TA/Prabhupada 0448 - பகவானைப் பற்றிய அறிவை சாஸ்திரம், குரு மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண

Revision as of 07:25, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.3 -- Mayapur, February 17, 1977

ப்ரத்யும்னன் : மொழிபெயர்ப்பு - "அதன் பின்னர் பிரம்மா, அவருக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்த பிரகலாதரிடம் கேட்டுக் கொண்டார். குழந்தாய், பகவான் நரசிம்ம தேவர் உன் அசுரத் தந்தையிடம் மிகவும் கோபங் கொண்டுள்ளார். ஆகவே தயவு கூர்ந்து அவரிடம் சென்று அவரை சாந்தப்படுத்துவாயாக." பிரபுபாதர்: ப்ரஹ்ராதம் ப்ரேஷயாம் ஆஸ ப்ரஹ்மாவஸ்திதம அந்திக்கே தாத் ப்ரசமயோபேஹி ஸ்வ-பித்ரே குபிதம் ப்ரபும் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.3) ஆகையால் நரசிம்மதேவர் மிக, மிக கோபமாக இருந்தார். நாத்திகவாதிகள், முழுமுதற் கடவுளின் தன்மை என்ன என்று அறியாதவர்கள், "பகவான் ஏன் கோபம் கொள்ள வேண்டும்?" என்று அவர்கள் கூறுவார்கள் பகவான், ஏன் கோபம் கொள்ளக் கூடாது? பகவானிடம் அனைத்தும் இருக்க வேண்டும்; இல்லையெனில் அவர் எவ்வாறு பூரணமான பகவானாவார்? பூர்ணம். கோபமும் உயிர்த்திருப்பதன் மற்றோரு அறிகுறியாகும். கல் கோபம் கொள்வதில்லை, ஏனென்றால் அது கல். ஆனால் எந்த உயிர்வாழியும், கோபம் கொள்ளும். அது ஒரு தன்மை. மேலும் பகவான் ஏன் கோபம் கொள்ளக் கூடாது? அவர்கள் பகவானை கற்பனை செய்கிறார்கள், அவர்களிடம் பகவானைப் பற்றிய உண்மையான கருத்து உள்ளது என்று அர்த்தமல்ல. அவர்கள் கற்பனை செய்கிறார்கள் அதாவது "பகவான் இப்படித் தான் இருப்பார். பகவான் உக்கிரமாக இருக்க கூடாது. பகவான் மிகவும் அமைதியானவராகத் தான் இருக்க வேண்டும்." ஏன்? கோபம் எங்கிருந்து வந்தது? அது பகவானிடமிருந்து வருகிறது. இல்லையெனில் கோபத்திற்கு இருப்பே இல்லை. அனைத்துமே அங்கு இருக்கிறது. ஜன்மாதி அஸ்ய யதஹ் (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). அதுதான் ப்ரம்மனின் வரைவிலக்கணம். நம்முடைய அனுபவத்தில் நாம் பெற்றிருப்பவை மேலும் நம் அனுபவத்தில் நாம் பெறாதவை..... நம்முடைய அனுபவத்தில் நாம் எல்லாவற்றையும் பெற்றிருப்பதில்லை. இது, நரசிம்ம-தேவரை பற்றி கூறப்படும் போது, பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் பகவான் தோன்றக் கூடும் என்பது லக்ஷ்மிதேவியின் அனுபத்தில் இல்லை என்று கூறப்பட்டிருப்பதைப் போன்றது. லக்ஷ்மி கூட, மற்றவர்களை பற்றி கூற என்ன இருக்கிறது. லக்ஷ்மி, அவர் பகவானின் நிரந்தரமான துணை. ஆகையால் அஸ்ருத என்று கூறப்பட்டுள்ளது. அது என்ன? அத்ருஷ்ட. அத்ருஷ்ட அஸ்ருத பூர்வத்வாத். அவள் கூடப் பார்த்ததில்லை என்ற காரணத்தினால், பயந்தாள், அத்தகைய பிரம்மாண்டமான வடிவம், மேலும் பாதி சிங்கம், பாதி மனிதன். பகவானுக்கு பல வடிவம் உள்ளது: அத்வைத அச்சுத அனாதி அனந்த-ரூபம் (பிரம்ம சம்ஹிதை 