TA/Prabhupada 0634 - கிருஷ்ணர் இந்த மயக்க சக்தியினால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை

Revision as of 05:21, 28 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0634 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.28 -- London, August 30, 1973

ஆக, வியாசதேவர் அறிந்தார்,


அபஷ்யத் புருஷம் பூர்ணம் (SB 1.7.4)


அவர் அறிந்தார்... உதாரணமாக நீ ஒரு விமானத்தில் மேகங்களின் மேலே சென்று பார். சூரியன் மேகங்களால் சிறிதளவும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் விமானத்தின் கீழே மேகங்களின் பெரும் மூட்டத்தை காணலாம். அதுபோலவே, மாயையால் கிருஷ்ணரை பாதிக்க முடியாது. ஆகையால், பகவத்-கீதை


தைவீ ஹி எஷா குணமயீ மம மாயா என கூறுகிறது. மம மாயா (BG 7.14)


கிருஷ்ணர் கூறுகிறார், "என் மயக்க சக்தி." கிருஷ்ணர் இந்த மயக்க சக்தியினால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை. மேகத்தை போலவே தான். ஆனால் மாயாவாதிகள் கூறுவது என்னவென்றால், எப்பொழுது அந்த அருவமான பூரண சத்தியம் இங்கு வரும்போது, தோன்றுகிறது, அவர்கள் அவதாரங்களை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் அவரது தத்துவம் என்னவென்றால் இறுதியில் பூரண சத்தியம் என்பது அருவமானது. அவர் (கடவுள்) ஒரு நபராக தோன்றும்பொழுது, அவர் மாய உடலை ஏற்றுக்கொள்கிறார். இது தான் மாயாவாதம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவர் ஜட உடலை ஏற்றுள்ளார். அப்படி என்றால் அவர்கள் கிருஷ்ணரை சாதாரண உயிர் வாழீகளுடன் ஒப்பிட பார்க்கிறார். இதற்கு பகவத் கீதையில் கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது.


அவஜானன்தி மாம் மூட மானுஷீம் தனும் ஆஷ்ரிதம் (BG 9.11)


கிருஷ்ணர் தன் உண்மையான உருவில் வருவார்... ஆகையால் உண்மையான உருவம் இரண்டு கைகளானது. இது பைபிளிலும் ஏற்கப்பட்டிருக்கிறது: "மனிதனை தம்முடைய சாயலாக கடவுள் படைத்தார்." ஆக கடவுளுக்கு இரண்டு கரங்கள் இருக்கின்றன. நான்கு கரங்கள் உள்ள விஷ்ணு ரூபமும் மூல ரூபம் அல்ல. விஷ்ணு ரூபம் சங்கர்சனரின் இரண்டாம் பட்ச விரிவாங்கமாகும். ஆக கிருஷ்ணர் மாயையால் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை. இது தான் சாரம்.