TA/Prabhupada 0325 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்ப முயற்சி செய்யுங்கள், இது தான் உங்கள் சாதனா

Revision as of 13:37, 25 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0326 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

ஆக கிருஷ்ண பக்தி என்பது எவ்வளவு நல்லது. அது தான் சோதனை. இந்த இளைஞர்கள், இவர்களை எந்த நபரும் வந்து, எவ்வாறு அனுபவிக்கிறார்கள், என்று கேட்கட்டும். ஆன்மீகத்தில் திருப்தியை அனுபவித்தால் ஒழிய, எப்படி அவர்களால் எல்லாத்தையும் கைவிட்டு கிருஷ்ண பக்தியுடன் ஜெபிப்பதில் ஈடுபட முடியும்? ஆகையால் இது தான் சோதனை. நைஸாம் மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம். மதிஸ் தாவத். மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம். உருக்ரமாங்க்ரிம். உருக்ரம, கிருஷ்ணரின் மற்றொரு பெயர் உருக்ரம. உருக்ரம என்றால்... உரு என்றால் மிகவும் கடினமான மற்றும் க்ரம என்றால் அடிகள். வாமன அவதாரத்தில் கிருஷ்ணரை போல் தான். அவர் ஆகாயத்திலேயே அடி எடுத்து வைத்தார். ஆகையால் அவர் பெயர் உருக்ரம. சாதாரணமாக ஒருவரால் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் மீது தன் மனதை நிலைநிறுத்த முடியாது ஆனால்


மஹீயஸாம் பாத-ரஜோ-(அ)பிஷேகம் நிஷ்கின்சனானாம் ந வ்ரணீத யாவத்


அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும் வரையில் தான்.


அதாவது 'நிஷ்கின்சன' என்ற குணமுடைய நபரின் தாமரை பாதங்களின் தூசியை ஸ்பரிசம் செய்யாமல் இருக்கும்வரை, அதாவது எந்த பௌதீக ஏக்கங்களும் இல்லாமல் இருக்கும் குணமுடையவர்; மஹீயஸாம், மற்றும் அவர் வாழ்க்கை கிருஷ்ணருக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். இத்தகைய குணமுடையவரின் தொடர்பில் வந்த உடனேயே இந்த கிருஷ்ண உணர்வை அடையலாம். வேறு எந்த முறையாலும் முடியாது.


நைஸாம் மதிஸ் தாவத் உருகமாங்க்ரீம் (SB 7.5.32))


பரிசோதனை என்னவென்றால் ஸ்ப்ருஷதி அனர்தாபகமோ யத்-அர்த: மஹீயஸாம் பாதோ-ரஜோ-(அ)பிஷேகம், நிஷ்கின்சனானாம் ந வ்ரணீத யாவத். இது தான் சோதனை. இதுவே அங்கிகாரம் பெற்ற உண்மையான நபரை தேர்ந்து எடுக்கும் வழியும் ஆகும். அந்த நபரிடமிருந்து, அவர் கருணையால், அவர் அருளால், கிருஷ்ண உணர்வை கற்று பெற வேண்டும், ஆனால் கற்க ஆரம்பித்த உடனேயே, இந்த பௌதீக சிக்கல்களிலிருந்து அவன் விடுபடும் நேரம் தொடங்குகிறது. உடனேயே, உடனேயே. பிறகு படிப்படியாக முன்னேறுவதால் அவன் வாழ்க்கை புனிதமானதாகிறது. இங்கு ஒரு விஷயம்... ஒருவர் கேள்வி கேட்கலாம், யாராவது கிருஷ்ண பக்தியை உணர்ச்சி வசப்பட்டு ஏற்றுக்கொண்டிருந்து, அதை பரிபூரணமாக செய்யத் தவறினால் அதன் பலன் என்னவாகும்? அதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது.


