TA/Prabhupada 0558 - நமது நிலை மதில்மேல் பூனைபோல - எந்நேரமும் கீழே விழலாம்



Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

பிரபுபாதர்: ஆம். அல்லது முதலில், அவருடையது. ஆம்.

பக்தர்: நீங்கள் கடவுளை அடைந்தவுடன், நீங்கள் மீண்டும் கிருஷ்ணரிடம் சென்றால் நீங்கள் கீழே விழ மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் நாம் முதலில் அங்கிருந்து வருகிறோம் என்றும் கூறப்படுகிறது. நாம் அங்கிருந்து வந்தால், நாம் ஏற்கனவே அங்கு இருந்திருந்தால் எப்படி வீழ்ந்தோம்?

பிரபுபாதர்: ஆம். இந்த உதாரணத்தைப் போலவே, பிரம்மா மற்றும் சிவா போன்ற ஆளுமைகள், அவர்களும் சில சமயங்களில் மாயாவின் பலியாகிறார்கள். எனவே நம், நான் சொல்வது, கீழே விழும் திறன் எப்போதும் இருக்கும், ஆற்றல். நாம் கடவுளின் அங்க உறுப்பாக இருப்பதால், மேலும் இப்போது நாம் பௌதிக உலகில் இருப்பதால், நாம் கீழே விழுந்துவிட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் கீழே விழுந்த வரலாற்றைக் கண்டுபிடிக்க முடியாது. அது சாத்தியமற்றது. ஆனால் நமது நிலை ஓரளவு தான் ஸ்திரம். எந்த நேரத்திலும், நாம் கீழே விழலாம். அந்த போக்கு உள்ளது. எனவே நாம் எல்லைப் புறமானவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் ஒன்று ... அதை புரிந்துகொள்வது மிகவும் எளிது. எல்லோரும் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இல்லையா? இப்போது நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​நீங்கள் நோய்வாய்ப்பட்ட வரலாற்றைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்கள், உங்கள் சிகிச்சையைச் மேற்கொள்ளுங்கள், அவ்வளவுதான். இதேபோல், நாம் வாழ்க்கையின் பௌதிக நிலையில் இருக்கிறோம். அதற்கு சிகிச்சையளிக்கவும், நீங்கள் குணமடைந்தவுடன், மீண்டும் கீழே விழாமல் கவனமாக இருங்கள். ஆனால் கீழே விழுந்து, மீண்டும் நோயுற்றிருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு முறை குணமாகிவிட்டதால், மீண்டும் நோயுற்றிருக்க வாய்ப்பில்லை என்பது கிடையாது. வாய்ப்பு உள்ளது. எனவே நாம் மிகவும் கவனமாக இருப்போம். ஆம்.

பக்தர்: பகவத்-கீதையில் பக்கம் 41 இல் பிரம்மா இரண்டாவது ஆன்மீக குரு என்று கூறுகிறது. எல்லா ஆன்மீக குருகளும் என்றென்றும் வாழ்கிறார்கள் என்று நான் நினைத்தேன்; ஆனால் பிரம்மா என்றென்றும் வாழவில்லை.

பிரபுபாதர்: ஆம். நாம் என்றென்றும் வாழ்கிறோம். உடல் மாற்றத்தால் நாம் இறக்க மாட்டோம். நீங்கள் என்றென்றும் வாழ்கிறீர்கள், நான் என்றென்றும் வாழ்கிறேன். மரணம் என்றால் நாம் இந்த உடலை மாற்றுகிறோம், அதுதான். உங்கள் ஆடையை மாற்றுவது போல. உங்கள் ஆடையை மாற்றும் போது, ​​நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று அர்த்தமல்ல. இதேபோல் இந்த உடலை மாற்றுவது உண்மையில் மரணம் என்று அர்த்தமல்ல. அல்லது வேறு உடலில் தோன்றுவது உண்மையில் பிறப்பு என்று அர்த்தமல்ல. உயிரினத்தில் பிறப்பு மற்றும் இறப்பு எதுவும் இல்லை, ஆனால் உடலின் மாற்றம் நமது பௌதிக நிலையில் நடைபெறுகிறது. அது பிறப்பு மற்றும் இறப்பு என எடுத்துக் கொள்ளப்படுகிறது. உண்மையில் பிறப்பு மற்றும் இறப்பு இல்லை. சரிதானே ? மதுதவிஷ: பிரபுபாதா, புத்தரை வணங்குபவருக்குஅங்கு செல்ல ஒரு கிரகம் இருக்கிறதா? அல்லது உள்ளதா ...

