TA/Prabhupada 0418 - தீக்ஷை என்பது செயல்பாட்டின் துவக்கம்

Revision as of 12:30, 29 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture & Initiation -- Seattle, October 20, 1968

தீக்ஷை... நம் மாணவர்களில் பலரும் தீக்ஷை பெற்றுள்ளனர். சிலர் இன்று மாலை தீக்ஷை பெற உள்ளனர். தீக்ஷை என்பது இந்த இயக்கத்தில் சேர்ந்ததின் மூன்றாவது நிலை. முதல் நிலை ஷ்ரத்தா, சிறிது நம்பிக்கை நம் மாணவர்கள் ஜபம் செய்கின்றனர், அது ஏதோ கடை வீதிக்கு செல்வதைப் போல பலரும் நன்கொடையாக பணம் தருகின்றனர், யாரோ நமது 'Back to Godhead' யை வாங்குகின்றனர். இதுவே நம்பிக்கையின் முதல் நிலை: " அட, இங்கே ஒரு இயக்கம் இருக்கிறது. இதற்கு நாம் ஒத்துழைத்து தான் பார்ப்போமே" என்பது. ஆதவ் ஷ்ரத்தா. அதன் பின் அவன் இன்னும் சிறிது ஆர்வம் கொள்வானானால், இங்கே வகுப்புக்கு வருகிறான். "சரி, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினர், என்ன தான் சொல்லித் தருகிறார்கள், பார்ப்போமே!" இப்படியாக வருகிறார்கள். இதுவே இரண்டாவது நிலை. முதல் நிலை இயக்கதின் மேல் கொள்ளும் ஒரு இயல்பான பச்சாதாபம் இரண்டாவது நிலை நம் செயல்களில் ஈடுபடுவது, சேர்ந்து கொள்வது இப்போது இங்கே நீங்கள் தயை கூர்ந்து வந்திருப்பது போல. நான் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள் அது போல ஒருவருக்கு ஆர்வம் அதிகமாகும் போதோ, நம்பிக்கை மேம்படும் போதோ இங்கே வருவார், அதுவே இரண்டாம் நிலை மூன்றாம் நிலை.... ஆதௌ ஷ்ரத்தா ததா சாது சங்க அத பஜன கிரியா (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 23.14-15) இப்போது தீக்ஷை என்பது செயல்பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும். செயல்பாடுகளின் தொடக்கம். கிருஷ்ண பக்தியில் வளர்ந்து உன்னத நிலையை அடைவது எப்படி? அதற்குப் பெயர் தான் தீக்ஷை. தீக்ஷை என்பது முடிவல்ல, அது மூன்றாவது நிலை. நான்காவது நிலை என்பது தீக்ஷை பெற்றவர், விதி முறைகளை கடைப்பிடிப்பாரானால் முறையான கணக்கோடு ஹரே கிருஷ்ண ஜபம் செய்வாரானால் மெதுமெதுவே அவரது குறைபாடுகள் மறையும். குறைபாடுகள் என்ன? நமது மாணவர்களுக்கு நாம் அறிவுறுத்துவது தகாத உடலுறவு, மாமிச உணவு போதை மற்றும் சூதாட்டம் ஆகிய நான்கில் இருந்தும் விலகி இருப்பதையே. இந்த நான்கும் சாதரணமாக இந்த நான்கு விஷயங்களும் சமுதாயத்தில் மிகுந்து காணப்படுகிறது. முக்கியமாக மேற்கத்திய நாடுகளில் ஆனால் தீக்ஷை பெற்று ஜபம் மேற்கொள்ளும் இந்த மாணவர்கள் இந்த நான்கு விஷயங்களையும் சுலபமாக, சிரமமே இல்லாமல் விட்டுவிடுகின்றனர். இதற்குப் பெயர் தான் அனர்த்த நிவ்விருத்தி.. அதுவே நான்காவது நிலை. "சரி" என்று அவன் திடமாவதே ஐந்தாவது நிலை திரு. அன்டெர்சன் என்னும் மாணவனைப் போல, நான் அவனைப் பார்த்ததில்லை.. ஆனால் அவன் நம் மற்ற பக்தர்களுடன் உறவாடியதை வைத்தே எழுதியுள்ளான், "என் வாழ்க்கை முழுவதையும் கிருஷ்ண பக்தியில் செலவளிக்க நான் விரும்புகிறேன்," என்று. இதற்குப் பெயர் தான் நிஷ்தா, உறுதி பெறுதல். ததோ நிஷ்தா ததோ ருசி. ருசி என்பது அதில் அவர்கள் ஒரு ருசியை உணர்வதைக் குறிக்கும் ஏன் இந்த இளைஞகர்கள் வெளியே செல்கிறார்கள்? இந்த ஜபத்தில் அவர்களுக்கு ஒரு ருசி உள்ளது. அவர்கள் ஒரு ருசியை வளர்த்துக் கொண்டுவிட்டார்கள் ஒன்றுமில்லாததற்கு ஒன்றும் அவர்கள் இப்படி நேரத்தை விரையம் செய்யவில்லை. அவர்கள் படித்தவர்கள், பெரியவர்கள், எனவே ருசியை அனுபவிக்கிறார்கள். உறுதி அடைந்தவுடன் ருசி ஏற்படும், ததா சக்திஸ்.. ருசி எற்பட்டவுடன் பிடிப்பு எற்படும் அவனால் விடமுடியவில்லை. எனக்குப் பல கடிதங்கள் வருகிறது சில மாணவர்கள் தங்கள் ஆன்மீக சகோதரர்களுடன் ஒத்துப் போக முடியாமல் வெளியேறிவிடுகின்றனர் ஆனால், "என்னால் போக முடியவில்லை, போக முடியவில்லை" என்று மட்டும் எழுதுவார்கள். உமாபதி அந்தக் கடிதத்தை எழுதியுள்ளான், அவனுக்குச் சிரமமாக இருப்பதாகவும், அவனால் வாழமுடியவில்லை என்றும் அவனால் வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை என்றும். அவன் டல்லஸில் இருக்கிறான், தெரியுமா அவனால் உறவைக் கைவிடவும் முடியவில்லை, அன்மீக சகோதரர்களுடன் ஒத்து வாழவும் முடியவில்லை.. ஏதோ மனக் கசப்பு.. ஆனால் அது தற்காலிகமானது. அதனால் தான் அதற்குப் பெயர் அசக்தி பற்று. ததா சக்திஸ், ததோ பாவ பின் மெதுமெதுவே முன்னேறி எப்போதும் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டிருக்கும் உன்னத நிலையை அடைவது அதன் பின்னர் முழுமை பெற்ற நிலை.. கிருஷ்ணரை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நேசிக்கிறான். இதுவே செயல் முறை.