TA/Prabhupada 0324 - வரலாறு என்றால் சிறந்த மனிதருடைய செயல்களைப் புரிந்துகொள்வது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0324 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Chicago]]
[[Category:TA-Quotes - in USA, Chicago]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0323 - Créer une société de cygnes, pas de corbeaux|0323|FR/Prabhupada 0325 - Essayer de répandre ce mouvement et ce sera votre sadhana|0325}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0323 - அன்ன பறவைகள் கூட்டம் உருவாக்க தானே ஒழிய காகங்களின் கூட்டம் சேர்பதற்கல்ல|0323|TA/Prabhupada 0325 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்ப முயற்சி செய்யுங்கள், இது தான் உங்கள் சாதனா|0325}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|erz5tNtY6ic|வரலாறு என்றால் சிறந்த மனிதருடைய செயல்களைப் புரிந்துகொள்வது<br />- Prabhupāda 0324}}
{{youtube_right|U-iID3Gu_Gg|வரலாறு என்றால் சிறந்த மனிதருடைய செயல்களைப் புரிந்துகொள்வது<br />- Prabhupāda 0324}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 42: Line 42:




''சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ'' ([[Vanisource:BG 4.13|BG 4.13]])
''சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ'' ([[Vanisource:BG 4.13 (1972)|பகவத்-கீதை 4.13]])





Latest revision as of 19:15, 29 June 2021



Lecture on SB 6.1.20 -- Chicago, July 4, 1975

இந்த குருக்ஷேத்திரம் ஒரு தர்ம-க்ஷேத்திரம். அங்கு போர் நிகழ்ந்து மற்றும் போர்களத்தில் கிருஷ்ணர் இருந்ததால் அதற்கு தர்ம-க்ஷேத்திரம் என்று பெயர் என்று கருதுவது தவறு. சிலசமயம் அவ்வாறு அர்த்தம அளிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் குருக்ஷேத்திரம் என்பது மிக நீண்ட காலமாகவே தர்ம-க்ஷேத்திரமாக இருந்தது. வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது,


குரு-க்ஷேத்ரே தர்மம் ஆசரேத்


"ஒருவருக்கு தனது மதச்சடங்கை நிகழ்த்த வேண்டும் என்றால், அவன் குருக்ஷேத்திரத்துக்கு செல்லவேண்டும்." மற்றும் இந்தியாவில் இன்னும் இந்த வழக்கம் உண்டு, இருவருக்கு நடுவில் ஏதாவது சண்டை சச்சரவு இருந்தால், அவர்கள் கோயிலுக்கு செல்வார்கள் - கோயில் என்றால் தர்ம-க்ஷேத்திரம் - யாருக்கும் தெய்வத்திற்கு முன்பே பொய் பேச தைரியம் வராது என்பதால் அப்படி செய்வார்கள். சமீபத்தில் கூட இது நடந்து கொண்டிருந்தது. தாழ்ந்த மனப்பான்மை உள்ளவனாக இருந்தாலும், "நீ பொய் பேசுகிறாய். தெய்வததின் முன்னால் நின்று சொல்," என்று சவால் விட்டால் அவன் தயங்குவான், "முடியாது."


இந்தியாவில் இன்னுமும் இப்படித்தான். கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் பொய் பேச முடியாது. அது குற்றம். கோவிலில் இருக்கும் மூலவரை வெறும் பளிங்கு சிலை என்று நினைக்காதீர்கள். இல்லை. ஸ்வயம் பகவான். சைதன்ய மஹாப்ரபுவைப் போல் தான். மூலவரான ஜகன்னாதரை கண்டவுடனே அவர் மயங்கினார். "ஓ, எம்பெருமான் இங்கு இருக்கிறார்." நம்மைப் போல் அல்ல: "ஓ, இதோ ஒரு சிலை இருக்கிறது." இல்லை. இது உணர்வை பொறுத்தது. நீ உணர்ந்தாலும் சரி உணராமல் இருந்தாலும் சரி, மூலவர் மூர்த்தி என்றால் சாக்ஷாத் அந்தப் பரம புருஷரான முழுமுதற் கடவுளே தான். நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மூலவர் மூர்த்தி முன்னிலையில் எந்த பிழையும் செய்யாமல் இருக்க மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவரை சேவிப்பதில், பிரசாதத்தை நைவேத்தியம் செய்வதில், அவருக்கு அலங்காரம் செய்வதில், "இங்கு சாக்ஷாத் கிருஷ்ணரே இருக்கிறார்." என எப்பொழுதும் நினைக்கவேண்டும். அவர் உண்மையில் அங்கு இருக்கிறார் ஆனால் நம்முடைய அறிவுக் குறைவால் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. சாத்திரத்தில் இருக்கும் எல்லாத்தையும் நாம் பின்பற்றவேண்டும். இது தான் பிராம்மண கலாச்சாரம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் பிராம்மண கலாச்சாரம் - சிறந்த மனிதர்களாக இருப்பவர்களுடைய கலாச்சாரத்தின் வெளிப்படுத்தல். மனித சமுதாயத்தில் பிராம்மணன் என்பவன் சிறந்த மனிதனாக இருப்பவன் என்று புரிந்துக் கொள்ளவேண்டும். ஆகையால் கிருஷ்ணர் கூறுகிறார்,


சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ (பகவத்-கீதை 4.13)


இதிஹாஸ, வரலாறு, வரலாறு என்றால் சிறந்த மனிதருடைய செயல்களைப் புரிந்துகொள்வது. அது தான் வரலாறு. மிகவும் முக்கியமான சம்பவங்கள் குறிப்பிட படுகின்றன. ஆகையால் இங்கு உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதாவது உதாஹரந்தி இமாம் இதிஹாஸம் புராதனம். ஏனென்றால் இது ஒரு சிறந்த சம்பவம்... இல்லையெனில், ஒரு காலத்தில் நிகழும் எல்லா சம்பவங்களையும் பதவு செய்தால், பிறகு எங்கே அதை, யார் அதை படிப்பார், அதன் புகழை யாரால் உணர முடியும், மற்றும் அதை எங்கே வைப்பது? நாள்தோறும் பல விஷயங்கள் நிகழ்கின்றன.


ஆகையால் வேத விதிமுறைப்படி, வெறும் முக்கியமான சம்பவங்கள் மட்டுமே வரலாற்றில் பதவு செய்யப்படுகின்றன. ஆகையால் இதற்கு புராண என்று பெயர். புராண என்றால் பழங்கால வரலாறு. புராதனம். புராதனம் என்றால் மிகவும் பழங்கால. அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக இந்த ஸ்ரீமத் பாகவதம் என்பது மிகவும் பழமையான வரலாற்றின், சம்பவங்களின் இணைப்பு. இதிஹாஸ புராணானாம் ஸாரம் ஸாரம் ஸமுத்ருத்ய. சாரம் என்றால் மையப் பொருள். அனைத்து தேவையற்ற சம்பவங்களையும் பதிவு செய்வது அல்ல. அப்படி கிடையாது. சாரம் சாரம், பதிவு செய்யக்கூடிய முக்கியமான பொருள் மட்டுமே. இது தான் இந்திய வரலாறு. மகாபாரதம்... மஹா என்றால் பெரிய இந்தியா என்று சொல்லலாம். பெரிய இந்தியாவில் பல சம்பவங்கள் நிகழ்ந்தன, ஆனால் எல்லாத்தையும் விட முக்கியமான சம்பவம், குருக்ஷேத்திரத்தின் போர், இதில் இருக்கிறது. எல்லா போர்களையும் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.