TA/Prabhupada 0540 - ஒரு மனிதன் மிக உன்னதமான நபராக வழிப்படப்பட்டால், அது ஒரு புரட்சியாகும்

Revision as of 08:24, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sri Vyasa-puja -- Hyderabad, August 19, 1976

ஸ்ரீபாத ஸம்பத் பட்டாச்சார்யா, பெண்கள் மற்றும் ஆடவர்களே : இந்த வியாச-பூஜை விழாவின் போது நீங்கள் தயைகூர்ந்து இங்கு வந்ததற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வியாச-பூஜை...அவர்கள் என்னை அமர்ததியிருக்கும் இந்த ஆசனம், அது வியாசாசனம் என்று அழைக்கப்படுகிறது. குரு வியாசதேவரின் பிரதிநிதி. நீங்கள் எல்லோரும் வியாசாதேவரின் பெயரைக் கேட்டிருக்கிறீர்கள். வேத வியாசர். எனவே பெரிய ஆச்சார்யரை பிரதிபலிக்கும் எவரும், வியாசதேவரே. அவர் வியாசாசனத்தில் அமர அனுமதிக்கப்படுகிறார். ஆகவே வியாச-பூஜை ... குரு வியாசதேவரின் பிரதிநிதி, எனவே அவரது பிறந்தநாள் வியாச-பூஜையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இப்போது நான் எனது நிலையை விளக்க வேண்டும், ஏனெனில் இன்றைய நாட்களில், ஒரு நபர் மிகவும் உயர்ந்த ஆளுமை என்று வணங்கப்படுவது ஏதோ புரட்சியாக கருதப்படுகிறது. அவர்கள் ஜனநாயகத்தை விரும்புவதால், வாக்களிப்பதன் மூலம் யாராவது உயர்த்தப்பட வேண்டும், அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும். ஆனால் நமது அமைப்பு, குரு-பரம்பரை, இந்த முறை வேறு. எங்கள் அமைப்பின் படி, நீங்கள் வேத அறிவை குரு-பரம்பரை அமைப்பு மூலம் ஏற்கவில்லை என்றால், , அது பயனற்றது. நீங்கள் வேத மொழியின் விளக்கத்தை உருவாக்க முடியாது. மாட்டு சாணம் போல. மாட்டு சாணம் என்பது ஒரு விலங்கின் மலமாகும். வேத உத்தரவு என்னவென்றால், நீங்கள் மாட்டு சாணத்தைத் தொட்டால் ..., ஒரு விலங்கின் எந்த மலமும், நீங்கள் உடனடியாக குளித்துவிட்டு உங்களை சுத்திகரிக்க வேண்டும். ஆனால் வேத உத்தரவு என்னவென்றால், பசு சாணம் எந்த தூய்மையற்ற இடத்தையும் சுத்திகரிக்க முடியும். குறிப்பாக இந்துக்கள், அதை ஏற்றுக்கொள்கிறோம். இப்போது காரணத்தால் அது முரணானது. ஒரு விலங்கின் மலம் தூய்மையற்றது, வேத உத்தரவு, மாட்டு சாணம் தூய்மையானது என்று கூறுகின்றது. எந்தவொரு இடத்தையும் சுத்திகரிக்க, மாட்டு சாணத்தை தூய்மையானதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். பஞ்ச-கவ்யத்தில் பசுஞ்சாணம் உள்ளது, பசுஞ் சிறுநீரும் உள்ளது.

எனவே இது முரண்பாடாக தோன்றுகிறது, வேத கட்டளை. ஆனாலும் நாம் ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் அது வேத கட்டளை. அதாவது ... அதுவே வேதங்களை ஏற்றுக்கொள்வது. பகவத்-கீதையைப் போல. பகவத்-கீதை, ஏராளமான அயோகியர்கள் உள்ளனர், அவர்கள் கீதையைச் சுருக்குகின்றனர்: "எனக்கு இது பிடிக்கும்; எனக்கு இது பிடிக்கவில்லை." இல்லை. அர்ஜுனன் "சர்வம் எதத் ர்தம் மன்யே (BG 10.14), என்கிறார். அதுவே வேதங்களின் புரிதல். ஒரு அயோக்கியன் கீதையின் விளக்கத்தை வெட்டினால். "எனக்கு இது பிடிக்கவில்லை, நான் விளக்குகிறேன்" என்று. அது பகவத்-கீதை அல்ல. பகவத்-கீதை என்றால் நீங்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் பகவத்-கீதை. எனவே நாங்கள் உங்கள்முன் வைப்பது பகவத்-கீதை உண்மையுருவில். பகவத்-கீதையின் பேச்சாளர் கிருஷ்ணர் கூறுகிறார், ஸ காலேனேஹ யோகோ நஷ்ட: பரந்தப. "எனதன்பு அர்ஜுனா, இந்த பகவத்-கீதையின் விஞ்ஞானம்," இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் (BG 4.1), "நான் முதலில் இதை சூரிய கடவுளிடம் கூறினேன், அவர் தனது மகனிடம் கூறினார்," விவசுவான் மனவே ப்ராஹ. அவர் வைவஸ்வத மனுவுக்கு. மனுர்இக்ஷ்வாகவே ப்ரவித். ஏவம் பரம்பரா-பிராப்தம் இமம் ராஜர்சயோ விதுஹ் (BG 4.2). அதுதான் செயல்முறை. ஸ காலேனேஹ யோகோ நஷ்ட: பரந்தப. இந்த பரம்பர முறையின் மூலம் வராத எவரும், வேத இலக்கியத்தின் எந்த விளக்கத்தையும் முன்வைத்தால், அது பயனற்றது. அது பயனற்றது. அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. யோகோ நஷ்டஹ் பரந்தப. அதனால் அது நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.