TA/Prabhupada 0641 - ஒரு பக்தனுக்கு தேவையானது எதுவுமில்லை: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0641 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0640 - You can Find out Rascal Declaring himself as God - Kick on his Face|0640|Prabhupada 0642 - This Krsna consciousness practice is turning this material body into spiritual body|0642}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0640 - நீங்கள் யார் ஒருவர் தன்னை கடவுள் என்று சொல்கிறானோ, அவன் முகத்திலேயே எட்டி உதையுங்கள்|0640|TA/Prabhupada 0642 - கிருஷ்ணப் பிரக்ஞை பயிற்சியானது பௌதிக உடம்பை ஆன்மிக உடம்பாக மாற்றும்|0642}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 31: Line 31:

<!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) -->
<!-- BEGIN TRANSLATED TEXT (from DotSub) -->
பக்தர்: அத்தியாயம் ஆறு.  ஸாங்கிய யோகம். பதம் ஒன்று. "புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார், 'செயலின் பலன்களில் பற்றற்று, மேலும் கடமைக்காகச் செயலாற்றுபவனே, வாழ்க்கையில் சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறான். வேள்வி நெருப்பை மூட்டாதவனும்  செயலற்றவனுமல்ல."  (ப.கீ. 6.1) பொருளுரை.  இந்த அத்தியாயத்தில் எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் அமைப்பை பகவான் விளக்குகிறார். மனதையும் புலன்களையும் அடக்குவதற்கான வழியாகும் என்று. ஆனால் இம்முறை பொதுவாக மக்களுக்கு நிறைவேற்ற மிகவும் கடினமானதாகும், குறிப்பாக இக்கலி யுகத்தில். இவ்வத்தியாயத்தில் அஷ்டாங்க யோக முறை விளக்கப்பட்டிருப்பினும், பகவான் வலியுறுத்துகிறார் அதாவது கர்ம யோக செயல்முறை  அல்லது கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவதே சிறந்தது என்று. இந்த உலகில் உள்ள அனைவரும் செயல்படுவது தனது குடும்பத்தையும் மேலும் அவர்களுடைய  உடைமைகளையும்  பாதுகாக்க, ஆனால் சுயநலமின்றி செயலாற்றுவோர் யாருமில்லை, சில தனிப்பட்ட மகிழ்ச்சி, ஒருநிலைப்பட்ட அல்லது விரிவடைந்த  இலாபமாக இருக்கலாம். செயலின் பலன்களை அனுபவிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே பூரணத்துவம். கிருஷ்ண உணர்வில் செயல்படுவது ஒவ்வொரு உயிர்வாழியின் கடமையாகும், ஏனெனில்  உண்மையில் நாம் அனைவரும் பகவானது அங்க உறுப்புக்களாவோம். உடலின் பாகங்கள் முழு உடலின் திருப்திக்காக உழைக்கிறது. உடலின் உறுப்புக்கள் சுய திருப்திக்காக செயல்படுவதில்லை, ஆனால் முழுமையான உடலின் திருப்திக்காக செயல்படுகிறது. அதேபோல் ஜீவாத்மாக்கள், தனது சுய திருப்திக்காக இல்லாமல், முழுமுதற் கடவுளின் திருப்திக்காக மட்டுமே செய்லபடுவது, பூரணமான சந்நியாசியும் பூரணமான யோகியுமாவார்.  
பக்தர்: அத்தியாயம் ஆறு.  ஸாங்கிய யோகம். பதம் ஒன்று. "புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார், 'செயலின் பலன்களில் பற்றற்று, மேலும் கடமைக்காகச் செயலாற்றுபவனே, வாழ்க்கையில் சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறான். வேள்வி நெருப்பை மூட்டாதவனும்  செயலற்றவனுமல்ல."  ([[Vanisource:BG 6.1 (1972)|ப.கீ. 6.1]]) பொருளுரை.  இந்த அத்தியாயத்தில் எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் அமைப்பை பகவான் விளக்குகிறார். மனதையும் புலன்களையும் அடக்குவதற்கான வழியாகும் என்று. ஆனால் இம்முறை பொதுவாக மக்களுக்கு நிறைவேற்ற மிகவும் கடினமானதாகும், குறிப்பாக இக்கலி யுகத்தில். இவ்வத்தியாயத்தில் அஷ்டாங்க யோக முறை விளக்கப்பட்டிருப்பினும், பகவான் வலியுறுத்துகிறார் அதாவது கர்ம யோக செயல்முறை  அல்லது கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவதே சிறந்தது என்று. இந்த உலகில் உள்ள அனைவரும் செயல்படுவது தனது குடும்பத்தையும் மேலும் அவர்களுடைய  உடைமைகளையும்  பாதுகாக்க, ஆனால் சுயநலமின்றி செயலாற்றுவோர் யாருமில்லை, சில தனிப்பட்ட மகிழ்ச்சி, ஒருநிலைப்பட்ட அல்லது விரிவடைந்த  இலாபமாக இருக்கலாம். செயலின் பலன்களை அனுபவிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே பூரணத்துவம். கிருஷ்ண உணர்வில் செயல்படுவது ஒவ்வொரு உயிர்வாழியின் கடமையாகும், ஏனெனில்  உண்மையில் நாம் அனைவரும் பகவானது அங்க உறுப்புக்களாவோம். உடலின் பாகங்கள் முழு உடலின் திருப்திக்காக உழைக்கிறது. உடலின் உறுப்புக்கள் சுய திருப்திக்காக செயல்படுவதில்லை, ஆனால் முழுமையான உடலின் திருப்திக்காக செயல்படுகிறது. அதேபோல் ஜீவாத்மாக்கள், தனது சுய திருப்திக்காக இல்லாமல், முழுமுதற் கடவுளின் திருப்திக்காக மட்டுமே செய்லபடுவது, பூரணமான சந்நியாசியும் பூரணமான யோகியுமாவார்.  

