TA/Prabhupada 0254 - வேத அறிவு குருவால் விவரிக்கப்படுகிறது

Revision as of 07:36, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0254 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8 -- London, August 8, 1973

எனவே முதலில் நாம் அனைவரும் மனிதர்களே, யாரும் மனித த் தன்மையற்று இல்லை. கிருஷ்ணர் சொல்கிறார் ... அவர் சொல்வார்: “இந்த வீரர்களும், இந்த அரசர்களும், நீயும், நானும், என் அன்பே அர்ஜுனா, நாம் கடந்த காலத்தில் வாழ்ந்திருக்காமல் ஒன்றும் இல்லை. எதிர்காலத்தில் நாம் இல்லாமலும் போகப்போவதில்லை." எனவே கிருஷ்ணரின் இந்தக் குறிப்பிட்ட போதனையான: "நான், நீ மற்றும் இந்த அரசர்கள் அனைவரும், மேலும் இங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும், அவர்கள் முன்பும் இருந்தார்கள். இப்போது நாம் இருப்பது போலவே, தனிப்பட்ட நபர்களாக, அதே போல் அவர்களும் தனிப்பட்ட நபர்களாக இருந்தார்கள். மேலும் எதிர்காலத்திலும் நாம் தனிப்பட்ட நபர்களாக இருப்போம்". எனவே, அங்கு மனிதத்தன்மை இல்லாததைப் பற்றிய கேள்வி எங்கே? இந்த முட்டாள்தனமான மனிதத்தன்மை துறந்தவர்கள், சூனியவாதிகள். எனவே, இங்குக் கொள்கை என்னவென்றால், ஒருவர் விஷயங்களை உண்மையில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அர்ஜுன ன் அணுகியதைப் போல் கிருஷ்ணரை அணுக வேண்டும், śiṣyas te 'ham: (BG 2.7) "இப்போது நான் உங்கள் சிஷ்யன். நீங்கள் எனக்குப் போதனை செய்யுங்கள். Śādhi māṁ prapannam. நான் சரணடைகிறேன். நான் உங்களோடு சம நிலையில் பேச முயற்சிக்கவில்லை” என்று. ஒரு குருவை ஏற்றுக்கொள்வதென்றால் அவர் கூறுவதை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ஒரு குருவை உருவாக்காதீர்கள். அதை ஒரு நாகரீகமாக்காதீர்கள். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான் prapannam என்று அழைக்கப்படுகிறது. Tad viddhi praṇipātena BG 4.34). சரணடைவதால் மட்டுமே நீங்கள் புரிந்து கொள்ள முடியும், குருவை சோதித்து இல்லை. "நான் அவரைச் சோதிக்துப் பார்க்கிறேன், எவ்வளவு, எவ்வளவு அவருக்குத் தெரியும் என்று” பின் குருவை ஏற்றுக் கொண்டு என்ன பயன்? இல்லை. எனவே அர்ஜுனன் சொல்கிறார்: "உம்மைத் தவிர, இந்தக் குழப்பமான நிலையில் எனக்கு ஆறுதல் தர வேறு யாரும் கிடையாது" என்று. Yac chokam ucchoṣaṇam indriyāṇām (BG 2.8). "எனது உணர்ச்சிகள் வறண்டு போய்விட்டது”. ஏனெனில் மேலோட்டமான உணர்ச்சிகள்... உண்மையான உணர்ச்சிகள் இல்லை. உண்மையான உணர்வு உள்ளிருந்து வருவதே. Hṛṣīkeṇa hṛṣīkeśa-sevanam (CC Madhya 19.170). நாம் கிருஷ்ணருக்கு சேவை புரிய வேண்டும், Hṛṣīkeśa -ருக்கு... கிருஷ்ணர் தான் நிஜம், நாம் அந்த உண்மை நிலைக்கு வர வேண்டும். பின் நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடியும். Hṛṣīkeṇa. Tat paratvena nirmalam. நம் உணர்வுகள் புனிதமடையும்போது. Indriyāṇi