த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர் (SB 1.5.17)


ஸ்வ-தர்மம். ஸ்வ-தர்ம என்றால் எல்லோருக்கும் ஏதாவது குறிப்பிட்ட கடமை, தொழில் இருக்கும். ஆக யாராவது தான் ஈடுபட்டிருக்கும் குறிப்பிட்ட கடமையை கைவிட்டால், த்யக்த்வா ஸ்வ-தர்மம்... எடுத்துக்காட்டாக பல இளைய ஆண்களும் பெண்களும் இங்கு வருகிறார்கள். அவர்கள் வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தார்கள் ஆனால் திடீரென அதை கைவிட்டுவிட்டு இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு பாகவதம் கூறுகிறது, த்யக்த்வா ஸ்வ-தர்மம்... ஸ்வ என்றால் தன்னுடைய ஈடுபாடுகள், தர்மம். இங்கு தர்மம் என்றால் மதம் அல்ல. தொழில் ரீதியான கடமைகள். த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர். ஒருவன் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சில உபதேசங்களை கேட்டு முடிவெடுக்கிறான், "நான் இப்பொழுதிலிருந்து கிருஷ்ண பக்தியை தொடங்குகிறேன்," என்று வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தனது பரிந்துரைக்கப்பட்ட கடமைகளை அல்லது தொழில் ரீதியான கடமைகளை, அவன் கைவிடுகிறான்.


த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர் பஜன்ன அபக்வோ அதா பதேத ததோ யதி (SB 1.5.17)


பஜன்ன. அவன் கட்டுப்பாட்டு கொள்கைகளைப் பின்பற்றி ஜெபிக்க தொடங்குகிறான், ஆனால் திடீரென பாதையிலிருந்து விலகி தாழ்வடைகிறான். அவன் தாழ்வு அடைகிறான். அவனால் கடைபிடிக்க முடியவில்லை. எதோ காரணத்தால் அல்லது சூழ்நிலைகளால் அவன் தாழ்வடைகிறான். ஆக பாகவதம் கூறுகிறது, "அப்படி தாழ்வடைந்திருந்தாலும் அவனுக்கு என்ன குறை?" பார்த்தீர்களா. அவன் கிருஷ்ண பக்தியில் பக்குவம் அடையாததனால் தாழ்வடைந்திருந்தாலும் அவன் பாழாகிவிடுவதில்லை. மேலும் பாகவதம் கூறுகிறது, கோ வார்த ஆப்தோ அபஜதாம் ஸ்வ-தர்மத:. மேலும் தன் தொழில் ரீதியான கடமைகளில் ஒருமுகமாக ஈடுபட்டிருப்பவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அவன் பாழாகிவிடுகிறான் ஏனென்றால் அவனுக்கு வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று தெரியாது.


ஆனால் இங்கு, சில நாட்களுக்காக நம்முடன் வந்து இருந்தாலும், ஒருவன் கிருஷ்ண பக்திக்கு வந்த பிறகு, கிருஷ்ண உணர்வு என்கிற கலப்படம் அவனிடம் ஏற்படுகிறது. அதனால் அவன் அடுத்த ஜென்மத்தில் மீண்டும் தொடங்குகிறான், அப்படி மீண்டும், மீண்டும் செய்கிறான். ஆக அவன் பாழாகிவிடுவதில்லை. கிருஷ்ண உணர்வின் ஒரு ஊசி, அவனை ஒருநாள் கிருஷ்ண பக்தியில் பக்குவம் அடையச் செய்யும், பிறகு அவன் கடவுளிடம், கடவுளின் திருவீட்டிற்கு செல்வது உறுதி. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்ப முயற்சி செய்யுங்கள். இது தான் உங்கள் பயிற்சி, துறத்தல், தவம். ஏனென்றால் உங்களை எதிர்த்து நிக்கும் பல விஷயங்களை நீங்கள் சந்தித்க வேண்டியிருக்கும். நீங்கள் அவைகளுடன் போரிட வேண்டியிருக்கும். அது தான் தபஸ்யா. நீங்கள் இவ்வளவு அவமானங்களை பொறுத்துக் கொள்கிறீர்கள், எவ்வளவு நச்சரிப்பு, மற்றும் எவ்வளவு தொந்தரவு, சௌகரியங்கள், செல்வம் எல்லாத்தையும் தியாகம் செய்திருக்கிறீர்கள் - ஆனால் இது பயன் இல்லாமல் போகாது. நிச்சயமாக பயன் இல்லாமல் போகாது. கிருஷ்ணர் உங்களுக்கு பொருத்தமான பயனை அளிப்பார். நீங்கள் தொடர்ந்து கிருஷ்ண பக்தியை நிகழ்த்துங்கள். மிக நன்றி.