TA/Prabhupada 0626 - உண்மைகளை நீங்கள் உணர விழைந்தால் - ஒரு ஆசாரியரை அணுகவும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0626 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0625 - Necessities of Life are being Supplied by The Supreme Eternal, God|0625|Prabhupada 0627 - Without Refreshness, One cannot Understand this Sublime Subject Matter|0627}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0625 - வாழ்வுக்கு அவசியமானவை அனைத்தும் கடவுளால் அளிக்கப்படும்|0625|TA/Prabhupada 0627 - புத்துணர்வு கொள்ளாமல் இந்த உயர்ந்த விசயத்தை புரிந்துக்கொள்ள இயலாது|0627}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:56, 31 May 2021



Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

எனவே கேட்கும் செயல்முறை மிகவும் முக்கியமானது. எனவே இந்த கிருஷ்ணர் பக்தி இயக்கம் அதைப் பரப்புகிறது "நீங்கள் கிருஷ்ணர் எனும் அதிகாரியிடமிருந்து கேட்கிறீர்கள்." கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாவார். இது தற்போதைய யுகத்திலும் கடந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களில், நாரதர், வியாச, அசித, தேவல, மிக, மிகச் சிறந்த கல்விமான்கள் மற்றும் முனிவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இடைக்காலத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார், மாதவாச்சார்யார், நிம்பர்கர் போன்ற அனைத்து ஆச்சார்யர்களும்... நடைமுறையில், இந்திய வேத நாகரிகம், இந்த ஆச்சார்யர்களின் அதிகாரத்தில் இன்னும் உள்ளது. இது பகவத்-கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: ஆச்சர்யோபாசனம் நீங்கள் உண்மையில் விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் ஆச்சார்யரை அணுக வேண்டும். ஆச்சர்யவான் புருஷோ வேத, "ஆச்சார்யரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஒருவர், அவர் விஷயங்களை உள்ளவாறு அறிவார்." ஆச்சார்யவான் புருஷோ வேத. ஆகவே நாம் ஆச்சார்யர்களின் மூலம் அறிவைப் பெறுகிறோம். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பேசினார், அர்ஜுனன் வியாசதேவரிடம் பேசினார். உண்மையில் அர்ஜுனன் வியாசதேவரிடம் பேசவில்லை, ஆனால் வியாசதேவர் அதைக் கேட்டார், கிருஷ்ணர் பேசுவதை கேட்டு அவர் தனது மகாபாரத புத்தகத்தில் குறிப்பிட்டார். இந்த பகவத்-கீதை மகாபாரதத்தில் காணப்படுகிறது. எனவே வியாசரின் அதிகாரத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மற்றும் வியாசரிடமிருந்து, மாதவாசார்யா; மாதவச்சார்யாரிடமிருந்து, அடுத்தடுத்து, மாதவேந்திர பூரி வரை. பின்னர் மாதவேந்திர பூரி முதல் ஈஷ்வர பூரி வரை; ஈஷ்வர பூரியிலிருந்து பகவான் சைதன்யதேவர் வரை; பகவான் சைதன்யதேவர் முதல் ஆறு கோஸ்வாமிகள் வரை; ஆறு கோஸ்வாமிகளிடமிருந்து கிருஷ்ணதாச கவிராஜா வரை; அவரிடமிருந்து ஸ்ரீனிவாச ஆச்சார்யா; அவரிடமிருந்து, விஸ்வநாத சக்ரவர்த்தி; அவரிடமிருந்து, ஜெகந்நாத தாச பாபாஜி; பின்னர் கௌர கிஷோர தாஸ பாபாஜீ ; பக்திவிநோத டாகுர; என் ஆன்மீக குரு. அதே விஷயத்தை, நாங்கள் உபதேசக்கிறோம். அது கிருஷ்ண பக்தி இயக்கம். இது ஒன்றும் புதிதல்ல. இது மூல பேச்சாளரான கிருஷ்ணரிடமிருந்து வழி வழியாக வருகிறது. எனவே நாம் இந்த பகவத்-கீதையைப் படிக்கிறோம். நான் சில புத்தகங்களைத் தயாரித்து, பிரசங்கிக்கவில்லை. இல்லை. நான் பகவத்-கீதையைப் பிரசங்கிக்கிறேன். நாற்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய-தேவனிடம் முதன்முதலில் சொல்லப்பட்ட அதே பகவத்-கீதை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுனனிடம் மீண்டும் சொல்லப்பட்டது. அதே விஷயம் சீடர் தொடர் முறை வழியாக உங்கள் முன் வைக்கப்படுகிறது. எந்த மாற்றமும் இல்லை. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே, கௌமாரம் யௌவனம் ஜரா, ததா தேஹாந்தர-ப்ராப்திர், தீரஸ் தத்ர ந முஹ்யதி (ப.கீ 2.13) எனவே இந்த அதிகாரப்பூர்வ அறிவை நீங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் உங்கள் புத்தியை கொண்டு அதை உட்கிரகிக்க முயற்சிக்கவும். உங்கள் பகுத்தறிவையும் புத்திசாலித்தனத்தையும் விட்டு விட்டு , எதையாவது கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது அல்ல. இல்லை, நாம் மனிதர்கள், நமக்கு அறிவாற்றல் உள்ளது. நாம் எதையாவது ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விலங்குகள் அல்ல. இல்லை. தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்நேன ஸேவயா (ப.கீ. 4.34) இந்த பகவத்-கீதையில் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், தத் வித்தி. வித்தி என்றால் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிரணிபாத ப்ரணிபாதேன என்றால் சரணடைதல், சவால் விடுத்து அல்ல ஒரு மாணவர் ஆன்மீக குருவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் திகைத்துப்போய் இருப்பார். நான் சொல்வது, அடிபணிந்த வரவேற்பு தான் நம் செயல்முறை... தஸ்மாத் குரும் ப்ரபத்யேத, ஜிஜ்ஞாஸு: ஷ்ரேய உத்தமம், ஷாப்தே பரே ச நிஷ்ணாதம், ப்ரஹ்மண்யுபஷமாஷ்ரயம் (ஸ்ரீ.பா 11.3.21) இது வேத உத்தரவு. உங்கள் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் உணர்வைத் தாண்டி, நீங்கள் ஒரு நல்ல ஆன்மீக குருவை அணுக வேண்டும்.