதில் வெவ்வேறு நிலைகளும் வழிமுறைகளும் உள்ளன. இந்த ஜட உடலை அடிப்படையாக கருதும்போது நாம் ப்ரத்யக்ஷ-ஞானத்தை நாடுகிறோம். ப்ரத்யக்ஷ என்றால் ஜட புலன்களால் பெற்ற நேரடி உணர்த்தல் என்று அர்த்தம். ஞானத்தில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ, அதோக்ஷஜ, அப்ராக்ருத. இவை ஞானத்தின் பல்வேறு நிலைகள். ஆக உடலின் அடிப்படையில் பெற்ற ஞானம், அதாவது நேரடி புலக்காட்சி, மெய்ஞானம் ஆகாது. ஆகவே, வெறும் பெயரளவிலான இந்த விஞ்ஞானிகளுக்கு நாம் சவால் விடலாம். அவர்களது அறிவின் அடிப்படையே, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் கருத்து, அதாவது ப்ரத்யக்ஷம், சோதனை முறை அறிவு. சோதனை முறை அறிவு என்றால் ஜடப் புலன்களால் பெற்ற அறிவு. அது தான் சோதனை முறை. ப்ரத்யக்ஷம். எல்லோரும்: "கடவுள் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே.என்பார்கள். கடவுள் என்பவர் இந்த ப்ரத்யக்ஷ முறையால், அதாவது நேரடி புலக்காட்சியால் பார்க்கக்கூடிய விஷயம் அல்ல. கடவுளுக்கு அனுபாவ என்று மற்றொரு பெயர் இருக்கிறது. அனுபாவ. எப்படி என்றால், இந்த அறையிலிருந்து சூரியன் நமக்கு நேரடியாக புலப்படவில்லை. ஆனால் சூரியன் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது பகல் நேரம். அந்த அறிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது? உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் வேறு வழியாக உங்களால் உணர முடிகிறது. அது தான் அபரோக்ஷ என்று அழைக்கப்படுகிறதுப்ரத்யக்ஷ பரோக்ஷ அபரோக்ஷ. இப்படியாக,  கிருஷ்ண உணர்வு என்றால் அதோக்ஷஜ மற்றும் அப்ராக்ருத, அதாவது ஜட புலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, பகவத் கீதையில் 'அதோக்ஷஜ', என்று கூறப்பட்டுள்ளது. நேரடி புலக்காட்சி நெருங்க முடியாத விஷயம். ஆக நேரடி புலக்காட்சியால் அறிய முடியாத பட்சத்தில், உங்களால் எப்படி அந்த அனுபாவ என்பதை உணர முடியும்? அது தான் ஷ்ரோத-பந்தா. அதுதான் ஷ்ருதி.  நீங்கள் வேதங்களிலிருந்து அறிவைப் பெற வேண்டும். மற்றும் அந்த வேத அறிவோ குருவால் விளக்கப்படும். எனவேதான் ஒருவர், பரம குருவான கிருஷ்ணரிடமோ, அவரது பிரதிநிதியிடமோ அடைக்கலம் நாட வேண்டும். பிறகு இந்த அனைத்துப் பிரச்சனைகளையும், அதாவது அறியாமையையும், நம்மால் போக்க முடியும். யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் ([[Vanisource:BG 2.8 (1972)|பகவத் கீதை 2.8]]).  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:52, 29 June 2021



Lecture on BG 2.8 -- London, August 8, 1973

