TA/Prabhupada 0457 - ஒரே பற்றாகுறை கிருஷ்ண உணர்வு மட்டுமே



Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

விஞ்ஞானம் என்றால் கவணித்தல் மட்டும் அல்ல ஆனால் பரிசோதனையும் கூட. அது முழுமையானது. இல்லையெனில் தத்துவம். அது விஞ்ஞானம் அல்ல. ஆகையால் அவர்களிடம் வேறுபட் ட தத்துவங்கள் உள்ளன. அதை எவரும் முன்வைக்கலாம். அது ஒன்றும் ... ஆனால் உண்மையான காரணம் யாதெனில் கிருஷ்ணர் ஆன்மிகம் மேலும் ஒப்புயர்வற்றவர். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் (கதா உபநிஷத் 2.2.13). இது தான் வேத தடை. பகவான் பூரண நித்யா, நித்தியமானவர், மேலும் பூரண ஜீவாத்மா. அகராதியில் கூட கூறப்பட்டுள்ளது, "பகவான் என்றால் பூரண ஆத்மா." அவர்களுக்கு புரிந்துக் கொள்ள முடியவில்லை "பூரண ஜீவாத்மா." ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ளது பூரண ஆத்மா மட்டும்மல்ல, ஆனால் பூரண ஜீவாத்மா. நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் எகோ யோ பஹுனாம் விததாதி காமான் (கதா உபநிஷத் 2.2.13). அது தான் பகவானைப் பற்றிய வருணனை. ஆக ஆன்மீக வஸ்துவைக் கூட புரிந்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது, மேலும் பகவானைப் பற்றி கூற என்ன இருக்கிறது. ஆன்மீக அறிவின் ஆரம்பம் யாதெனில் முதலில் ஆன்மா என்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்வதாகும். மேலும் அவர்கள் அறிவு அல்லது மனத்தை ஆன்மாவாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது ஆன்மாவல்ல. அதற்கும் மேலாக. ஆபரேயம் இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் பரா (ப. கீ. 7.5). ஆகையால் இந்த பூரணத்துவம், பிரகலாத மஹாராஜாவிற்கு ஏற்பட்டது போல், உடனடியாக பரம புருஷரை தொடுவதால், நாமும் அடையலாம். அதற்கு சாத்தியமுண்டு, மேலும் மிகவும் எளிதாக, ஏனென்றால் நாம் தாழ்வை அடைந்தவர்கள், மந்தா: - மிகவும் மெதுவாக, மிகவும் தீங்கான. மந்தா: மேலும் ஸுமநத-மதயோ. மேலும் நாம் தீயவர்கலாதளால், எல்லோரும் ஒரு தத்துவம் ஏற்படுத்தினார்கள். ஸுமநத. மத. மத என்றால் "கருத்து." மேலும் அந்த கருத்து என்ன? மண்டா மட்டுமல்ல ஆனால் ஸுமநத, மிக, மிக தீங்கான. ஸுமநத-மத்யோ. மந்தா: ஸுமநத-மத்யோ மந்த-பாக்யா ஹி (ஸ்ரீ. பா. 1.1.10), மேலும் அனைத்தும் அதிஷ்டமானது அல்லது துரதிஷ்டமானது. ஏன்? அங்கு அறிவு இருக்கும் போது, அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஆராய்வார்கள். அவர்கள் துர்பாக்கியசாலிகள். தயாராக இருக்கும் அறிவு, ஆனால் அவர்கள் ஆராய்வார்கள், "இது இவ்வாறு. இது அவ்வாறு. ஒரு வேளை... அநேகமாக..." இது நடந்துக்க கொண்டிருக்கிறது. ஆகையினால் மந்த-பாக்யா. எவ்வாறு என்றால் இங்கு பணம் இருக்கிறது. ஒருவர் அந்த பணத்தை எடுக்க மாட்டார். அவர் பன்றிகளையும் நாயையும் போல் பணம் சம்பாதிக்க கடினமாக உழைப்பார்கள். அப்படியென்றால் துர்பாக்கியசாலிகள். ஆகையால் மந்தா: ஸுமநத-மத்யோ மந்த-பாக்யா:. மேலும் மந்த-பாக்யா: ஆனதால், அங்கு உபற்றுத:, எப்போதும் குழப்பம், இந்த போர், அந்த போர், அந்த போர். ஆரம்பமாகிறது, முழு சரித்திரம், வெறுமனே போர். ஏன் போர்? அங்கு ஏன் சண்டை ஏற்படுகிறது? அங்கு சண்டை ஏதும் இருக்க