TA/Prabhupada 0258 - நிர்மாணப்படி நாம் எல்லோரும் சேவகர்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0258 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 10:19, 31 December 2017



Lecture -- Seattle, September 27, 1968

வங்காளத்தில் ஒரு நல்ல வாசகம் இருக்கிறது, kṛṣṇa bhuliya jīva bhoga vāñchā kare pāsate māyā tāre jāpaṭiyā dhare நம் உண்மை உணர்வு பௌதிக இன்பத்தின் உணர்வால் இவ்வாறாகச் சீர்கெட்டுப் போனவுடன், "நான் இந்தப் பொருள் வளங்களை அடக்கி ஆள வேண்டும் ..." என்று… இந்த வழியில் நம் உணர்வைத் திருப்பிய உடனேயே, நம் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உடனடியாக மாயை. "இந்தப் பௌதிக உலகை என்னால் இயன்ற வரை அனுபவிக்க முடியும் ..." என்ற இந்த உணர்வே, ஒவ்வொருவரும் இதைச் செய்ய முயற்சிக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும், சிறு எறும்பிலிருந்து மிக உயர்ந்த உயிரினம்வரை, பிரம்மர், அனைவரும் ஒரு தலைவனாக முயற்சி செய்கிறோம். சமீபத்தில் உங்கள் நாட்டின் ஜனாதிபதியாவதற்குப் பலரும் பிரசாரம் செய்ததைப் போல. ஏன்? அதே கருத்து தான். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தலைவன் ஆவதிலேயே இருக்கின்றனர். இது தான் மாயை. எங்கள் கிருஷ்ணர் பக்தி இயக்கம் இதற்கு முற்றிலும் நேர் எதிரானதாகும். நாங்கள் கிருஷ்ணரின் சேவகரின் சேவகரின் சேவகரின் சேவகராக மட்டுமே முயற்சி செய்கிறோம். சற்றே நேர்மாறாக. தலைவன் ஆவதற்குப் பதிலாக, நாங்கள் கிருஷ்ணரின் அடியவருக்கு தொண்டராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் Gopī-bhartuḥ pada-kamalayor dāsa-dāsānudāsaḥ (CC Madhya 13.80). எனவே இந்த நாகரிகத்தின் நவீன போக்கில், மக்கள் இதை அடிமை மனப்பான்மை என்று அழைக்கலாம். இது மிகவும் நல்ல எண்ணம் தான். "நான் ஏன் ஒரு அடிமை ஆக வேண்டும்? நான் தலைவன் ஆகிறேன்." ஆனால், "நான் தலைவன் ஆக வேண்டும்" என்ற இந்த உணர்வு தான், ஒருவரின் துன்பத்திற்குக் காரணம் என்று அவருக்குத் தெரியாது. இந்தத் தத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் நிர்மாணப்படி நாம் அனைவரும் சேவகர்களே. இந்த பொருள் உலகின் தலைவன் ஆகப் போகிறோம் என்ற பெயரில் நாம் நம் புலங்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டோம். ஏனெனில் நிர்மாணப்படி நாம் சேவகர்களே. நம்மால் சேவை புரியாமல் இருக்க முடியாது. இந்தக் கூட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் ஒவ்வொருவரும் சேவகரே. இப்போது, கிருஷ்ண பக்தியை மேற்கொண்டிருக்கும் இந்தச் சிறுவர்கள், அவர்கள் கிருஷ்ணரின் சேவர்கர்கள் ஆக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் பிரச்சனை தீர்ந்துவிட்டது. ஆனால் "நான் ஏன் இறைவனுக்கோ அல்லது ஒரு ஸ்வாமிஜிக்கோ சேவகன் ஆக வேண்டும்? நான் தலைவன் ஆகிவிடுவேன் ..." என்று எண்ணும் மற்றவர்கள், ஆனால் உண்மையில்அவரால் தலைவன் ஆக முடியாது. அவர் தன் புலங்களின் சேவகன், அவ்வளவு தான். சற்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சேவகனாகத் தான் அவர் இருக்க முடியும், ஆனால் அவர் தன் காமத்தின் சேவகன், , தனது ஆசைப் பெருக்கின் சேவகன், தனது பேராசையின் சேவகன், தனது கோபத்தின் சேவகன், பல விஷயங்களுக்கும் சேவகன். Kāmādīnāṁ kati na katidhā pālitā durnideśāḥ. உயர் நிலையில் ஒருவர் மனிதாபிமானத்தின் சேவகராக மாறிவிட்டார் என்றால், மற்றொருவர் சமூகத்தின் சேவகராக மாறிவிட்டார், இன்னும் ஒருவரோ நாட்டின் சேவகராக மாறிவிட்டார், ஆனால் உண்மையான நோக்கம் என்னவோ "நான் தலைவன் ஆக வேண்டும்” என்பது தான். அந்த நோய் இருக்கிறது. ஜனாதிபதியாகப் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் தங்கள் வேறுபட்ட வெளிப்பாடுகளை, , "நான் மிக நல்ல முறையில் நாட்டிற்காகச் சேவை புரிவேன். எனக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்" என்று வழங்குகின்றனர். ஆனால் உண்மையான எண்ணமோ, "எப்படியோ, நான் இந்த நாட்டின் தலைவன் ஆக வேண்டும்” என்பதே. எனவே இது தான் மாயை. எனவே இந்தச் சிறிய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டுவிட்டால் ... அதாவது நிர்மாணப்படி நான் ஒரு சேவகன் என்பதை... எந்தச் சந்தேகமும் இல்லை. "நான் சுதந்திரமானவன், நான் தலைவன்." என்று யாராலும் சொல்ல முடியாது. எந்தச் சந்தேகமும் இல்லை. "நான் சுதந்திரமானவன், நான் தலைவன்." என்று யாராலும் சொல்ல முடியாது.