ஆக உண்மையில் நாம் அனைவரும் ஆளுமை வாய்ந்த நபர்கள், அருவமான ஆளுமையற்றவர்கள் அல்ல. கிருஷ்ணரும் கூறுகிறார்... அவர் சொல்வார்: "இந்த வீரர்கள், இந்த அரசர்கள், நீ, நான், என் அன்புக்குரிய அர்ஜுனா, நாம் அனைவருமே கடந்த காலத்தில், இந்த ஜென்மத்திற்கு முன்பும் இல்லாமல் இல்லை. எதிர்காலத்தில் நாம் இல்லாமலும் போகப்போவதில்லை." எனவேதான் கிருஷ்ணரின் இந்தக் குறிப்பிட்ட உபதேசம், அதாவது : "நான், நீ மற்றும் இந்த அரசர்கள், வீரர்கள், இங்கு கூடியிருக்கும் அனைவரும் இந்த ஜென்மத்திற்கு முன்பும் இருந்தோம். இப்போது நாம் இருப்பது போலவே தான், தனித்துவம் வாய்ந்த நபர்களாக; அவர்களும் தனித்துவம் வாய்ந்த நபர்களாக இருந்தார்கள். மேலும் எதிர்காலத்திலும் நாம் தனித்துவம் வாய்ந்த நபர்களாக தொடர்ந்து இருப்போம்". ஆக அருவ, ஆளுமையற்ற கருத்துக்கு இடமே இல்லை. இந்த அருவவாதிகள், பூஜ்ஜியவாதிகள் எல்லாம் அர்த்தமற்ற கருத்துகளை கொண்டவர்கள். எனவே, இங்கு கொள்கை என்னவென்றால், விஷயங்களை உள்ளபடி உண்மையுருவில் புரிந்துகொள்வதற்கு, அர்ஜுனர் அணுகியதைப் போல், கிருஷ்ணரை நாம் அணுக வேண்டும், ஷிஷ்யாஸ் தே (அ)ஹம் (பகவத் கீதை 2.7) "இப்போது நான் உங்கள் சிஷ்யன். நீங்கள் எனக்கு கற்றுக்கொடுங்கள். ஷாதி மாம் ப்ரபன்னம். நான் சரணடைகிறேன். நான் உங்களுடன் சம நிலையில் பேச முயலவில்லை." குருவை ஏற்றுக்கொள்வதென்றால், அவர் எதை சொன்னாலும், நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் குரு என்று யாரையும் ஏற்காதீர்கள். வீண் பெருமைக்காக குருவை ஏற்காதீர்கள். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான் 'ப்ரபன்னம்'. தத் வித்தி ப்ரணிபாதேன (பகவத் கீதை 4.34). சரணடைவதால் மட்டுமே உங்களால் புரிந்து கொள்ள முடியும், குருவை வெறும் சோதித்துப் பார்க்கும் மனப்பான்மையுடன் அல்ல. "நான் அவரை சோதிக்துப் பார்க்கிறேன், அவருக்கு எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கட்டும்." பிறகு குருவை ஏற்று என்ன பயன்? அப்படி கூடாது. எனவே அர்ஜுனர் கூறுகிறார்: "உம்மைத் தவிர, இந்தக் குழப்பமான சூழ்நிலையில் எனக்கு உண்மையிலேயே திருப்திகரமாக வழிகாட்ட வேறு யாராலும் முடியாது." யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் (பகவத் கீதை 2.8). "எனது புலன்கள் வறண்டு போய்விட்டன". ஏனென்றால் இந்த வெளிப்பார்வைக்கு தென்படும் புலன்கள்... அவை உண்மையான புலன்கள் அல்ல. உண்மையான புலன்கள் இந்த உடலுக்குள் இருக்கின்றன. ஹ்ருஷீகென ஹ்ருஷீகேஷ-ஸேவனம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). நாம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய வேண்டும், ஹ்ருஷீகேஷ... கிருஷ்ணர் தான் உண்மை, நாம் அந்த உண்மையை உணர வேண்டும். பிறகு நம்மால் கிருஷ்ணருக்கு பணிபுரிய முடியும். ஹ்ருஷீகேன. தத் பரத்வேன நிர்மலம். நம் புலன்கள் புனிதமடையும்போது. இந்த்ரியாணி பராணி ஆஹூர் இந்த்ரியேப்யஹ பரம் மனஹ, மனசஸ் து பரோ புத்திர் (பகவத் கீதை 3.42). இதில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்றால் எல்லாமே இந்த