TA/Prabhupada 0305 -கடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திறக்க வேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0305 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0304 - Maya ne peut pas recouvrir le Tout Suprême|0304|FR/Prabhupada 0306 - Nous devrions soumettre nos doutes|0306}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0304 -பரம பூரணத்தை மாயையால் மறைக்க முடியாது|0304|TA/Prabhupada 0306 - நாம் நமது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய வேண்டும்|0306}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|9ZKW36y7Mms| கடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திறக்க வேண்டும் <br />- Prabhupāda 0305 }}
{{youtube_right|07m12LiMiPE| கடவுள் இறந்ததாக சொல்கின்றோம், ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை திறக்க வேண்டும் <br />- Prabhupāda 0305 }}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 19:09, 29 June 2021



Lecture -- Seattle, October 2, 1968


பிரபுபாதர்: படியுங்கள்


தமால கிருஷ்ணன்: "உயிர்வாழீ சூரிய ஒளியில் இருக்கும் அணுவளவான அம்சத்தைப் போல் தான், ஆனால் கிருஷ்ணரை தீவிரமாக ஜொலிக்கும் சூரியனுடன் ஒப்பிடலாம். பகவான் சைதன்யர், உயிர்வாழீகளை ஜொலிக்கும் தீ பொறிகளுடன் ஒப்பிட்டார் மற்றும் பரமேசுவரரை சூரியனின் தீவிரமாக ஜொலிக்கும் நெருப்புடன் ஒப்பிட்டார். பகவான் சைதன்யர் இந்த சந்தர்ப்பத்தில் விஷ்ணு புராணத்தின் ஒரு ஸ்லோகத்தை குறிப்பிட்டார். அதில், இந்த பிரபஞ்சத்தில் உள்ளது எல்லாம் பரமேசுவரரின் சக்தி மற்றுமே, என்று கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக, நெருப்பு ஓரிடத்திலிருந்து உதயமானாலும், எல்லாவற்றிலும் தனது ஒளியையும் வெப்பத்தையும் வெளிக்காட்டுகிறது. அதுபோலவே பகவான், ஆன்மீக உலகில் ஒரிடத்தில் வாசம் கொண்டிருந்தாலும், தனது வெவ்வேறு சக்திகளை எல்லாவற்றிலும் வெளிக்காட்டுகிறார்."


பிரபுபாதர்: இது மிக எளிதானது. புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த தீயைப் போல் தான். இந்த தீபம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது ஆனால் அதன் ஒளி இந்த அறை முழுவதும் பரவி இருக்கிறது. அதுபோலவே இந்த பிரபஞ்சத்தில் நமக்கு தென்படும் எல்லாமே பரமேஸ்வரரின் சக்தியின் வெளிப்பாடு பரமேஸ்வரர் ஒரு இடத்தில் இருக்கிறார். இது பிரம்ம-ஸம்ஹிதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது:


கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி


அவரும் ஒரு நபர் தான். உங்கள் ஜனாதிபதி திரு ஜான்ஸனைப் போல் தான். அவர் வாஷிங்டனில் தன் அறையில் உட்கார்ந்திருக்கிறார், ஆனால் அவர் அதிகாரமும் சத்தியம் நாடு முழுவதும் செயல் படுகிறது. இது ஜட உலகிலேயே சாத்தியம் என்றால், பரமபுருஷரான பகவான் கிருஷ்ணர், அவர் தன் இடத்தில் அதாவது கடவுளின் சாம்ராஜ்யமான வைகுண்டத்தில் வாசம் செய்கிறார், ஆனால் அவரது சக்தி (எல்லாவற்றிலும்) செயல்படுகிறது. மற்றொரு உதாரணம், சூரியன். சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது, ஆனால் சூரியனின் ஒளி வெள்ளம் போல் உலகம் முழுவதும் பாய்வதை நாம் காண்கிறோம். சூரிய ஒளி உன் அறைக்குள்ளேயும் இருக்கிறது. அதுபோலவே, நீ உபயோகிக்கும் எல்லாம், உன்னை உட்பட, நாம் எல்லாம், பகவானின் சக்தியின் வெளிக்காட்டுதல் ஆவோம். ஆவரிலிருந்து நாம் வேறல்ல. ஆனால் மாயை என்னும் மேகம் நம் கண்களை மூடும்பொழுது நம்மால் சூரியனை காண முடிவதில்லை. அதுபோலவே வாழ்வின் ஜட உணர்வினால் நாம் மூடப்பட்டிருக்கும் பொழுது, நம்மாள் கடவுளை புரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுள் இறந்ததாக நாம் நினைக்கிறோம். ஆகையால் மாயையால் மூடி இருக்கும் கண்களை நாம் திறக்க வேண்டும். அப்போது நீங்கள் கடவுளை நேரடியாக பார்க்கலாம்: "இதோ கடவுள் இங்கே இருக்கிறார்." ஆம். பிரம்ம-ஸம்ஹிதாவில் கூறப்பட்டிருக்கிறது,


ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு-விலோகயந்தீ யம் ஷ்யாமஸுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி ( பிரம்ம-ஸம்ஹிதா 5.38 )


அந்த ரமபுருஷரான பகவான், ஷ்யாமஸுந்தரர் ஆவார். ஷ்யாமஸுந்தர. ஷ்யாம என்றால் கருநிறம் ஆனால் மிக, மிக அழகானது. அந்த பேரழகர், பரமபுருஷரான கிருஷ்ணர், தெய்வத்தன்மை உடையவர்களால் எப்பொழுதும் பார்த்து கண்டறிய படுகிறார்.


ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன


எப்படி அவர்களால் பார்க்க முடிகிறது? ஏனென்றால் அவர்கள் கண்கள் பிரேமை எனும் மருந்தால் தூய்மை அடையப் பட்டுள்ளது. நோயுள்ள கண்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்தை வாங்கி போட்டுக்கொண்டால், உன் பார்வை பிரகாசமானதாகவும் தெளிவானதாகவும் ஆகி, அனைத்தையும் சிறப்பாக பார்க்கமுடிகிறது. அதுபோலவே எப்பொழுது உனது பௌதீக கண்கள் கடவுளின் பிரேமையால் உபசரிக்கப்படுகின்றதோ, அப்பொழுது நீ கடவுளை காண்பாய்," கடவுள் இதோ இருக்கிறார்." கடவுள் இறந்துள்ளார் என்று நீ கூறமாட்டாய். மேலும் அந்த மூடல் திறந்தாக வேண்டும். மற்றும் அந்த மூடலை திறப்பதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும். மிக நன்றி.