TA/Prabhupada 0316 - நகல் செய்யாதீர்கள், அது ஆபத்தானது

Revision as of 10:57, 25 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0316 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.5 -- Mayapur, February 25, 1977


பிரபுபாதர்: நாம் உடனடியாக மிகச்சிறந்த பக்தனாக முடியாது. நம்மால் ஹரிதாஸ் தாக்குரைப் போலவே நடந்து கொள்ளமுடியாது. அது சாத்தியம் அல்ல. ஆனால் குறைந்தபட்சம் இருக்கலாம்.


ஸங்க்யா-பூர்வக-நாம-கான-நதிபி (ஷட்-கோஸ்வாமி-அஷ்டகம்)


நாம் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை தொடர்ந்து பின்பற்றவேண்டும். மேலும் நாம் அப்படித்தான் செய்திருக்கிறோம், அதனால்... பெயரளவில் இருக்கும் நமது சில பக்தர்கள், நான் வெறும் பதினாறு மாலைகளுக்கான எல்லை அமைத்ததை என்‌ தவறாக கூறுகிறார்கள். அப்படி கிடையாது, ஏன் பதினாறு மாலைகள்? நீங்கள் முன்னூறு மாலைகள் ஜெபிக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் பதினாறு மாலைகள் ஜெபிக்கவேண்டும், ஏனென்றால் அதிக நேரம் முழுமையாக ஈடுபடுவதில் நமக்கு பழக்கமில்லை. நாம் எப்பொழுதும் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரிடத்தில் உட்கார்ந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பது, கட்டுண்ட ஆன்மாவுக்கு சாத்தியம் அல்ல - அவன் முக்தி பெற்றவனாக இருந்தால் ஒழிய. ஆக நகல் செய்ய முயற்சி செய்யாதீர்கள். என் குரு மகாராஜர் தீவிரமாக கண்டித்திருக்கிறார், "ஹரிதாஸ் தாக்குர், ரூப கோஸ்வாமீயைப் போன்ற உயர்ந்த பிரமுகர்களை நகல் செய்யாதீர்கள்." அவர் சொல்லுவார்


ரூப கோஸ்வாமீ கே மோக வாஞ்சா


ரூப கோஸ்வாமீ ஒரு இடுப்பு வேஷ்டியை மட்டுமே அணிந்திருப்பார்...


த்யக்த்வா தூர்ணம் அஷேஷ-மண்டல-பதி-ஷ்ரேணீம் ஸதா துச்சவத் பூத்வா தீன-கணேஷகௌ கருணயா கௌபீன-கண்ட


ஆக ரூப கோஸ்வாமீயை நகல் செய்து எந்த பிரயோஜனமும் இல்லை. பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் பீடி ஊதுவது. (சிரிப்பு) இப்படி அயோக்கியத்தனம் செய்யாதீர்கள். நகல் செய்வதால் எந்த பயனும் இல்லை. அனுஸரண, அனுகரண கூடாது. அனுகரண ஆபத்தானது. அனுஸரண. ஸாது-மார்கானுகமம். இது தான் பக்தி. நாம் உயர்ந்த பக்தர்களால், சாதுக்களால் வகுக்கப்பட்ட பாதையை பின்பற்ற முயற்சி செய்வோம். நம்மால் முடியாது... நாம் பின்பற்ற முயற்சி செய்யலாம். நகல் செய்யாதீர்கள். அது ஆபத்தானது. நமது பக்தர்கள் சிலர், "இங்கே பஜனை இல்லை", என்று விட்டுச் சென்றார்கள் (சிரிப்பு) மற்றும் வேறு குருவை தேடுவதற்காக என் ஆசீர்வாதத்தை வேண்டினார்கள். அவனுக்கு வேறு ஒரு குருவை தேடுவதற்காக என் ஆசீர்வாதம வேணுமாம். இது எதுக்கும் உதவாத அயோக்கியத்தனம். ஆக சிறந்தது,


மஹாஜனோ யேன கத: ஸ பந்த(CC Madhya 17.186)


இது தான் மகாஜன. பிரகலாத மகாராஜர் மகாஜனர்களில் ஒருவர். பன்னிரண்டு மகாஜனர்களில் பிரகலாத மகாராஜரும் ஒருவர்.


ஸ்வயம்புர் நாரத: ஷம்பு: கபிலோ மனு: ப்ரஹலாத (SB 6.3.20-21)


பிரகலாத மகாராஜர் பெயரும் இருக்கிறது.


ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம் (SB 6.3.20-21)


ஆக பிரகலாத மகாராஜர் ஒரு மகாஜனர். ஆக பிரகலாத மகாராஜரை பின்பற்றுங்கள். அனுஸரண. ஸாது-மார்கானுகமம். ஆக பிரகலாத மகாராஜர் என்ற செய்தார்? அவர் தந்தை அவரை பல விதமாக துன்பப்படுத்தினார். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் வரும் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டிருந்தார், "நான் என்ன செய்வது? என் தந்தை எதிர்க்கிறார்." இதுதான்

மன்-மனா பவ மத்-பக்த


இறுதியில் அவர் தந்தை வதம் செய்யப்பட்ட பொழுது, அவர் வணக்கங்களை சமர்ப்பிக்கிறார். ஆக இந்த நான்கு விஷயங்கள், வகுக்கப்பட்ட பாதையை, ஒரு கலப்படமற்ற பக்தனைப் போல், நேர்மையுடன் பின்பற்றுங்கள்.


ஸர்வோபாதி-வினிர்முக்தம் (CC Madhya 19.170)


பிரகலாத மகாராஜர் ஒருபோதும் "நான் இரண்யகசிபுவின் மகன்." என்று நினைக்கவில்லை. அவர் எப்போதும், "நான் நாரதரின் சேவகன்." என்று நினைத்தார். அவர் அவ்வாறு கூறினார். பகவான் அவருக்கு வரம் தர விரும்பியப்போது, அவர் நரசிம்ம-தேவரிடம் கேட்டார், "உங்கள் சேவகனாகிய நாரதரிடம் நான் இந்த கற்பித்தலை பெற்றிருக்கிறேன். தயவுசெய்து என்னை அவர் தொண்டிலேயே ஈடுபடுத்துங்கள்." அவர் ஒருபோதும், "நான் என் தந்தையிடம் பணியாற்ற விரும்புகிறேன்." என்று கூறவில்லை. இல்லவேயில்லை. ஏனென்றால் அவருக்கு கல்வியை வழங்கியிருந்தார், அவர் எப்பொழுதும்... சக்ஷுதான் திலோ ஜன்மே ஜன்மே பிதா ஸேயி. அவர் தான் தந்தை. வேறு யாரும் தந்தையல்ல. சக்ஷுதான் திலோ ஜன்மே ஜன்மே பிதா ஸேயி. அடுத்த வரி என்ன?


பக்தர்கள்: திவ்ய ஞான ஹ்ருதே ப்ரகாஷிதொ.


பிரபுபாதர்: ஆம், திவ்ய ஞான ஹ்ருதே ப்ரகாஷிதொ. ஆகையால் அவர் தான் தந்தை ஆவார். ஆக நாம் இதை எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். திடீரென முன்னுக்கு வந்தவனாக தன்னை கருதி, உங்கள் கற்பனைக்கு அடிமையாகி இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை விட்டு செல்லாதீர்கள். மிக நன்றி.