பிரபுபாதர்: என்ன ?

மதுதவிஷ: பகவான் புத்தரை வணங்குபவருக்கு,

பிரபுபாதர்: அவருக்கு?

மதுதவிஷ: பக்தி-கானாவில் (?), அவர்கள் சொல்கிறார்கள், அல்லது ஏதோ ஒரு வகையில், புத்தருக்கு வழங்கப்பட்ட ஒருவித பக்தி சேவை, புத்தர் தலைமை தாங்கும் இடத்திற்கு செல்ல அவருக்கு ஒரு கிரகம் இருக்கிறதா அல்லது ...?

பிரபுபாதர்: ஆம். ஒரு நடுநிலை அரங்கு உள்ளது. அது ஒரு கிரகம் அல்ல. இது ஆன்மீக உலகத்துக்கும் பௌதிக உலகத்துக்கும் இடையிலான விளிம்பு நிலை. ஆனால் அந்நிலையில் இருந்து ஒருவர் மீண்டும் கீழே வர வேண்டும். ஒருவர் ஆன்மீக வானத்தில் நுழைந்து ஆன்மீக கிரகத்தில் சிலவற்றில் தனது நிலைமையை பற்றி கொள்ளாவிட்டால் ... நீங்கள் வானத்தில் பறப்பது போல. நீங்கள் ஏதேனும் கிரகத்தைப் பெறாவிட்டால், நீங்கள் மீண்டும் கீழே வர வேண்டும். நீங்கள் வானத்தில் எல்லா நாட்களும் பறக்க முடியாது. அது சாத்தியமில்லை. அது நடுநிலை அரங்கு. மற்ற கிரகத்திலோ, அல்லது இந்த கிரகத்திலோ, பறந்துகொண்டே. எவ்வளவு நேரம் பறக்க முடியும்? நீங்கள் கொஞ்சம் தங்குமிடம் காண தான் வேண்டும். ஆனால் உயர்ந்த கிரகங்களிலோ அல்லது உயர்ந்த சூழ்நிலையிலோ உங்களுக்கு தங்குமிடம் இல்லை என்றால், நீங்கள் கீழே வர வேண்டும். எனவே அதே உதாரணத்தை மீண்டும் கோடி காட்டலாம். நீங்கள் விண்வெளியில் சென்றால் ... ஸ்பூட்னிக் ஆண்களைப் போலவே, அவர்கள் சிலநேரம் செல்கிறார்கள். "ஓ, அவர் எங்கு சென்றார், மிக உயரத்துக்கு, மிக உயரத்துக்கு சென்றுள்ளார் " என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் எங்கும் செல்லவில்லை. அவர் மீண்டும் கீழே வருகிறார். எனவே இது தவறான கைதட்டல். "ஓ, அவர் மிகவும் உயரமாக, மிக உயரமாகச் சென்றுவிட்டார்", என்று. இவ்வளவு உயரமாக செல்வதன் பயன் என்ன? நீங்கள் அடுத்த கணம் கீழே வருகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு வேறு கிரகத்திற்குள் நுழைய சக்தி இல்லை. எனவே இந்த இயந்திரம், இந்த ஸ்பூட்னிக் அல்லது இந்த விமானங்கள் உங்களுக்கு உதவுமா? நீங்கள் மீண்டும் கீழே தான் வர வேண்டும். மாறாக, நீங்கள் ஏதோ அட்லாண்டிக் கடல் அல்லது பசிபிக் கடலில் கீழே விழுந்துவிடுவீர்கள், யாரோ ஒருவர் உங்களை அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்வார். நீங்கள் பார்க்கிறீர்களா? இது தான் உங்கள் நிலைப்பாடு. எனவே வெற்றிடம் என்றால் வானத்தில் பறந்து குதித்து, "நான் மிகவும் உயரத்திற்கு வந்துவிட்டேன், நான் உயரத்திற்கு வந்துவிட்டேன், மிக உயரம்." (சிரிக்கிறார்) அந்த முட்டாள் மனிதனுக்கு அந்த உயர்ந்த நிலையில் எவ்வளவு காலம் இருப்பான் என்று தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் கீழே வருவார்.