TA/Prabhupada 0449 - பக்தியால், உங்களால் ஒப்புயர்வற்ற பகவானை கட்டுப்படுத்த முடியும். அதுதான் ஒரே வழி



Lecture on SB 7.9.3 -- Mayapur, February 17, 1977

ஆகையால் பிரம்மா, பகவான் பிரம்மா, இந்த பேரண்டத்தில் முதலில் தோன்றிய உயிரினம் என்று கூறப்படுகிறது. லக்ஷிமி பயம் கொண்டார்கள், பிரம்மாவும் பயந்தார். ஆகையினால் பிரம்மா பிரஹலாத் மஹாராஜிடம் வேண்டிக் கொண்டார் அதாவது "நீ முன்னே செல், என் அன்பு மகனே, சென்று பகவானை சாந்தப்படுத்து. உன்னால் செய்ய முடியும், ஏனென்றால் உனக்காக அவர் இந்த கொடூரமான தோற்றத்தில் தோன்றினார். உன் தந்தை உன்னை கேலிசெய்வதன் மூலம் அவரை பல வழிகளில் அவமதித்தார், உன்னை தண்டிப்பதன் மூலம், உன்னை துன்பம் அடையச் செய்வதன் மூலம். ஆகையினால் அவர் மிகவும் கோபமாக தோன்றி இருக்கிறார். ஆகையால் நீ அவரை சாந்தப்படுத்தலாம். எங்களால் முடியாது. அது சாத்தியமல்ல." பிரஹலாத் ப்ரெஷ்யாம் ஆச பிரம்மா அவஸ்தித அந்திகே. ஆகையால் பிரஹலாத் மஹாராஜ், உன்னதமான பக்தராகையால், அவரால் பகவானை சாந்தப்படுத்த கூடும். பக்த்யா, பக்தியால், உங்களால் ஒப்புயர்வற்ற பகவானை கட்டுப்படுத்த முடியும். அதுதான் ஒரே வழி. பக்த்யா மாம் அபிஜானாதி (ப.கீ. 18.55). புரிந்துக் கொள்ளுதலும் பக்தியின் மூலமே, மேலும் பக்தியின் மூலம் நீங்கள் பகவானைக் கட்டுப்படுத்த முடியும். வேதேஷு துர்லபம் அதுர்லப ஆத்மா-பக்தௌ. வேதத்தை படிப்பதின் மூலம் நீங்கள் பகவானைப் புரிந்துக் கொள்ள முடியாது. வேதேஷு துர்லபம் அதுர்லப ஆத்மா-பக்தௌ. ஆனால் அவருடைய பக்தர்களுக்கு, அவர் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடியவர். ஆகையினால் பக்தி மட்டுமே ஆதாரம். பக்த்யாம் ஏக்யா க்ராஹயம். பக்தியினால் மட்டுமே நீங்கள் அணுக முடியும், நீங்கள் பகவானுடன் சமமான மட்டத்தில் ஒரு நண்பனைப் போல் உரையாட முடியும். அந்த மாட்டிடையர்கள் கிருஷ்ணரை ஒரே நிலையில் நடத்தினார்கள்: "கிருஷ்ணர் எங்களைப் போன்றவன்." ஆனால் அவர்கள் கிருஷ்ணரை மிக, மிக தீவிரமாக நேசித்தார்கள். அது அவர்களுடைய தராதரம். ஆகையினால் சில சமயங்களில் மாட்டிடையர்களை தன் தோளில் சுமக்க சம்மதிப்பார். ஆகையால் இது தன் அந்த ..... கிருஷ்ணர் அதை விரும்பினார், அதாவது " என் பக்தனாக இருந்த என்னை கட்டுப்படுத்த வேண்டும். எல்லோரும் என்னை வழிபடுகிறார்கள், பயம் கலந்த மரியாதையுடனும் பயபக்தியுடன். யாராவது முன் வந்து மேலும் என்னை கட்டுப்படுத்துவதை நான் விரும்புகிறேன்." அதை அவர் விரும்புகிறார். ஆகையினால் அவர் அன்னை யசோதா அவரை கட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொண்டார். பகவான் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முடியும்? ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: (பி.ச. 5.1). அவர் நித்தியமான கட்டுப்பாட்டாளர். யாரால் அவரை கட்டுப்படுத்த முடியும்? அது சாத்தியமல்ல. ஆனால் தன்னுடைய களங்கமற்ற பக்தர்களால் கட்டுப்படுத்தப்பட சம்மதிக்கிறார். அவர் சம்மதிக்கிறார், "சரி, அன்னையே, நீங்கள் என்னை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் என்னை கட்டுங்கள். உங்களுடைய கம்பை எனக்கு காட்டுங்கள் அப்போது தான் நான் பயப்படுவேன்." ஆகையால் அனைத்தும் அங்கு உள்ளது. பகவான் பூச்சியம் என்று நினைக்காதிர்கள், இல்லை, சூன்யவாதி. அனைத்தும் அவரே. ஜன்மாதி அஸ்ய யதஹ் (ஸ்ரீ.பா. 1.1.1). அதாதோ ப்ரம ஜிஞாசா. நீங்கள் ப்ரமனைப் பற்றி விசாரணை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பரம் ப்ரஹ்ம பரம் தாம் பவித்ரம் பரமம் பவான் (ப.கீ.10.12). ஆகையால் அங்கு கோபம் இருக்க வேண்டும், பகவான் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் அதன் வேறுபாடு என்னவென்றால் அவருடைய கோபமும், அமைதியான மனப்பாங்கும் ஒரே முடிவை அளிக்கும். பிரஹலாத் மஹாராஜ், ஒரு பக்தர்... அவர் பிரஹலாத் மஹாராஜிடம் மிகவும் திருப்தியாக இருக்கிறார் மேலும் அவன் தந்தையிடம் மிகவும் அதிருப்தியாக இருக்கிறார், ஆனால் அதன் முடிவு ஒன்றுதான்: இருவரும் முக்தி பெற்றார்கள். ஒரு பக்தர் சேர்ந்த போதிலும், அப்படி இருக்கையில் பகவானால் கொல்லப்பட்ட அரக்கன், அவன் ஒன்று சேரவில்லை - அவன் தகுதி பெறவில்லை - ஆனால் அவன் ஆன்மிக ராஜ்ஜியத்திற்கு செல்கிறான். பௌதிக அடிமைத்தனத்திலிருந்து முக்தி நிலையை அடைகிறார்கள். ஆகையால் ஒரு பக்தர் ஏன் அதே நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆகையினால், பக்த்யா மாம் அபி ஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத் - அனந்தரம் (ப.கீ. 18.55). அவர்கள் விஷதே, புகுந்தார்கள், ஆன்மிக தளத்தில் புகுந்தார்கள். முக்தி பெற்ற அனைவரும், அவர்கள் புகுந்தார்கள். ப்ரஹ்ம-பூத: ப்ரஸ்ன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி ஸம: ஸர்வேஷு பூதேஷு மத் - பக்திம் லப தே பராம் (ப.கீ. 