TA/Prabhupada 0257 - இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி விலக்கி வைக்க முடியும்?

Revision as of 10:12, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0257 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 27, 1968

எனவே, உண்மையான தெய்வீகத்தின் உயரிய ஆளுமை பொருந்திய கிருஷ்ணரை வழிபடுவதே எங்கள் திட்டம் ஆகும். Govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi. இந்தப் பொருள் உலகில் அனைவரும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் துன்பத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் முயற்சி செய்கிறார்கள். இரண்டு விஷயங்கள் நடக்கின்றன, முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்குப் பல்வேறு செயல் முறைகள் உள்ளன. பொருள் ரீதியான செயல்முறை அபத்தமானது. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகையான பொருள் வசதிகளும், மகிழ்ச்சியும், மகிழ்ச்சி என்று அழைக்கப்படுவதும், நாம் நாடும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. அது சாத்தியம் அல்ல. பின்னர் பல்வேறு வகை பிற செயல்முறைகளும் உள்ளன. நம் பௌதிக வாழ்க்கையின் நிலையால் மூன்று வகையான கவலைகள் ஏற்படுகின்றன: ādhyātmic, ādhibhautic, ādhidaivic. Ādhyātmic உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது என்று அர்த்தம். இந்த உடலின் பல்வேறு வளர்சிதை செயல்பாடுகளில் சில மாற்றங்கள் நேரும்போது, நமக்குக் காய்ச்சல், சில வகை வலிகள், தலைவலி போன்றவை ஏற்படுகின்றன - பல விஷயங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த உடல் தொடர்பான கவலைகள் ādhyātmic என்று அழைக்கப்படுகின்றன. இந்த ādhyātmic துயரத்தின் மற்றொரு பகுதி மனதின் காரணமாக வருவது. எனக்கு ஒரு பெரும் இழப்பு நேர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். எனவே என் மனம் ஒரு நல்ல நிலையில் இல்லை. எனவே இதுவும் ஒரு வகை அவதியே. எனவே உடல் நோயுற்ற நிலையிலும், மனதின் அதிருப்தியினாலும், கவலைகள் ஏற்படுகின்றன. அதன் பின், ādhibhautic - மற்ற உயிரினங்கள் நமக்கு ஏற்படுத்தும் துன்பம். மனித இனத்தைச் சேர்ந்த நாம், தினசரி லட்சக் கணக்கில் பாவப்பட்ட விலங்குகளைக் கசாப்புக் கடைக்கு அனுப்புவதைப் போல. அவற்றால் வெளிப்படுத்த முடிவதில்லை, ஆனால் இது தான் ādhibhautic என்று அழைக்கப்படுகிறது, வாழும் பிற உயிரினங்களால் ஏற்படும் துன்பம். இதேபோல், பிற உயிரினங்கள்மூலம் ஏற்படும் கஷ்டங்களையும் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளின் சட்டத்தை உங்களால் மீற முடியாது. எனவே பௌதிக சட்டங்கள், மாநில சட்டங்களிடமிருந்து, நீங்கள் உங்களை ஒளித்துக் கொள்ளலாம், ஆனால் கடவுளின் சட்டத்திலிருந்து நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. அதற்குப் பல சாட்சிகள் உள்ளன. சூரியன் உங்கள் சாட்சி, சந்திரன் உங்கள் சாட்சி, காலை உங்கள் சாட்சி, இரவு உங்கள் சாட்சி, வானம் உங்கள் சாட்சி என்று. எனவே இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி மீற முடியும்? எனவே ... ஆனால் இந்த பொருள் இயல்பு என்பது, நாம் கஷ்டப்பட வேண்டும் என்றே நிறுவப்பட்டுள்ளது. Ādhyātmic, உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது, மேலும் பிற உயிரினங்கள்மூலம் ஏற்படுவது, மேலும் மற்றொரு துன்பம் ādhidaivic எனப்படுவது. Ādhidaivic, ஒருவருக்குப் பேய் பிடிப்பதைப் போல், பேய் அவரை ஆட்கொள்வது. பேயைப் பார்க்க முடியாது, ஆனால் அவர், சித்தப்பிரமை பிடித்து, எதையோ பிதற்றுகிறார். அல்லது பஞ்சமோ, பூகம்பமோ நேர்கிறது, போர் மூள்கிறது, நடப்பு வியாதிகள், பல விஷயங்கள் உள்ளன. எனவே துன்பங்கள் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் நாம் ஒட்டுவேலை செய்து சரிசெய்ய முயற்சி செய்கிறோம். துன்பங்கள் எப்போதும் இருக்கின்றன. அனைவரும் துன்பத்திலிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள், அது உண்மை. வாழ்க்கையின் முழு போராட்டமும் துன்பத்திலிருந்து வெளிவருவதற்கே ஆகும். ஆனால் பல வகையான பரிந்துரைகள் உள்ளன. ஒருவர் நீங்கள் இந்த வழியில் துன்பத்திலிருந்து வெளியே வரலாம் என்று கூறினால், வேறொருவர் அந்த வழியில் வரலாம் என்று கூறுகிறார். எனவே, நவீன விஞ்ஞானிகள், தத்துவ அறிஞர்கள், நாத்திகர்கள், ஆத்திகவாதிகள், காரியவாத நடிகர்கள் என்ற பலரின் பரிந்துரைகள் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணர் பக்தி இயக்கத்தின்படி, நீங்கள் இந்த அனைத்துத் துன்பங்களிலிருந்தும் வெளியே வந்துவிடலாம், உங்கள் உணர்வை மாற்றிக் கொண்டுவிட்டால் மட்டும், அவ்வளவு தான் அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு என்பதாகும். நான் உங்களுக்குப் பல முறை உதாரணம் கொடுத்துள்ளதைப் போல ... நமது எல்லாத் துன்பங்களுக்கும் அறிவின்மை, அறியாமை தான் காரணம். அந்த அறிவை நல்ல அதிகாரிகளின் சங்கம் மூலம் அடைய முடியும்.