TA/Prabhupada 0401 - சிக்ஷாஷ்டகம் பாடலின் பொருள்

Revision as of 11:45, 27 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0401 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Pur...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport Excerpt to Sri Sri Siksastakam -- Los Angeles, December 28, 1968

கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தைப் பற்றி புத்தகங்களை எழுத, தன் சீடர்களை, பகவான் சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்தினார். இந்த தொண்டை அவரைப் பின்பற்றுவோர் இன்றைய நாள் வரை தொடர்ந்து செய்துவருகிறார்கள். பகவான் சைதன்ய மஹாபிரபுவால் கற்பிக்கப்பட்ட தத்துவத்தின் விரிவாக்கமும் வெளிபடுத்தலும், வாஸ்தவத்தில் எல்லாவற்றிலும் அதிக ஆழம் உடையது, துல்லியமானது மற்றும் வேறுபாடற்றது. உலகில் எந்த மத கலாச்சாரத்தையும் சீர்குலைக்கமுடியாத, ஒழுங்குமுறையான, குரு-சிஷ்ய பரம்பரையின் காரணமாக. பகவான் சைதன்யர் தன்னுடைய இளமையிலேயே புகழ்பெற்ற அறிஞராக இருந்தார், ஆனாலும் சிக்ஷாஷ்டகம் என்கிற எட்டு ஸ்லோகங்களை மற்றுமே அவர் நம்மிடம் ஒப்படைத்தார். பல ஜென்மங்களாய் இதையத்தில் குவிக்கப்பட்ட அழுக்கை சுத்தம் செய்யும் அந்த ஸ்ரீ-கிருஷ்ண-ஸங்கீர்த்தனத்திற்கு புகழ் சேரட்டும்.. இவ்வாறு, மறுபடியும் மறுபடியும் ஏற்படும் பிறப்பும் இறப்பும் கொண்ட பௌதீக வாழ்வான தீ, அணைக்கப்படுகிறது.


இரண்டாம் ஸ்லோகம். என் அருள் நாதா, உன் திருநாமத்தால் மற்றுமே உயிர்வாழீகளுக்கு பூரணமாக அருள் செய்யமுடியும். ஆகையால் உனக்கு கிருஷ்ணா, கோவிந்தா என நூற்றுக்கணக்கான, லக்ஷக்கணக்கான பெயர்கள் உள்ளன. இந்த தைவிக நாமங்களுக்கு நீ உனது தைவீக சக்தி முழுவதையும் வழங்கி இருக்கிறாய், மற்றும் இந்த திருநாமங்களை ஜபிக்க எந்த கணடிப்பான விதிமுறையும் கிடையாது. என் அருள் நாதா, நீ இவ்வளவு தயவுசெய்து உன் திருநாமத்தின் மூலம் உன்னை அடைவதை சுலபமாக்கி உள்ளாய். ஆனால் என் துர்பாக்கியம், எனக்கு அவைகளுக்காக எந்த ஈர்ப்பும் இல்லை. மூன்றாவது (ஸ்லோகம்). பகவானின் திருநாமத்தை மனதின் பணிவான நிலையில் மற்றுமே ஜபிக்க முடியும். அப்பொழுது தன்னை வீதியில் கடக்கும் புல்லைவிட தாழ்ந்தவனாக எண்ணவேண்டும், ஒரு மரத்தைவிட சகிப்புத் தன்மை உடையவனாக இருக்கவேண்டும், எந்த விதமான போலி அந்தஸ்தின் உணர்வும் இல்லாமல் இருக்கவேண்டும், மற்றும் எல்லோருக்கும் பூரண மதிப்பை அளிக்க தயாராக இருக்கவேண்டும். மனதின் இத்தகைய நிலையில் ஒருவரால் பகவானின் திருநாமத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும்.