TA/Prabhupada 0379 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்

Revision as of 06:27, 27 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0379 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Dasavatara Stotra, CD 8

ப்ரளய-பயோதி-ஜலே த்ருதவான் அஸி வேதம். இந்த பாடலை, ஒரு சிறந்த வைஷ்ணவ கவிஞரான ஜெயதேவ கோஸ்வாமி என்பவர் பாடியிருக்கிறார். இதன் பொருள் எப்படி என்றால், பேரழிவு ஏற்படும்போது, முழு பிரபஞ்சமும் தண்ணீரால் நிரம்பியது. இந்த ஜடவுலகின் இறுதிக்கட்ட அழிவு எப்படி நிகழும் என்றால், முதலில், தண்ணீர் காணாமல் போய்விடும், பூமியில் உள்ள அனைத்து தண்ணீரும் சூரிய வெப்பத்தால் காய்ந்து விடும். சூரியன் இதைப்போல பன்னிரண்டு மடங்கு அதிக தீவிரமாக இருக்கும். அதன் விளைவாக, அனைத்து நீரும், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் எல்லாம் கொதித்து ஆவியாகி விடும். ஆகையால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும், பின்னர், சுட்டெரிக்கும் வெப்பத்தினால் எல்லாமே சாம்பலாக மாறிவிடும். பிறகு நூறு வருடங்களுக்கு மழை பெய்யும், யானையின் துதிக்கையைப் போன்ற கனமழை பெய்யும், இதனால் முழு பிரபஞ்சமும் நீரினால் நிரப்பப்படும். அதற்கு தான் ப்ரளய-பயோதி எனப் பெயர். பேரழிவு ஏற்படும் நேரத்தில், ப்ரளய, முழு பிரபஞ்சமும்... தற்போது காற்றினால் நிறைந்திருப்பது போல், அந்த நேரத்தில் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும். அப்பொழுது, வேதங்களை, ஒரு படகில் வைத்து, கடவுள் காத்து ரக்ஷிப்பார், பிறகு அந்த படகு ஒரு மாபெரும் மீன் துடுப்பில் சிக்கிவிடும். அந்த மாபெரும் மீன், கிருஷ்ணரின் அவதாரமே. எனவே, அவர் புகழ் பாடுகிறார், கேஷவ த்ருத-மீன-ஷரீர ஜய ஜகதீஷ. ஆக மீன-ஷரீர. அடுத்தது, க்ஷிதிர் இஹ விபுலதரே திஷ்டதி தவ ப்ரஷ்டே தரணி-தாரண-கிண-சக்ர-கரிஷ்டே. பாற்கடலை கடையும் நிகழ்ச்சி, அடுத்த அவதாரம் ஆமை. ஆமையின் முதுகில் மெரு-பர்வதம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். அதாவது உலகம் ஆமையின் முதுகில் அமர்ந்திருக்கும். இது இரண்டாவது அவதாரமாகும். முதலில் மீன், பிறகு ஆமை. அதன் பிறகு வராஹ-அவதாரம். ஒரு அரக்கன், ஹிரண்யகசிபு மற்றொருவன் ஹிரண்யாக்ஷன். அவன் தனது அசுர செயல்களால் பூமியை கர்பக்கடலில் தூர எறிந்துவிடுவான். இந்த பிரபஞ்சத்தில் ஒரு கடல் இருக்கிறது. பிரம்மாண்டத்தின் அரைப் பகுதி கர்ப சமுத்திரத்தால் நிறைந்துள்ளது. அதன் மேல் தான் கர்போதகஷாயி விஷ்ணு பள்ளிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நாபிகமலத்திலிருந்து ஒரு தாமரை தண்டு வெளியேறுகிறது. அதில் தான் பிரம்ம தேவர் பிறக்கிறார். அனைத்து கிரகங்களும் இந்த மூலமுதலான தண்டின் வெவ்வேறு கிளைகளாக தொங்குகின்றன. அவைகள் கர்போதகஷாயி விஷ்ணுவின் அடிவயற்றிலிருந்து முளைக்கின்றன.


