TA/Prabhupada 0515 - நெடுங்காலமாக பௌதிக உடம்பில் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கமுடியாது



Lecture on BG 2.25 -- London, August 28, 1973

நம்முடைய சந்தோஷமான வாழ்க்கைகாக பல தத்துவங்களை உருவாக்கலாம். ஆனால் இந்த ஜடவுடல் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க முடியாது ஐயா, அதுதான் உண்மை. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷாநுதர்ஷனம் (BG 13.9). எனவே அறிவுள்ளவர்கள், அவர்கள் செய்ய வேண்டியது... கிருஷ்ணர் எல்லோரையும் புத்திசாலிகளாக்கிறார்: "ஹே போக்கிரியே, நீர் உடல் சார்ந்த வாழ்வில் இருக்கிறீர். உங்கள் நாகரிகத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. அது போக்கிரிகளின் நாகரிகம்." யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப, என்பதுவே விடயம் ஸம-து:க-ஸுகம் தீரம் ஸோ 'ம்ருதத்வாய கல்பதே (BG 2.15) மறுபடியும் எவ்வாறு நித்திய நிலையை அடைவதென்பதே இருக்கின்ற சிக்கல். ஏனெனில் நாம் நித்தியமானவர்கள். ஏதோ ஒரு வகையில், இந்த பௌதிக உலகினுள் வீழ்ந்துவிட்டோம். அதனால், நாம் பிறப்பையும், இறப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே நமது சிக்கல் மறுபடியும் எவ்வாறு நித்தியமான நிலையை அடைவதென்பதே. அதுவே அம்ருதத்வ. ஆனால் இந்த போக்கிரிகளுக்கு அது தெரியவதில்லை, அதாவது நித்ய நிலையை அடையவது சாத்தியமென்பது. வெறுமனே கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயல்வதாலேயே, ஒருவர் இறப்பற்றவராகலாம். ஜன்ம கர்ம ச மே திவ்யம் யோ ஜாநாதி தத்த்வத: (BG 4.9). வெறுமனே கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயலுங்கள், கிருஷ்ணர் யாரென்று. அதன் விளைவாக த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (BG 4.9). கிருஷ்ணருக்கு சேவை செய்யாவிட்டாலும் கூட, வெறுமனே கிருஷ்ணரை புரிந்து கொள்வதனால். சேவை செய்வீர்களானால், நீங்கள் ஏற்கனவே முக்தியடைந்தவராகிறீர்கள். வெறுமனே தத்துவபூர்வமாக கிருஷ்ணரின் நிலையைப் புரிந்து கொள்ள முயன்றால். ஆனால் இல்லை, முட்டாள்கள், போக்கிரிகள் கூறுவார்கள்: ஆரிய சமாஜியினர் கூறுகிறார்கள் "நாங்கள் கிருஷ்ணரை ஒரு பெரிய மனிதராக ஏற்றுக் கொள்வோம். கடவுளாக ஏற்றுக் கொள்ளமாட்டோம்." என்று. சரி, ஒரு பெரிய மனிதரை, ஒரு சிறந்த புருஷரை ஏற்றுக் கொண்டால், ஏன் அவருடைய போதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது? இல்லாவிட்டால் பெரிய மனிதரை ஏற்றுக் கொள்ளும் எம்மாதிரியான முறை அது? உண்மையிலேயே கிருஷ்ணரை பெரிய மனிதராக ஏற்றுக் கொண்டால், குறைந்தபட்சம் கிருஷ்ணரின் உபதேசங்களையாவது பின்பற்ற வேண்டும். ஆனால், அவர்கள் அதைக் கூட செய்வதில்லை. இருப்பினும் அவர்கள் ஆரிய-சமாஜியினராம். ஆரியர் என்றால் முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகம். ஆனால் அவர்களோ இழிவடைந்து கொண்டிருக்கும் சமூகம். உண்மையிலேயே முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகம் கிருஷ்ண உணர்விலிருக்கும் கிருஷ்ணரின் பக்தர்களாவர். அவர்கள்தான் ஆரியர்கள். அர்ஜுன் கிருஷ்ணரின் அறிவுரைகளை புறக்கணிக்க முயன்ற சமயத்தைப் போன்று, அவர் "ஐயா, நான் போரிடமாட்டேன்," என்றார், அனார்ய-ஜுஷ்டம். கிருஷ்ணரின் உபதேசங்களை புறக்கணிக்கும் எவரும் அனாரியனே. கிருஷ்ணரின் உபதேசங்களுக்குக் கீழ்படிபவனே ஆரியன். அதுவே வேறுபாடு. ஆரிய-சமாஜியினர் என்பவர்கள், கிருஷ்ணரின் உபதேசங்களுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் ஆரியர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் அனாரியர்கள். அனார்ய-ஜுஷ்டம். இவ்விடயங்கள் பகவத் கீதையில் இருக்கின்றன. நானுஷோசிதும் அர்ஹஸி. கிருஷ்ணர் இங்கு கூறியுள்ளார், "நீங்கள் நித்தியமானவர்கள். அந்த நித்தியமான நிலையை எவ்வாறு அடைவது என்பதே உங்களது கடமை, உடலைப் பொறுத்தவரை, அந்தவந்த இமே தேஹா:, அது அழியக்கூடியதே. எனவே உடலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள கூடாது." இந்த வேறுபாடே வேத நாகரிகத்திற்கும் அதாவது, ஆரிய நாகரிகத்திற்கும். வேத நாகரிகம் என்றால் ஆரிய நாகரிகம். அனாரிய நாகரிகத்திற்குமிடையில் உள்ளது . அனாரிய நாகரிகம் என்றால் உடல் சார்ந்த வாழ்க்கை, ஆரிய நாகரிகம் என்றால் ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கை, ஆன்மிகத்தில் எவ்வாறு முன்னேறுவது என்பதுவே உண்மையான நாகரிகம். உடல் சார் வாழ்க்கை வசதிகளின் நினைவில் சிக்குண்டிருப்பவர்கள் எல்லோரும் அனாரியர்களே, இப்போது அது நிராகரிக்கப்பட்டுவிட்டது, நானுஷோசிதும் அர்ஹஸி "இந்த முக்கியத்துவமற்ற விடயங்களை எண்ணி புலம்பாதீர்கள்." மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா.