TA/Prabhupada 0557 - ஹரிதாஸ தாகூரரைபோல் நாம் கிருஷ்ண பிரக்ஞையில் வலுவாக சாய்ந்திருக்க வேண்டும்

Revision as of 07:24, 28 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

தமால் கிருஷ்ணா : "இது உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வது மட்டுமே. கட்வாங்க மஹாராஜ இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிருஷ்ணரிடம் சரணடைந்து இந்த வாழ்க்கை நிலையை அடைந்தார். நிர்வாணா என்றால் ஜடச் செயல்களில் ஈடுபட்ட செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல். புத்தரின் தத்துவத்தின்படி, இந்த பௌதிக வாழ்க்கைக்குப் பிறகு வெற்றிடம் மட்டுமே உள்ளது. ஆனால் பகவத் கீதா வித்தியாசமாக கற்பிக்கிறது. இந்த பௌதிக வாழ்க்கை முடிந்தபின் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது. மொத்த ஜடச் செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தனது ஜடச் செயல்களில் ஈடுபட்ட வாழ்க்கை முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அறிவது போதுமானது. ஆனால் ஆன்மீக ரீதியில் முன்னேறிய நபர்களுக்கு, இந்த ஜடச் செயல்களில் ஈடுபட்ட வாழ்க்கைகு பிறகு மற்றொரு வாழ்க்கை இருக்கிறது. எனவே, இந்த வாழ்க்கையை முடிப்பதற்கு முன், ஒருவர் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ண உணர்வு அடைந்தால், நிச்சயமாக அவர் உடனே பிரம்ம-நிர்வாணத்தின் கட்டத்தை அடைகிறார். இறைவனின் ராஜ்யத்திற்கும், பக்தி சேவைக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் இருவரும் முழுமையான நிலையில் இருப்பதால், இறைவனின் உன்னதமான அன்பான சேவையில் ஈடுபடுவது ஆன்மீக ராஜ்யத்தை அடைந்ததிற்கு நிகர். இந்த பௌதிக உலகில் புலனின் திருப்திக்கு நடவடிக்கைகள் உள்ளன, ஆனால், ஆன்மீக உலகில் கிருஷ்ண உணர்வு நடவடிக்கைகள் உள்ளன. எனவே இந்த வாழ்க்கையில் கூட கிருஷ்ண உணர்வை அடைவது பிரம்மத்தை உடனடியாக அடைந்ததிற்கு சமம், கிருஷ்ண உணர்வில் இருக்கும் ஒருவர் நிச்சயமாக கடவுளுடைய ராஜ்யத்தில் நுழைந்துள்ளார் என்று பொருள். ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவத்-கீதாவின் இரண்டாம் அத்தியாயத்தை சுருக்கமாகக் கூறியுள்ளார். முழு உரைக்கான உள்ளடக்கங்களாக இருப்பது போல. பகவத்-கீதையில், பொருள் விஷயங்கள் கர்ம-யோகா, ஞான-யோகா ..."

பிரபுபாதர்: ஞான-யோகா.

தமால் கிருஷ்ணா: "... ஞான யோகா மற்றும் பக்தி-யோகா. இரண்டாவது அத்தியாயத்தில், கர்ம-யோகா மற்றும் ஞான-யோகா ஆகியவை தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளன, மேலும் பக்தி-யோகாவின் ஒரு பார்வையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பகவத்-கீதாவின் இரண்டாவது அத்தியாயத்தின் பக்திவேத நோக்கங்களை அதன் உள்ளடக்கங்களின் விஷயத்தில் முடிக்கிறது. "

பிரபுபாதர்: நன்றி. ஏதாவது கேள்வி? ஆம்.

தமால் கிருஷ்ணா : நான் எப்போதும் குழப்பமாக இருக்கிறேன் ... ஹரிதாச தாகுரா போன்ற தூய்மையான பக்தர் மாயாதேவியின் சோதனைகளுக்கு பலியாக மாட்டார் என்று அது இங்கே கூறுகிறது, ஆனால் பிரம்மா, சிவபெருமான் கூட பலியாகக்கூடும். அவர்கள் இறைவனின் தூய பக்தர்கள் என்று நான் எப்போதும் நினைத்தேன்.

பிரபுபாதர்: இல்லை. அவர்கள் தூய பக்தர்கள், ஆனால் அவர்கள் குணாவதாரா. பிரம்மா இந்த பௌதிக பிரபஞ்சத்திற்குள் மிக உயர்ந்த ஆளுமை போல. அவர் அனைத்து உயிரினங்களுக்கும் தந்தை. எனவே அவர்கள் ... நிச்சயமாக, நாம் மிகவும் ஆராய்ந்தால், ஹரிதாச தாகுரா, பக்தி சேவையில், பிரம்மாவை விட உயர்ந்த நிலையிலுள்ளார். அவர் பிரம்மாவின் அவதாரமாக கருதப்பட்டாலும், பிரம்மா ஹரிதாசா. ஆகவே, பிரம்மாவையும் சிவபெருமானையும் அந்த வழியில் வசீகரிக்கப்படுவதையும் காணும்போது, நாம் கலங்கக்கூடாது. ... இந்த அறிவுறுத்தலை நாம் எடுக்க வேண்டும், பிரம்மா, சிவன் போன்றோர் சில நேரங்களில் மாயாவின் வலையில் வீழ்கின்றார்கள், நாம் எம்மாத்திரம்? எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பிரம்மா மற்றும் சிவாவின் அந்தஸ்தில் கூட வீழ்ச்சிக்கு வாய்ப்பு உள்ளது, சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன பேச வேண்டும். எனவே ஹரிதாச தாகுரா போல் கிருஷ்ண உணர்வுக்கு - நாம் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். பிறகு நாம் மிக எளிதாக மாயாவின் கவர்ச்சியைக் கடக்க முடியும். அது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது அல்ல. பிரம்மா பலவீனத்தை வெளிப் படுத்தினார். அவர் பலவீனமானவர் அல்லது அவர் குறைவாக இருக்கிறார் என்று பொருள்படாது. இல்லை. அது நம் அறிவுரைக்காக.