TA/Prabhupada 0598 - கடவுள் எவ்வளவு சிறப்பானவர் என்பதை நாம் உணரமாட்டோம் - இது நம் முட்டாள்தனம்

Revision as of 07:34, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972

எனவே உண்மையில், பூரண சத்தியத்தின் இறுதி, கடைசி வார்த்தை - நபர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மூடர்கள் அல்லது புத்தியில் குறைந்தவர்கள் அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம் (பகவத் கீதை 9.11) "ஓ, கிருஷ்ணரா? அவர் கடவுளாக இருக்கலாம், ஆனால் அவர் மாயையின் உதவியை பெற்று, ஒரு நபராகிவிட்டார்." இது மாயாவாத தத்துவம். அவர்கள் மாயையைப் படிக்கிறார்கள்; அவர்கள் கடவுளையும் மாயையில் வைத்திருக்கிறார்கள். இது மாயாவத தத்துவம். ஆனால் கடவுள் மாயை அல்ல. கடவுள் ஒருபோதும் மாயையால் மூடப்படவில்லை. கிருஷ்ணர் கூறுகிறார் மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (பகவத் கீதை 7.14) என்னிடம் சரணடைந்த எவரும், அவர் மாயையின் பிடியிலிருந்து விடுபடுவார். கிருஷ்ணர் மாயையில் எப்படி இருக்க முடியும்? அது மிகவும் நல்ல தத்துவம் அல்ல. கிருஷ்ணரிடம் சரணடைவதன் மூலம், நீங்கள் மாயையிலிருந்து விடுபடுவீர்கள் முழுமுதற்கடவுள் கிருஷ்ணர், மாயையில் எப்படி இருக்க முடியும்? கிருஷ்ணர் சொன்னார், அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம், பரம் பாவம் அஜானந்த: (பகவத் கீதை 9.11) கடவுள் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவர் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் முழுமுதற் கடவுளின் சக்தியை அவருடைய சொந்த சக்தியுடன் ஒப்பிடுகிறார்கள். ஒரு தவளை தத்துவம். டாக்டர் தவளை. "அட்லாண்டிக் பெருங்கடல் கிணற்றை விட சற்று பெரியதாக இருக்கலாம்" என்று தவளை கருதுகிறது. ஏனென்றால் அவர் எப்போதும் வாழ்ந்து வருகிறார். கூப -மண்டூக- ந்யாய இது, சமஸ்கிருதத்தில் கூப -மண்டூக- ந்யாய என்று அறியப்படுகிறது. கூப என்றால் கிணறு, மற்றும் மண்டூகா என்றால் தவளை என்று பொருள். கிணற்றுக்குள் தவளை நிரந்தரமாக இருக்கிறது, யாராவது அவருக்கு தகவல் கொடுத்தால் அட்லாண்டிக் பெருங்கடல் என்னும் மற்றொரு பெரிய நீர் நிலை உள்ளது என்று அவர் வெறுமனே கணக்கிடுவார், "அது இந்த கிணற்றைவிட சற்று அதிகமாக இருக்கலாம், இந்த கிணற்றைவிட சற்று அதிகமாக இருக்கலாம்." ஆனால் அவர் எவ்வளவு பெரியவர் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. எனவே கடவுள் பெரியவர். அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது! அதுவே நம் முட்டாள்தனம். நாம் வெறுமனே கணக்கிடுகிறோம்: "அவர் என்னைவிட ஒரு அங்குலம் பெரியவராக இருக்கலாம். அல்லது என்னை விட ஒரு அடி பெரியது. "அது மனயூகம். கிருஷ்ணர் சொல்கிறார், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே: (பகவத் கீதை 7.3) லட்சக் கணக்கான மக்களுள் , ஒருவர் முழுமையான சத்தியத்தைப் புரிந்துகொண்டு தனது வாழ்க்கையை வெற்றிபெறச் செய்ய முயற்சிக்கலாம். யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத: (பகவத் கீதை 7.3)

எனவே நம் மனயூகத்தால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆன்மாவின் அளவீடு என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளவும் முடியாது. அது சாத்தியமில்லை. ஆகவே, கடவுளின் இயல்பு என்ன, என்பது குறித்து மிக உயர்ந்த அதிகாரியான கிருஷ்ணரிடமிருந்து தகவல்களை பெற வேண்டும். முழுமையான சத்தியத்தின் தன்மை என்ன, ஆன்மாவின் தன்மை என்ன. நாம் கேட்க வேண்டும். நாம் செவியுற வேண்டும். எனவே வேத இலக்கியம் ஸ்ருதி என்று அழைக்கப்படுகிறது நீங்கள் பரிசோதனை செய்ய முடியாது. அது சாத்தியமில்லை ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு நினைக்கும் மக்கள் ஒரு பகுதி உள்ளனர் அவர்கள் பரிசோதனை செய்ய முடியும், அவர்கள் மன ஊகத்தால் முழுமையானதை அறிய முடியும் என்று நினைக்கிறார்கள். பிரம்மா-ஸம்ஹிதை கூறுகிகிறது:

பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ
வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம்
ஸோ 'ப்யஸ்தி யத் ப்ரபத-ஸீம்ன்யவிசிந்த்ய-தத்த்வே
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
(பிரம்ம சம்ஹிதை 5 34)

பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்ய:. பல லட்ச ஆண்டுகளாக, கடவுளைக் கண்டுபிடிக்க வானத்தில் சென்றாலும் , கடவுள் எங்கே என்று ... பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி. இந்த சாதாரண மட்டத்தில் அல்ல, ஆனால் காற்றின் மட்டத்தில், காற்றின் வேகம். அல்லது மனம் மனதின் வேகம் மிக விரைவானது நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள், உங்களுக்கு யோசனை வந்தால், உடனே உங்கள் மனம் பல பல லட்சம் மைல்கள் தொலைவில் செல்லக்கூடும். எனவே மனதின் வேகத்தில் அல்லது காற்றின் வேகத்தில், பல பல லட்ச ஆண்டுகளாக பயணம் செய்தாலும் , நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்க... (பிரம்ம சம்ஹிதை 5 34) முனி-புங்கவானாம். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, உயர்ந்த நபர்களாலும், முனிவர்களாலும் கூட முடியாது