parāṇy āhur indriyebhyaḥ paraṁ manaḥ, manasas tu paro buddhir (BG 3.42). இதில் பல்வேறு நிலைகள் உள்ளன. இந்த உடல் சம்பந்தப்பட்ட வாழ்க்கை தத்துவம் உணர்வுகளைக் குறிக்கிறது. ஆனால் நீங்கள் இந்த உணர்வுகளைக் கடந்தால் மன ரீதியான மேடைக்கு வந்துவிடுகிறீர்கள். நீங்கள் அந்த மன ரீதியான மேடையைக் கடக்கும்போது அறிவுப்பூர்வமான மேடைக்கு வருகிறீர்கள். அறிவுப்பூர்வமான மேடைக்கு வரும்போது, அதைக் கடந்தபின், பிறகு நீங்கள் ஆன்மீக மேடைக்கு வருகிறீர்கள். அது தான் ஆன்மீக வடிவம். அதில் வெவ்வேறு நிலைகளும் படிகளும் உள்ளன. மொத்த உடலாகிய மேடையிலிருந்து நாம் pratyakṣa-jñānam-த்தைக் கோருகிறோம். Pratyekṣa என்றால் நேரடி கருத்து என்று அர்த்தம். ஞானத்தில் பல்வேறு நிலைகள் உள்ளன. Pratyakṣa, aparokṣa, pratyakṣa, parokṣa, aparokṣa, adhokṣaja, aprakṛta. இவை ஞானத்தின் பல்வேறு நிலைகள். எனவே இந்த உடல் சம்பந்தப்பட்ட மேடையிலிருந்து நாம் பெறும் அறிவு, நேரடி கருத்தாகுமே தவிர உண்மையான ஞானம் ஆகாது. எனவே, விஞ்ஞானிகளுக்குச் சவால் விடலாம், விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு. அவர்களது அடிப்படை அறிவின் தத்துவம் வாழ்வின் உடல் சார்ந்த கருத்தைச் சார்ந்தது, Pratyekṣa, சோதனை அறிவு. சோதனை அறிவு என்பது மொத்த உணர்வுகளின் கருத்தாகும். அது சோதனைகளைச் சார்ந்ததாகும். Pratyakṣa. அனைவரும்: "நாம் கடவுளைக் காண்பதில்லை" என்று சொல்கிறார்கள். கடவுள் ஒன்றும் நீங்கள் Pratyekṣa- நேரடி உணர்வை வைத்துக் காணும்படியான கருப்பொருள் கிடையாது. கடவுளுக்கு Anubhāva என்று மற்றொரு பெயர் இருக்கிறது. Anubhāva. இந்த அறையிலிருந்து நம்மால் சூரியனைக் காண இயலாததைப் போல். ஆனால் சூரியன் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இது பகல் நேரம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் பார்க்கவில்லை. ஆனால் பிற வழிகளின் மூலம் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். அது தான் aparokṣa என்று அழைக்கப்படுவது. Pratyakṣa parokṣa aparokṣa. இதே ரீதியில், கிருஷ்ண பக்தி உணர்வு, என்பது adhokṣaja-வாக, aprakṛta-வாக இருக்கிறது, உணர்வுகளுக்கு அப்பால். எனவே, பகவத் கீதையில் adhokṣaja என்று கூறப்பட்டுள்ளது. நேரடி உணர்வுகள் அங்கே அடைய முடியாது. எனவே நேரடி உணர்வுகள் அடைய முடியாதெனில், நீங்கள் எப்படி anubhāva-வை உணர முடியும்? அது தான் śrota-panthā. அது śruti என்பதாகும். நீங்கள் வேதங்களிலிருந்து அறிவைப் பெற வேண்டும். அந்த வேத அறிவோ குருவால் விவரிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் கிருஷ்ணரையோ அவரது பிரதிநிதியையோ உயர் நிலை குருவாகக் கொண்டு புகலிடம் பெற வேண்டும். பிறகு இந்த அனைத்துப் பிரச்சனைகளையும், அதாவது அறியாமையை, போக்கிவிடலாம். Yac chokam ucchoṣaṇam indriyāṇām (BG 2.8).