5.33). அனந்த-ரூபம்; இருப்பினும், அத்வைத. ஆகையால் பாகவதத்தில், பகவானின் திரு அவதாரங்கள் நதி அல்லது கடலின் அலைகளைப் போன்றதே ஆகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.. ஒருவராலும் கணக்கிட முடியாது. அலைகளை கணக்கிட வேண்டும் என்றால் நீங்கள் சோர்வடைந்துவிடுவீர்கள். அது சாத்தியமற்றது. ஆக, பகவானின் திரு அவதாரங்கள் கடல் அலைகளைப் போல் எண்ணற்றது. உங்களால் அலைகளை கணக்கிட முடியாது, ஆகையினால் உங்களால் அவருக்கு எத்தனை திரு அவதாரங்கள் உள்ளன என்பதையும் புரிந்துகொள்ள முடியாது. லக்ஷ்மிக்கு கூட, அனந்ததேவருக்குக் கூட, அவர்களாலும் முடியாது. ஆகையால் நமது அனுபவம் - மிகக்குறுகிய எல்லைக்குட்பட்டது. .நாம் ஏன் "பகவான் இதைப் பெற்றிருக்க முடியாது, பகவான் அதைப் பெற்றிருக்க முடியாது..." என்று கூற வேண்டும்? இது தெய்வ நம்பிக்கையற்றது. அவர்கள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்....... நம்முடைய வேத ஆரிய-சமாஜம் என்று அழைக்கப்படுவதிலும் கூட, அவர்கள் , பகவான் திரு அவதாரம் எடுக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஏன்? பகவான் மிகுந்த சக்திமிக்கவரானால், பிறகு ஏன் அவரால் திரு அவதாரங்களை ஏற்க முடியாது? ஆகையினால் நாம் இந்த போக்கிரிகளிடமிருந்து பகவானைப் பற்றி பாடம் கற்றுக்கொள்ளக் கூடாது. பகவானைப் பற்றிய பாடத்தை சாஸ்திரத்திலிருந்தும், குருவிடமிருந்தும், சாதுக்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பகவானைப் பார்த்த ஒருவர், தத்வ-தர்ஷின. தத் வித்தி ப்ராணிபாதேன பரிப்ரஷ் னேன ஸேவயா உபதே க்ஷ்யந்தி தத் ஞானம் (பகவத் கீதை 4.34). தத் ஞானம் என்றால் ஆன்மிக அறிவு. தத்-விஞ்ஞானம். தத்- விஞானர்தம் ச குரும் ஏவாபிகச்செத் சமிதி-பாணி: ஸ்ரோத்ரியம் ப்ரம-நிஷ்தம் (முண்டக உபநிஷத். 1.2.12) ஆகையால் தத்-விஞ்ஞானம், நீங்களாக கற்பனை, அனுமானம் செய்யக் கூடாது அது சாத்தியமல்ல. தத்வ-தர்ஷின:, பகவானை பார்த்திருக்கும் ஒருவரிடமிருந்து நீங்கள் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பார்ப்பதினால் கூட உங்களால் முடியாது... லக்ஷ்மிதேவியைப் போல், அவர் தொடர்ந்து ஒவ்வொரு கணமும், பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கூட தெரியவில்லை. அஸ்ருத-பூர்வ. அத்ருஷ்டாஸ்ருத-பூர்வ. நாம் எதைப் பார்த்தாலும் அல்லது பார்க்காவிட்டாலும் அனைத்துமே இருக்கிறது. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: (பகவத் கீதை 10.8) கிருஷ்ணர் கூறுகிறார், "நீங்கள் பார்ப்பவை எல்லாவற்றிற்கும், நீங்கள் அனுபவிக்கும் எல்லாவற்றிற்கும், அனைத்திற்கும் மூலம் நானே." ஆகையால் கோபமும் அங்கு தான் இருக்க வேண்டும். "பகவான் கோபப்படக் கூடாது. பகவான் இவ்வாறு இருக்கக் கூடாது. பகவான் இவ்வாறு இருக்க....." என்று நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? இல்லை, அது உண்மையல்ல. அது நம்முடைய அறியாமை.