ஹிரண்யாக்ஷன் எனும் ஒரு அரக்கன், இந்த பூமியை அந்த கடலுக்குள் முழுகச் செய்வான். அந்த நேரத்தில் பகவான், வராஹ அவதாரம் எடுத்து வருவார். வராஹ அவதாரத்தில், பிரம்ம தேவரின் மூக்கிலிருந்து ஒரு சிறிய பூச்சி அளவில் வருகிறார். பிறகு அவர் தன் கையயை வைத்தவுடன், அவர் (வராஹர்) வளர ஆரம்பித்தார். இப்படி அவர் ஒரு பிரம்மாண்டமான உடலை ஏற்றார். பிறகு தனது தந்தங்களால் பூமியை தூக்கி கர்பக்கடலிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அது தான் கேஷவ-த்ருத-வராஹ-ரூப என்றழைக்கப்படுகிறது. அடுத்து, தவ கர-கமல-வரே நகம் அத்புத-ஷ்ருங்கம் தலித-ஹிரண்யகஷிபு-தனு-ப்ருங்கம். ஹிரண்யகஷிபு என்ற மற்றொரு அரக்கன் அழிவில்லாதவன் ஆக விரும்பினான். ஆகையால் அவன் தவமிருந்து பிரம்மதேவரிடமிருந்து வரம் பெற்றான். அதன்படி அவனால் நிலத்திலோ, வானிலோ அல்லது நீரிலோ மரணம் அடையமுடியாது. பிரம்மதேவரால் அளிக்கப்பட்ட வரனை மதித்து... கிருஷ்ண பெருமான் தன் பக்தனின் சொற்களை ஒருபோதும் பொய்யாக விடமாட்டார். ஆக பிரம்மதேவர் அவனுக்கு வரமளித்தார், "அப்படியே ஆகட்டும், நீ நிலத்திலோ, நீரிலோ அல்லது வானத்திலோ மரணம் அடைய மாட்டாய்." ஆனால் ந்ரஸிம்ஹ-தேவரோ, பாதி-சிங்கம், பாதி-மனிதன் வடிவத்தில் தோன்றினார். அதற்கு காரணம் என்னவென்றால் தம்மை எந்த மனிதனும் மிருகமும் வதம் செய்ய முடியாது என்றும் ஹிரண்யகஷிபு பிரம்ம தேவரிடம் வரன் பெற்றிருந்தான். ஆகையால் அவர், மனிதனும் இல்லாத மிருகம் என்றும் எண்ணமுடியாத ஒரு உருவத்தில் தோன்றினார், பிறகு அந்த அரக்கனை, நிலமோ, நீரோ, வானமோ இல்லாதபடி, தன் மடியின் மேல் அசையமுடியாமல் வைத்தார். அதை தவிர்த்து, எந்த விதமான ஆயுதங்களாலையும் தம்மை கொல்ல முடியாது என்கிற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே பகவான் அவனை தன் கை நகங்களால் வதம் செய்தார். நகம் என்பது ஆயுதமாக கருதப் படுவதில்லை. இவ்வாறு அவன் பிரம்மதேவரை ஏமாற்ற நினைத்தான், ஆனால் பகவானின் சாதுர்யமோ அளவில்லாதது. அவர் ஹிரண்யகஷிபுவையே ஏமாற்றி அவனை வதம் செய்தார். கேஷவ த்ருத-நரஹரி-ரூப. தலித-ஹிரண்யகஷிபு-தனு-ப்ருங்கம். நம் நகத்தால் ஒரு பூச்சியை சுலபமாக கொல்ல முடியும். ஒரு எறும்பை நசுக்கி சுலபமாக இரண்டு பாதியில் துண்டிக்க முடியும். அதுபோலவே, ஹிரண்யகஷிபு ஒரு பெரிய அசுரனாக இருந்தாலும், அவன் ஒரு சிறிய பூச்சியைப் போல் தான் தோன்றினான். பகவானின் கை நகங்களால் வதம் செய்யப்பட்டான்.