TA/Prabhupada 0516 - நீங்கள் ஒரு சுதந்திரமான வாழ்வை அடையலாம் - இது கதையோ அல்லது கற்பனையோ அல்ல.: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0516 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
[[Category:TA-Quotes - in USA, Los Angeles]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0515 - Monsieur, vous ne serez pas heureux tant que vous aurez un corps matériel|0515|FR/Prabhupada 0517 - Même né dans une famille riche, vous n’êtes pas à l’abris de la maladie|0517}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0515 - நெடுங்காலமாக பௌதிக உடம்பில் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கமுடியாது|0515|TA/Prabhupada 0517 - நீங்கள் செல்வந்தர் வீட்டில் பிறவியெடுத்ததால் நோயெதிர்ப்பு திறன்பெற்றவராய் ஆகமாட்டீ|0517}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|Nsq4ZS2-5iY|நீங்கள் ஒரு சுதந்திரமான வாழ்வை அடையலாம் - இது கதையோ அல்லது கற்பனையோ அல்ல.<br />- Prabhupāda 0516}}
{{youtube_right|Nsq4ZS2-5iY|நீங்கள் ஒரு சுதந்திரமான வாழ்வை அடையலாம் - இது கதையோ அல்லது கற்பனையோ அல்ல<br />- Prabhupāda 0516}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 07:40, 31 May 2021



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி (Bs. 5.29). பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. பிரபுபாதர்: நாம் முழுமுதற் கடவுளான கோவிந்தரை வணங்குகிறோம். அதுவே நம் கடமை. கோவிந்தரை வணங்குவதன் பலன் என்ன? நிலவுக்குச் செல்ல முயல்வது போல், மிகச் சிறிய முயற்சி. நிலவுக்குச் சென்றாலும், பெரிதாக ஒன்றும் பயடையப் போவதில்லை, ஏனெனில், நிலவில் தட்பவெப்பம் பூச்சிய புள்ளிக்கு 200 பாகை கீழ் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே, எம்மால் இந்த கிரகத்தின் குளிர் காலநிலையை தாங்கிக் கொள்ள முடியாது, நாம் நிலவுக்குச் சென்றாலும் எவ்வாறு பயனடைய முடியும்? அத்துடன் நிலவுதான் மிக அருகிலுள்ள கோள். மில்லியன் கணக்கான ஏனைய கிரகங்களும் உள்ளன, விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் மிகவுயர்ந்த கிரகத்தை அடைய, நாற்பதாயிரம் வருடங்கள் ஆகும் என்று. சென்று வருவதற்கு யார் நாற்பதாயிரம் வருடங்கள் உயிர் வாழப் போகிறார்கள்? இவை நடைமுறைச் சிக்கல்கள், எனவேதான் நாம் கட்டுண்ட ஆத்மாக்கள் எனப்படுகிறோம். நம் செயல்கள் கட்டுண்டவை, சுதந்திரமானவை அல்ல. ஆனால் நீங்கள் சுதந்திரமான வாழ்க்கையை அடையலாம், அளவற்ற சக்தியுடனான, அளவற்ற ஆனந்தத்துடனான, அளவற்ற மகிழ்ச்சியுடனான வாழ்க்கை. அது சாத்தியமானதே. இது கதையோ, கற்பனையோ அல்ல. இந்த பிரபஞ்சத்தினுள் பல கிரகங்களை காண்கிறோம். நம்மிடம் பல பறக்கும் வாகனங்கள் உள்ளன, ஆனால் அருகில் உள்ளதை கூட நாம்மால் நெருங்க முடியாது. நாம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளோம் . ஆனால் நாம் கோவிந்தரை வணங்கினால், அது சாத்தியமாகும். எங்கும் போகலாம். நாம் இவற்றை பிற கிரங்களுக்கு எளிதான பயணம் எனும் சிறுநூலில் எழுதியுள்ளோம். இது சாத்தியமே. இந்த கிரகம்தான் எல்லாமே என்று நினைக்காதீர்கள். பல மில்லியன் கணக்கான ஏனைய சிறந்த கிரகங்கள் உள்ளன. அங்கு சந்தோஷத்தின் தரம், இன்பத்தின் தரம் நாம் இங்கு அனுபவிப்பதைவிட பற்பல மடங்கு அதிகம். இது எவ்வாறு சாத்தியமாகும்? நான் பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தைப் படிக்கிறேன், கோவிந்தராலே பேசப்பட்டதை. பகவத் கீதை, ஏழாவது அத்தியாயம். பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய: அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு (BG 7.1) யோகம் எனும் சொல் இங்கு விளக்கப்பட்டுள்ளது. எவ்வகையான யோகத்தை கிருஷ்ணர் சிபாரிசு செய்கிறார்? மய்யாஸக்த-மனா:. எப்போதும் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்ட மனதுடன் இருப்பதெனும் யோக முறை. இந்த கிருஷ்ண உணர்வு, யோக முறையாகும். தற்காலத்தில், தங்கள் மனதை ஒரு நிலைப்படுத்துகிறார்கள், சூன்யமான, அருவமான, அவர்களுடைய சொந்த பரிந்துரைக்கேற்ப ஏதோ ஒன்றின் மீது. உண்மையான செயல்முறை யாதெனில் மனதை ஏதோ ஒன்றின்மேல் நிலைப்படுத்துவது. ஆனால் அதை நாம் சூன்யமாக்கினால், அந்த முறையில் நம் மனத்தை ஒருநிலைப்படுத்துவது மிகவும் கடினமாகும். அதுவும் பகவத் கீதையில் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. க்லேஷோ 'திகதரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த-சேதஸாம் (BG 12.5). அருவமான, சூன்யத்தின் மீது தியானம் செய்ய முயல்பவர்கள், அவர்களுடைய சிரமம் பரம புருஷரின் மீது தியானம் செய்பவர்களை விட மிக அதிகம். இது விளக்கப்பட்டுள்ளது. ஏன்? அவ்யக்தா ஹி கதிர் து:கம் தேஹவத்பிர் அவாப்யதே. நம் மனதை அருவத்தில் ஒருநிலைப்படுத்த முடியாது. நீங்கள் உங்கள் நண்பனைப் பற்றி நினைத்தால், உங்கள் தந்தை, தாயார், பற்றி நினைத்தால், அல்லது உங்கள் அன்புக்குரிய யாரையாவது, நீங்கள் மணிக்கணக்கில் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் மனத்தை ஒரு நிலைப்படுத்த ஒன்றும் இல்லையெனில், மனதை ஒருநிலைப்படுத்தல் மிகவும் கடினமாகிவிடும். ஆனால் மக்கள் அருவமான சூன்யத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த கற்பிக்கப்படுகிறார்கள்.