புலன்கள் தான். ஆனால் உங்கள் சிந்தனை இந்த புலன்களைக் கடந்ததும், நீங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். மனம் என்ற தளத்திலிருந்து உயர்ந்ததும், நீங்கள் புத்தியை, அதாவது மெய்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். ஞானம் என்னும் தளத்திலிருந்து முன்னேரியவுடன், நீங்கள் ஆன்மீக தளத்திற்கு வருவீர்கள். அது தான் ஆன்மீக வடிவம். அதில் வெவ்வேறு நிலைகளும் வழிமுறைகளும் உள்ளன. இந்த ஜட உடலை அடிப்படையாக கருதும்போது நாம் ப்ரத்யக்ஷ-ஞானத்தை நாடுகிறோம். ப்ரத்யக்ஷ என்றால் ஜட புலன்களால் பெற்ற நேரடி உணர்த்தல் என்று அர்த்தம். ஞானத்தில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ, அதோக்ஷஜ, அப்ராக்ருத. இவை ஞானத்தின் பல்வேறு நிலைகள். ஆக உடலின் அடிப்படையில் பெற்ற ஞானம், அதாவது நேரடி புலக்காட்சி, மெய்ஞானம் ஆகாது. ஆகவே, வெறும் பெயரளவிலான இந்த விஞ்ஞானிகளுக்கு நாம் சவால் விடலாம். அவர்களது அறிவின் அடிப்படையே, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் கருத்து, அதாவது ப்ரத்யக்ஷம், சோதனை முறை அறிவு. சோதனை முறை அறிவு என்றால் ஜடப் புலன்களால் பெற்ற அறிவு. அது தான் சோதனை முறை. ப்ரத்யக்ஷம். எல்லோரும்: "கடவுள் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே." என்பார்கள். கடவுள் என்பவர் இந்த ப்ரத்யக்ஷ முறையால், அதாவது நேரடி புலக்காட்சியால் பார்க்கக்கூடிய விஷயம் அல்ல. கடவுளுக்கு அனுபாவ என்று மற்றொரு பெயர் இருக்கிறது. அனுபாவ. எப்படி என்றால், இந்த அறையிலிருந்து சூரியன் நமக்கு நேரடியாக புலப்படவில்லை. ஆனால் சூரியன் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது பகல் நேரம். அந்த அறிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது? உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் வேறு வழியாக உங்களால் உணர முடிகிறது. அது தான் அபரோக்ஷ என்று அழைக்கப்படுகிறது. ப்ரத்யக்ஷ பரோக்ஷ அபரோக்ஷ. இப்படியாக, கிருஷ்ண உணர்வு என்றால் அதோக்ஷஜ மற்றும் அப்ராக்ருத, அதாவது ஜட புலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, பகவத் கீதையில் 'அதோக்ஷஜ', என்று கூறப்பட்டுள்ளது. நேரடி புலக்காட்சி நெருங்க முடியாத விஷயம். ஆக நேரடி புலக்காட்சியால் அறிய முடியாத பட்சத்தில், உங்களால் எப்படி அந்த அனுபாவ என்பதை உணர முடியும்? அது தான் ஷ்ரோத-பந்தா. அதுதான் ஷ்ருதி. நீங்கள் வேதங்களிலிருந்து அறிவைப் பெற வேண்டும். மற்றும் அந்த வேத அறிவோ குருவால் விளக்கப்படும். எனவேதான் ஒருவர், பரம குருவான கிருஷ்ணரிடமோ, அவரது பிரதிநிதியிடமோ அடைக்கலம் நாட வேண்டும். பிறகு இந்த அனைத்துப் பிரச்சனைகளையும், அதாவது அறியாமையையும், நம்மால் போக்க முடியும். யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் (பகவத் கீதை 2.8).