18.54). ஆனால் பக்தர்களாக இருப்பவர்கள், அவர்கள் அந்த கோள் கிரகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள், வைகுண்ட கிரகம் அல்லது கோலோக விருந்தாவன கிரகம். இவ்வாறாக ஒருவர் தன்னுடைய மூலமான நிலையை அடைகிறார்கள். ஆனால் நாம் பக்தி மேற்கொள்ளவில்லை என்றால், பிறகு நாம் பிரமனின் ப்ரம ஜோதியில் நுழையலாம், ஆனால் அங்கு இழிந்து தாழ்வை அடையும் வாய்ப்பு உள்ளது. ஆருஹ்ய க்ருச்ரேண பரம் பதம் தத: பதந்தி அதோ 'நாத்ருத-யுஷ்மத்-அங்ரய: (ஸ்ரீ.பா. 10.2.32). ஆகையால் அருவவாதிகளாக இருப்பவர்கள், அவர்கள் ஒருவேளை ஆன்மீக ராஜ்ஜியத்தினுள் நுழையலாம். அது அழைக்கப்படுவதாவது பரம் பதம். பதம் பதம் யத் விபத்தாம் ந தேஷாம் (ஸ்ரீ.பா. 10.14.58). ஆனால் அங்கேயும் இழிந்து தாழ்வை அடையும் வாய்ப்பு உள்ளது. ஆருஹ்ய க்ருச்ரேண. கடுமையான துறவறமும் பிராய்ச்சித்ததிற்குப் பிறகு ஒருவர் ப்ரம ஜோதியில் நுழையலாம். ஆனால் ஒருவர் பரம் பதம்- பற்றிய விபரம் பெறவில்லையெனில், ஸமாஸ்ரிதா ஏ பத பல்லவ பலவம் - அங்கு இழிந்து தாழ்வை அடையும் வாய்ப்பு உள்ளது. இந்த பௌதிக உலகில் அங்கு பூத்வா பூத்வா ப்ரலீயதே (பா.கீ. 8.19) உள்ளது. ஆனால் ஆன்மீகத்திலும், நீங்கள் ஆன்மீக ராஜ்ஜியத்தினுள் நுழைந்தால், அங்கேயும் கூட, சில சமயங்களில் இது நடக்கும். நிச்சயமாக, அது பகவானின் விருப்பப்படி. ஜெய-விஜயாவைப் போல். அவர்கள் தனிப்பட்டு இணைந்தவர்கள். ஆனால் அதன் விளக்கவுரை யாதெனில், கிருஷ்ணர் அதை விரும்பினார் "அவர்கள் செல்ல வேண்டும்...., அந்த ஹிரண்யகஷிபு..., இந்த இருவர், ஜெய-விஜய, அவர்கள் பௌதிக உலகிற்குச் சென்று, மேலும் அவர்களுடன் சண்டை போட வேண்டும்." ஏனென்றால் அந்தச் சண்டை, கோபம் கொள்ள, அந்த போக்கு அங்கு உள்ளது. எங்கு அவர் காட்சி அளிப்பார்? வைகுண்டத்தில் இந்த கோபத்திலும் சண்டையிலும் காட்சி அளிக்க வாய்ப்பு இல்லை. அது சாத்தியமல்ல. ஆகையினால் அவர் தன் பக்தர்களை தூண்டிவிட்டு "பௌதிக உலகிற்குச் சென்று என் எதிரிகளாக தோண்றுங்கள், மேலும் நான் சண்டை போடுகிறேன். நான் கோபம் அடைகிறேன்," ஏனென்றால் வைகுண்டத்தில், ஆன்மீக ராஜ்ஜியம், அதற்கு வாய்ப்பு இல்லை. எல்லோரும் பணிவிடை செய்கிறார்கள், எல்லோரும் நட்புணர்வுடன் இருக்கிறார்கள். சில உறவுமுறை... சண்டை போடுதல் என்னும் கேள்விக்கு ஏது இடம்? ஆனால் சண்டையிடும் மனம் அங்கு உள்ளது; கோபம் அங்கு உள்ளது. எங்கு அவர் காட்சி அளிக்க முடியும்? ஆகையினால் கிருஷ்ணர் திரு அவதாரம் எடுத்தார், அவர் கோபம் கொண்டார், மேலும் ஒரு பக்தர் எதிரியானார், மேலும் இதுதான் கிருஷ்ண-லீலா, நித்திய-லீலா. இது நடந்துக் கொண்டிருக்கிறது. மிக்க நன்றி. பக்தர்கள்: ஜெ! ஹரிபோல்!