TA/Prabhupada 0419 - தீக்ஷை என்பது கிருஷ்ண உணர்வின் மூன்றாம் படியாகும்
Lecture & Initiation -- Seattle, October 20, 1968
ஆக இந்த தீக்ஷை என்பது கிருஷ்ண உணர்வின் மூன்றாம் படியாகும். தீக்ஷை ஏற்றுக் கொள்பவர்கள், விதிமுறைகளை , கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும். எடுத்துக்காட்டாக ஒருவன் ஒரு வகையான நோயிலிருந்து குணமாக வேண்டும் என்றால், அவன், மருத்துவர் அளித்த கட்டளைகளை பின்பற்றவேண்டும். அது அவனை நோயிலிருந்து சீக்கிரமாக குணப்படுத்துவதில் உதவும். ஆக இந்த நான்கு ஒழுக்கக் கொள்கைகளை அவர் பின்பற்றவேண்டும், மற்றும் தினசரி, குறைந்த பட்சம் பதினாறு மாலைகள் ஜபிக்கவேண்டும். இவ்வாறு படிப்படியாக அவன் உறுதிப்படுவான் மற்றும் அதனால் அவனில் பற்றும் ஆசையும் உண்டாகும். அதன் பிறகு கிருஷ்ணருக்காக தானாகவே அன்பு உண்டாகும்... அது எல்லார் இதையத்திலும் ஏற்கனவே இருக்கிறது. கிருஷ்ணருக்காக அன்பு என்பது சுமத்தப்படும் வெளிப்புற விஷயம் அல்ல. அப்படி கிடையாது. அது எல்லாவற்றிலும் உள்ளது, ஒவ்வொரு ஜீவராசியிலும் உள்ளது.. அப்படி இல்லையென்றால் எப்படி இந்த அமெரிக்க ஆண்களும் பெண்களும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்? அது இருக்கிறது. நான் வெறும் உதவுகின்றன.
தீக்குச்சிகளைப் போல் தான்: எரியும் தன்மை இருக்கிறது. ஒருவர் வெறும் உராசினாலே போதும். தீ பற்றிக் கொள்கிறது. வெறும் இரண்டு குச்சிகளை உராசினால் போதாது, என்ன சொல்ல வரேன் என்றால், அதாவது உச்சியில் தீ பொருள் இருந்தாக வேண்டும். கிருஷ்ண உணர்வு என்பது எல்லோர் இதையத்திலும் இருப்பது தான். ஒருவரால் அது வெறும் கிருஷ்ண உணர்வு கொண்ட சங்கத்தில் தட்டி எழுப்பப் படவேண்டும். இது கடினமானதும் அல்ல, அசாத்தியமானதும் அல்ல, கசப்பானதும் அல்ல. எல்லாம் இனிதானது. ஆக எல்லோருக்கும் எங்கள் வேண்டுதல் இது தான். நீங்கள், பகவான் சைதன்யரின் உதார குணம் நிறைந்த இந்த அன்பளிப்பை, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மற்றும் ஹரே கிருஷ்ண ஜபத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் எங்கள் திட்டம். மிக நன்றி.