கூடாது, ஏனென்றால் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது, பூர்ணமிதம் (ஈசோபநிஷத், இன்வொகேஷன்). பரம புருஷனின் கருணையால் இந்த உலகம் நிறைவாக உள்ளது, ஏனென்றால் அது இராஜ்ஜியம் ... இதுவும் பகவானின் இராஜ்ஜியம். ஆனால் நாம் அதை தேவையற்ற சண்டையால் நரகமாக்கியுள்ளோம். அவ்வளவுதான். இல்லையெனில் அது ... ஒரு பக்தருக்கு - பூர்ணம். விஸ்வம் பூர்ணம் ஸுகாயதே. அங்கு ஏ சண்டை ஏற்பட வேண்டும்? பகவான் அனைத்தையும் கொடுத்திருக்கிறார். உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? பூமியின் முக்கால்வாசி நீர் நிறைந்தது. ஆனால் நீர் உப்பு தண்ணீர். அதை இனிப்பாக மாற்ற பகவானிடம் செய்முறை உள்ளது. இதை உங்களால் செய்ய முடியாது. உங்களுக்கு தண்ணீர் வேண்டும். அங்கு போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது. அங்கு ஏன் பஞ்சம் ஏற்படவேண்டும்? இப்போது நாங்கள் கேள்விப்பட்டோம் ஐரோப்பாவில் தண்ணீரை இறக்குமதி செய்ய ஆலோசனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். (சிரிப்பொலி) அவ்வாறு இல்லையா? ஆம். இங்கிலாந்தில் அதை இறக்குமதி செய்ய யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமா? (சிரிப்பொலி) ஆனால் இந்த போக்கிரி விஞ்ஞானிகள் அவ்வாறு நினைக்கிறார்கள். அவர்கள் இறக்குமதி செய்வார்கள். ஏன் முடியாது? இங்கிலாந்து தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் தண்ணீர் எடுக்கவில்லை? இல்லை. நீரே கரி பஸ் ந மெதிலோ பியாஸ். "நான் தண்ணீரில் வாழ்கிறேன், ஆனால் நான் தாகத்தால் மடிந்துக் கொண்டிருக்கிறேன்." (சிரிப்பொலி) இந்த போக்கிரிகளின் தத்துவம் .... அல்லது .... நான் நினைக்கிறேன் எங்கள் பிள்ளைப்பிராயத்தில் நாங்கள் ஒரு புத்தகம் படித்தோம், தார்மீக வகுப்பு புத்தகம், அதில் ஒரு கதை சொல்லப்பட்டது அதவாது ஒரு கப்பல் விபத்துக்குள் ஆனது அவர்கள் ஒரு படகில் புகலிடம் அடைந்தார்கள், ஆனால் சிலர் தாகத்தால் மடிந்தார்கள் ஏனென்றால் அவர்களால் தண்ணீரை அருந்த முடியவில்லை. இந்த நீரால் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் தாகத்தால் மடிந்தார்கள். ஆகையால் நம் நிலையும் அது போலவே. அனைத்தும் நிறைந்துள்ளது. இருப்பினும், நாம் இறக்கின்றோம் மேலும் சண்டை போடுகிறோம். இதன் காரணம் என்ன? அதன் காரணம் யாதெனில் நாம் கிருஷ்ணரை பின்பற்றுவதில்லை. இதுதான் காரணம்: கிருஷ்ண உணர்வு இல்லாமை. என் குரு மஹாராஜ் சொல்வதுண்டு அதாவது இந்த உலகம் முழுவதிலும் அனைத்தும் நிறைந்துள்ளது. ஒரே பற்றாகுறை கிருஷ்ண உணர்வு மட்டுமே. பற்றாகுறை மட்டும். இல்லையெனில் அங்கு பற்றாகுறை இல்லை. அனைத்தும் நிறைந்துள்ளது. மேலும் நீங்கள் கிருஷ்ணரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக ஆனந்தம் அடைவீர்கள். நீங்கள் இந்த உலகம் முழுவதையும் ஆனந்தப்படுத்தலாம். கிருஷ்ணரின் இந்த அறிவுரை பகவத் கீதையில், மிகவும் பூரணத்துவம் நிறைந்தது. அது பூரணத்துவம் நிறைந்திருக்கும், ஏனென்றால் அது கிருஷ்ணரிடமிருந்து வந்துக்கொண்டிருக்கிறது. அது விஞ்ஞானிகளின் தவறான தத்துவம் போல் அல்ல. இல்லை. குற்றமற்ற அறிவுரை. மேலும் நாம் அந்த அறிவுரையை பின்பற்றினால், நாம் அதை நடைமுறையில் பயன்படுத்தினால், பிறகு உலகம் முழுவதும், விஸ்வம் பூர்ணம் சுகாயதே.