TA/Prabhupada 0597 - சிறிய சந்தோஷத்தை காண்பதற்காக நாம் கடினமாய் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்



Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972

ஒவ்வொரு உயிரினமும் பௌதிக இயற்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அதுவே அவரது நோய். அவர் அதை ஆள விரும்புகிறார் அவர் சேவகன், ஆனால் செயற்கையாக, அவர் இறைவன் ஆக விரும்புகிறார். அதுதான் நோய். எல்லாரும் ... இறுதியில், அவர் அதை பௌதிக உலகத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுறும்போது, ​​அவர் கூறுகிறார் "ஓ, இந்த பௌதிக உலகம் தவறானது, இப்போது நான் பிரம்மத்துடன் ஒன்றாகிவிடுவேன்." பிரம்ம சத்யம் ஜெகன் மித்யா ஆனால் ஆன்மீக ஆத்மா கிருஷ்ணரின் ஒரு பகுதி என்பதால், எனவே இயற்கையாக, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் மகிழ்ச்சியைத் தேடுகிறார். நாம் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் சில இன்பங்களைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உழைக்கிறோம்.

ஆகவே, வாழ்க்கையின் அந்த இன்பத்தை பிரம்ம ஜோதியில் அடைய முடியாது. ஆகவே, ஸ்ரீமத் பகவதத்தில் இந்த தகவலைப் பெறுகிறோம், ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32) க்ருச்ச்ரேண, கடுமையான விரதம் மற்றும் தவத்திற்குப் பிறகு, ஒருவர் பிரம்ம ஜோதியில் ஒன்றிணையலாம். ஸாயுஜ்ய-முக்தி. இது ஸாயுஜ்ய-முக்தி என்று அழைக்கப்படுகிறது. ஸாயுஜ்ய-முக்தி, ஒன்றிணைய ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் . ஒருவர் அந்த இடத்திற்குச் சென்று, பிரம்ம ஜோதியில் இணையும் வரை சென்றால்கூட,. கடுமையான விரதங்கள் மற்றும் தவங்களுக்குப் பிறகும், அவர்கள் கீழே விழுகின்றனர் பதந்தி அத:. அத: என்றால் இந்த பௌதிக உலகிற்கு மீண்டும் வருவது. ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யத: (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32).அவர்கள் ஏன் கீழே விழுகிறார்கள்? அநாத்ருத-யுஷ்மத்-அங்க்ரய: கடவுள் ஒரு நபர் என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய மிக சிறிய மூளை, கடவுள், ஒரு நபராக இருக்க முடியும் என்பதற்கு இடமளிக்காது. ஏனென்றால், தன்னுடைய அல்லது மற்றவர்களின் அனுபவம் அவருக்கு உண்டு. கடவுள் என்னைப் போன்ற உங்களைப் போன்ற ஒரு நபராக இருந்தால், அவர் எவ்வாறு பிரபஞ்சத்தை, எண்ணற்ற பிரபஞ்சங்களை உருவாக்க முடியும்?

எனவே முழுமுதற் கடவுளை புரிந்து கொள்ள, அதற்கு போதுமான புனிதமான நடவடிக்கைகள் தேவை பகவத் கீதையில், பஹுனாம் ஜன்மனாம் அந்தே (பகவத் கீதை 7.19) மாயாவாத தத்துவ வழியில் ஊகித்த பிறகு, ஒருவர் முதிர்ச்சியடைந்த பிறகு, பஹுனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான், அவர் உண்மையில் புத்திசாலியாக இருக்கும்போது, ​​... பூரண உண்மை ஒரு நபர் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாத வரையில். ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ (பிரம்ம சம்ஹிதை 5.1) ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே. பகவான். அந்த... வதந்தி தத் தத்வ-விதஸ் தத்வம் யஜ் ஞானம் அத்வயம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.11) இது ஸ்ரீமத்-பாகவதத்தில் உள்ள கூற்று: "முழுமையான உண்மையை அறிந்தவர்கள் பிரம்மம், பரமாத்மா மற்றும் பகவான், அவர்கள் ஒன்று என்பதை அவர்கள் அறிவார்கள். இது புரிந்துகொள்ளும் வெவ்வேறு நிலைகள் மட்டுமே." தொலைதூர இடத்திலிருந்து ஒரு மலையைப் பார்த்தால், நீங்கள் மங்கலான, மேகமூட்டமான ஒன்றைக் காண்பீர்கள் நீங்கள் இன்னும் முன்னோக்கிச் சென்றால், அது பச்சை நிறமாக இருப்பதை நீங்கள் காணலாம் நீங்கள் மலைக்குள் சென்றால், ஏராளமான விலங்குகள், மரங்கள், ஆண்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதேபோல், தூரத்தை அல்லது தூரத்திலிருந்தே முழுமையை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அவர்கள் ஊகத்தால், பிரம்மத்தை உணர்கிறார்கள். இன்னும் முன்னே இருப்பவர்கள், யோகிகளே, அவர்கள் அருகில் காணலாம். த்யானாவஸ்தித-தத்-கதேன மனஸா பஷ்யந்தி யம் யோகின (ஸ்ரீமத் பாகவதம் 12.13.1) அவர்கள் தனக்குள்ளேயே உள்மயமாக்கப்பட்ட தியான அவஸ்திதாவைக் காணலாம். இது பரமாத்மா அம்சமாகும். பக்தர்களாக இருப்பவர்கள், அவர்கள் கிருஷ்ணர்- முழுமுதற் கடவுளை- கண்ணுக்கு எதிரே, ஒருவக்கு ஒருவரை பார்க்கிறார்கள் நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் ( கதா உபநிஷத் 2.2.13)