TA/Prabhupada 0539 - இந்த கிருஷ்ண உணர்வு இயக்பத்தை புரிந்துக்கொள்ள முயலுங்கள்



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

எனவே உண்மையில் சமுதாயத்தில் அமைதி மற்றும் சமநிலைக்காக நாம் கவலைப்பட்டால், கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள நாம் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை. கிருஷ்ண உணர்வு இயக்கத்தை, புறக்கணிக்க வேண்டாம். இந்த இயக்கம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளையும், உலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். சமூக, அரசியல், தத்துவ, மத, பொருளாதார- எல்லாவற்றையும் கிருஷ்ண உணர்வு மூலம் தீர்க்க முடியும். ஆகையால், தலைவராக இருப்பவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அவருடைய மேன்மை இங்கே இருப்பதைப் போல, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இது மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது, அங்கீகாரம் பெற்றது. இது கட்டுக்கதையோ அல்லது உணர்ச்சிவயப்பட்ட இயக்கமோ அல்ல. இது மிகவும் ஆய்வறிவு சார்ந்த இயக்கம். எனவே எல்லா நாடுகளிலிருந்தும் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம்: புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் நிதானமாக இருந்தால், நீங்கள் உண்மையில் நியாயமானவராக இருந்தால், இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் முழு மனித சமுதாயத்தின் நலனுக்கான ஏற்பட்ட விழுமிய இயக்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் அது ஒரு உண்மை. யார் வேண்டுமானாலும் வரலாம். இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். கிருஷ்ணா பூலியா ஜீவா போகா வாஞ்சா கரே.

நாம் நமது மனித வாழ்க்கை, மனித வாழ்க்கையின் இறுதி குறிக்கோளான அழியாமையை அடைவதுதான் என்று எண்ணக் கூடாது .... த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி (BG 4.9), இது நமது ... இதை நாம் மறந்துவிட்டோம். நாம் வெறுமனே பூனைகள் மற்றும் நாய்களின் வாழ்க்கையை நடத்துகிறோம், நாம் அந்த வாழ்க்கையின் முழுமையை அடைய முடியும் என்று அறியாமல் இனி பிறப்பு இருக்காது, மரணம் இல்லை. அமிர்தத்வம் சாத்தியம் என்பது கூட நமக்குப் புரியவில்லை. ஆனால் எல்லாம் சாத்தியம். அமிர்தத்வம். யாரும் இறக்க விரும்பவில்லை. அது தான் உண்மை. யாரும் வயதானவராக மாற விரும்பவில்லை, யாரும் நோய்வாய்ப்பட விரும்பவில்லை. இது நமது இயல்பான நாட்டம். ஏன்? ஏனெனில் முதலில், நமது ஆன்மீக வடிவத்தில், பிறப்பு இல்லை, இறப்பு இல்லை, முதுமை இல்லை, நோய் இல்லை. எனவே பரிணாம செயல்முறை வழியில், நீர்வாழ்வுகள், பறவைகள், மிருகங்கள், தாவரங்கள், மரங்கள், அவற்றுக்குப் பின் நீங்கள் இந்த வடிவத்திற்கு வரும்போது, ​​மனித உடல் வடிவத்திற்குப் பிறகு ... அஷீதிம் சதுராஸ் சைவ லக்ஸ்ஹாம்ஸ் தாத ஜீவ-ஜாதிஷு. இது பரிணாம செயல்முறை. நாம் உடலின் மனித வடிவத்திற்கு வருகிறோம். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அழியாதவனாக மாறுவது வாழ்க்கையின் குறிக்கோள் அமிர்தத்வம். அது ... கிருஷ்ண உணர்வு அடைவதன் மூலம் நீங்கள் அழியாதவராக மாறலாம். என்கிறார் கிருஷ்ணர். அது ஒரு உண்மை. நாம் வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும். ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜானாதி தத்வதஹ். நீங்கள் கிருஷ்ணரை உண்மையாக புரிந்து கொள்ள முயற்சித்தால், தத்வதஹ். பிறகு, த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி (BG 4.9), இந்த உடலை விட்டுவிட்ட பிறகு, நீங்கள் இனி பௌதிக உடலை ஏற்க மாட்டீர்கள். எந்தவொரு பௌதிக உடலையும் ஏற்றுக்கொள்ளாத நிலை வரும் போது நீங்கள் அழிவற்றவராகிவிடுவீர்கள். ஏனென்றால் இயற்கையில் நாம் அழிவற்றவர்கள்.

எனவே கிருஷ்ணர் வருகிறார், கிருஷ்ணர் இந்தப் பாடத்தை நமக்குக் கற்பிக்க வருகிறார், "நீங்கள் இயற்கையில் அழிவற்றவர். ஆத்மாவான நீங்கள் என்னில் ஒரு பகுதி. நான் அழிவற்றவன். எனவே நீங்களும் அழிவற்றவர். தேவையில்லாமல், நீங்கள் இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறீர்கள். "

மமைவாம்ஸோ ஜீவ பூதோ
ஜீவ-லோகே ஸநாதன:
மன: ஸஷ்டனிந்த்ரியானி
ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
(BG 15.7)

வெறுமனே போராடி ..., தேவையில்லாமல். மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் பல வகையான வாழ்க்கையில் புலனின்ப வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள், பூனைகள், நாய்கள், தேவதைகள், மரம், தாவரங்கள், பூச்சி போன்றவையாக. இப்போது, ​​இந்த மனித வாழ்க்கை வடிவத்தில், மீண்டும் புலனின்பத்தால் வசீகரிக்கப் பட வேண்டாம். கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுதான் சாஸ்திரங்களின் தீர்ப்பு. நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (SB 5.5.1). புலனின்பத்திற்காக நாய்கள் மற்றும் பன்றி போன்ற மிகவும் கடினமாக உழைப்பது, மனித வாழ்க்கையின் லட்சியம் அல்ல. மனித வாழ்க்கை என்பது எளிமையான தவத்திற்காக மட்டுமே. தபோ திவ்யம் புத்ரகா என ஷுத்தியேத் சத்த்வம். நம் இருப்பை நாம் சுத்திகரிக்க வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் நோக்கம். எனது சத்வா இருப்பை நான் ஏன் சுத்திகரிப்பேன்? பிரம்மா-சவுக்ஹ்யம் தவனந்தம். பின்னர் நீங்கள் வரம்பற்ற இன்பம், வரம்பற்ற மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். அதுவே உண்மையான இன்பம். ரமந்தே யோகினோ அனந்தே சத்தியானந்த-சித- ஆத்மனி இதி ராம பதேனாஸு பரம் ப்ரஹ்மாபீதியதே (CC Madhya 9.29).