TA/Prabhupada 0260 - புலன்களின் தூண்டுதலால் ஒவ்வொரு பிறவியிலும் நாம் பாவச் செயல்களை புரிந்து கொண்டிருக்க

Revision as of 10:30, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0260 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 27, 1968

உணர்வுகள் எவ்வளவு வலுவானவை என்பதை பொதுவாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இளைஞர்கள் மட்டுமே புலன்களின் சேவகர்கள் என்பதில்லை. எழுபத்தைந்து, எண்பது வயதினரும் கூட, அல்லது சாகும் தருவாயில் இருப்பவர்கள் கூட, புலன்களின் சேவகர்களாக இருக்கின்றனர். புலன்களுக்குத் திருப்தி என்பதே கிடையாது. அது தான் பௌதிகத்தின் தூண்டுதல் ஆகும். எனவே நான் ஒரு சேவகன் தான். நான் என் புலங்களின் சேவகன், என் புலங்களுக்குச் சேவை செய்வதன் மூலம், நானோ என் புலன்களோ திருப்தி அடைவதில்லை, அவற்றுக்கு என்மேல் சந்தோஷமும் இல்லை. எல்லாம் குழப்பம் தான். ஆக இது தான் பிரச்சனையே. எனவே சிறந்த து... எனவே கிருஷ்ணர் சொல்கிறார், இறைவனாகிய கிருஷ்ணர் சொல்கிறார், sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ (BG 18.66) என்று. நீங்கள் உங்கள் புலன்களுக்குப் பல பிறவிகளை எடுத்துச் சேவை செய்துவிட்டீர்கள், பிறவிமேல் பிறவி எடுத்து, 8,400,000 வகையான உயிரினங்களாக. பறவைகள், அவையும் புலன்களுக்கு உட்பட்டனவே. மிருகங்கள், அவையும் புலன்களுக்கு உட்பட்டனவே. மனிதர்கள், மானிடர்கள், அனைவரும், அவதாரங்கள், இந்தப் பௌதிக உலகில் உள்ள அனைவரும் புலன்களுக்குப் உட்பட்டவர்களே, புலங்களுக்குச் சேவை புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார் "நீங்கள் என்னிடம் சரணடைந்து மட்டும் விடுங்கள். எனக்குச் சேவை செய்ய உடன்பட்டாலே போதும். அதன் பின்னர் நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்" அவ்வளவுதான். Ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ. ஏனெனில், உணர்வுகளின் தூண்டுதலால் நாம் பாவச் செயல்களை ஒவ்வொரு பிறவியிலும் புரிந்து கொண்டிருக்கிறோம் எனவே நாம் உடல் வகையிலும் வெவ்வேறு நிலையில் இருக்கிறோம். அனைவரும் ஒரே நிலையில் உள்ளோம் என்று நினைக்க வேண்டாம். இல்லை. தன் வேலையைப் பொருத்து ஒவ்வொருவரும் உடல் வகையைப் பெறுகின்றனர். இந்த வெவ்வேறு உடல் வகைகளின் காரணம் உணர்வுகளைத் திருப்திப் படுத்துவதற்கான வெவ்வேறு நிலைகளே. எனவே உணர்வுகளைத் திருப்திப்படுத்துவது என்பது காட்டுப்பன்றியின் வாழ்விலும் கூட இருக்கிறது. அதற்கேன் பன்றியின் உடல் வழங்கப்பட்டிருக்கிறது? அது தன் தாய் யார், சகோதரி யார், இவர் யார், அவர் யார் என்ற எந்தப் பாகுபாடுமே இல்லாத வகையில் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறது. இது நடைமுறையில் உள்ளது தான், நீங்கள் பார்க்கிறீர்கள். நாய்களும் காட்டுப்பன்றிகளும் அப்படித் தான். மனித சமுதாயத்திலும் கூடத் தன் சகோதரி யார், தாய் யார், இவர் யார் என்றெல்லாம் கவலைப்படாதவர்கள் பலர் உள்ளனர். உணர்வுகளும் வலுவாக உள்ளன. நமது துன்பங்கள் அனைத்திற்கும் இது தான் காரணம், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் அனுபவிக்கும், நாம் தீர்வு காண முயற்சிக்கும், இம்மும்மடங்கு துன்பங்களும், புலன்களின் தூண்டுதலால் தான் நேர்கின்றன. எனவே கிருஷ்ணர் இருக்கிறார். கிருஷ்ணர் இருக்கிறார். அவரது பெயர் மதன்-மோகனா ஆகும். உங்கள் அன்பை உணர்ச்சிகளின் வசத்திலிருந்து கிருஷ்ணரிடம் மாற்ற முயற்சி செய்தால், நீங்கள் அதன் விளைவைப் பார்க்க முடியும். உடனடியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம். Sevonmukhe hi jihvādau (Brs. 1.2.234). எனவே இது தவறான முயற்சி, "நான் தான் அனைத்து ஆய்வுகளின் தலைவனாக இருக்க வேண்டும்," என்ற, "நான் தான் எல்லா கணக்கெடுப்பிலும் மன்னன்" என்ற இந்த அணுகுமுறையை விடுக்க வேண்டும். நிர்மாணத்தின்படி நாம் அனைவரும் சேவகர்களே. இப்போது, இந்தத் தருணத்தில், நாம் புலன்களின் சேவகர்களாக இருக்கிறோம். இப்போது, இந்தச் சேவை மனப்பான்மை கிருஷ்ணரிடம் மாற்றப்பட வேண்டும். Sevonmukhe hi jihvādau svayam eva sphuraty adaḥ. நீங்கள் இந்தச் சேவை மனப்பான்மையைக் கிருஷ்ணரிடம் மாற்றிக் கொண்ட உடனே, பின்னர் படிப்படியாக, நீங்கள் நேர்மையானவர்களாக ஆகி, பின் கிருஷ்ணர் புலப்படுகிறார், உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே ஆன சேவைப் பரிமாற்றம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் அவரை நண்பனாகவோ, தலைவனாகவோ, காதலனாகவோ, அல்லது… எவ்வளவோ வழிகள் உள்ளன. எப்படி இருந்தாலும் நீங்கள் அவரை நேசிக்க முயற்சி செய்து, அதில் நீங்கள் எந்த அளவு மனநிறைவு பெறுகிறீர்கள் என்று முயன்று பார்க்கலாம். இது தான் கிருஷ்ண பக்தி உணர்வு இயக்கம் ஆகும். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.