TA/Prabhupada 0361 - அவர்கள் எனது குரு. நான் அவர்களது குரு அல்ல: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0361 - in all Languages Category:TA-Quotes - 1971 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Bombay]]
[[Category:TA-Quotes - in India, Bombay]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0360 - கிருஷ்ணரை நாங்கள் நேரடியாக சேவை செய்யமுடியாது நாம் கிருஷ்ண பக்தருக்கு முதலில் சேவை|0360|TA/Prabhupada 0362 - நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி குழுவினர் போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு|0362}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|hRQs4p_ruJw|அவர்கள் எனது குரு. நான் அவர்களது குரு அல்ல<br />- Prabhupāda 0361}}
{{youtube_right|UFekZXvmEC4|அவர்கள் எனது குரு. நான் அவர்களது குரு அல்ல<br />- Prabhupāda 0361}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/710329BG-BOM_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/710329BG-BOM_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->



Latest revision as of 19:27, 29 June 2021



Lecture on BG 7.3 -- Bombay, March 29, 1971

நாம் இந்த பக்தியை பின்பற்றினால், ஜபம் செய்வது, கிருஷ்ணரின் நாமங்களைக் கூறுவது, மிகவும் சுலபமானதாகும். இந்த இளைஞர்களுக்கு நான் இந்த கிருஷ்ண நாமத்தை ஜெபிக்கும் செயல்முறை வழங்கினேன், மற்றும் அவர்கள் மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால், அவர்களுக்கு கிருஷ்ணரை பற்றி படிப்படியாக புரிந்து கொள்ள முடியும். நீங்கள் பார்த்ததை போல பக்தியில் முன்னேற்றம் அடைந்தவர்கள் எப்படி ஆனந்தமாக ஆடினார்கள். அவர்கள் கிருஷ்ணரை அதிகமாக தெரிந்து கொண்டவர்கள். ஒரு எளிய முறையாகும். யாருக்கும் எந்த தடையும் இல்லை: ". நீங்கள் இந்து மதம் இல்லை நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரம் ஜபிக்க முடியாது."அல்ல. Yei kṛṣṇa-tattva-vettā sei guru haya (CC Madhya 8.128). ஒருவர் இந்து அல்லது முஸ்லீம் அல்லது கிரிஸ்துவர் அல்லது இது அல்லது அது என்பது ஒரு விஷயமே இல்லை. ஒருவர் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பக்தியை கற்று கொள்ள வேண்டும். பின்னர் அவர் ஒரு ஆன்மீக குரு ஆகலாம். இந்த இளைஞர்கள், இந்த இளைஞன் மற்றும் இந்த பெண் இப்போது தான் திருமணமானார்கள், நான் அவர்களை ஆஸ்திரேலியா அனுப்புகிறேன. இவர் ஆஸ்திரேலியா இருந்து வந்தவர், பெண் ஸ்வீடன் இருந்து வந்தவர். இப்போது அவர்கள் ஒற்றுமையாக இணைந்துள்ளனர். இப்போது அவர்கள் சிட்னி இருக்கும் எங்கள் அமைப்பை பார்த்துக்கொள்வார்கள். இப்போது, நான் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குளில் அவர்களை அனுப்புகிறேன். அவர்கள் கோவில் சேவை மற்றும் கிருஷ்ண பக்தியை பரப்புவார்கள் இதுவே கிருஷ்ணா பக்தி இயக்கம் அவர்களின் உதவியினால் அதிகரித்துக் கொண்டே போகிறது. நான் தனியாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னைஎனக்கு உதவி வருகின்றனர். அவர்கள் என் குருக்கள். நான் அவர்களின் குரு அல்ல. (கைதட்டல்) அவர்கள் என் குருவின் கட்டளையைச் செயல்படுத்த எனக்கு உதவி வருகின்றன. சிலர் ஆஸ்திரேலியா செல்கிறார்கள், சிலர் பிஜி தீவு, சிலர் ஹாங்காங் , சிலர் செக்கோஸ்லோவாக்கியா. நாங்கள் ரஷ்யாவுக்கு போக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். சீனா செல்லும் வாய்ப்பு உள்ளது. நாம் முயன்று வருகிறோம். நாங்கள் ஏற்கனவே பாக்கிஸ்தான் இரண்டு சிறுவர்கள் அனுப்பியுள்ளோம் - டாக்காவில் ஒருவர் கராச்சியில் ஒருவர் . (கைத்தட்டல்) இந்த அமெரிக்க மக்கள் எனக்கு உதவுகிறார்கள். இந்தியர்கள் யாரும் முன்வரவில்லை அதனை நினைத்து மிகவும் வருந்துகிறேன். நிச்சயமாக, சில உள்ளன, ஆனால் மிக சில. இந்திய இளைய தலைமுறைகள் இந்த இயக்கத்தில் சேர வேண்டும், மற்றும் உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியை பரப்ப வேண்டும். இது இந்தியர்களின் கடமை. சைதன்யா மஹாபிரபு கூறினார்,

bhārata-bhūmite haila manuṣya-janma yāra
janma sārthaka kari' kara para-upakāra
(CC Adi 9.41)

இது தலையாய கடமை, உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி பரப்புவது தற்போதுள்ள நிலையில் முக்கிய கடமையாக உள்ளது. இது எல்லோரையும் அரசியல், சமூக, கலாச்சார, மத, ஒவ்வொரு வழியிலும் இணைக்கும். கிருஷ்ணர். கிருஷ்ணர் மையமாக இருக்க வேண்டும். அது முன்னேறி வருகின்றது. நாம் மேலும் மேலும் முயற்சி செய்தால், அது மேலும் மேலும் முன்னேற்றம் செய்யும்.