"சந்நியாசிகள் சில சமயம் செயற்கையாக எண்ணிக் கொள்வார்கள் அதாவது அனைத்து பௌதிக கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டதாக, ஆகையினால் அவர்கள் அக்னி  ஹோத்ர  யக்ஞங்கள் செய்வதை நிறுத்திவிடுகிறார்கள்."  
"சந்நியாசிகள் சில சமயம் செயற்கையாக எண்ணிக் கொள்வார்கள் அதாவது அனைத்து பௌதிக கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டதாக, ஆகையினால் அவர்கள் அக்னி  ஹோத்ர  யக்ஞங்கள் செய்வதை நிறுத்திவிடுகிறார்கள்."  

Latest revision as of 07:44, 25 June 2021

Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

பக்தர்: அத்தியாயம் ஆறு. ஸாங்கிய யோகம். பதம் ஒன்று. "புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார், 'செயலின் பலன்களில் பற்றற்று, மேலும் கடமைக்காகச் செயலாற்றுபவனே, வாழ்க்கையில் சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறான். வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல." (ப.கீ. 6.1) பொருளுரை. இந்த அத்தியாயத்தில் எட்டு அங்கங்களைக் கொண்ட யோகத்தின் அமைப்பை பகவான் விளக்குகிறார். மனதையும் புலன்களையும் அடக்குவதற்கான வழியாகும் என்று. ஆனால் இம்முறை பொதுவாக மக்களுக்கு நிறைவேற்ற மிகவும் கடினமானதாகும், குறிப்பாக இக்கலி யுகத்தில். இவ்வத்தியாயத்தில் அஷ்டாங்க யோக முறை விளக்கப்பட்டிருப்பினும், பகவான் வலியுறுத்துகிறார் அதாவது கர்ம யோக செயல்முறை அல்லது கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவதே சிறந்தது என்று. இந்த உலகில் உள்ள அனைவரும் செயல்படுவது தனது குடும்பத்தையும் மேலும் அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாக்க, ஆனால் சுயநலமின்றி செயலாற்றுவோர் யாருமில்லை, சில தனிப்பட்ட மகிழ்ச்சி, ஒருநிலைப்பட்ட அல்லது விரிவடைந்த இலாபமாக இருக்கலாம். செயலின் பலன்களை அனுபவிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே பூரணத்துவம். கிருஷ்ண உணர்வில் செயல்படுவது ஒவ்வொரு உயிர்வாழியின் கடமையாகும், ஏனெனில் உண்மையில் நாம் அனைவரும் பகவானது அங்க உறுப்புக்களாவோம். உடலின் பாகங்கள் முழு உடலின் திருப்திக்காக உழைக்கிறது. உடலின் உறுப்புக்கள் சுய திருப்திக்காக செயல்படுவதில்லை, ஆனால் முழுமையான உடலின் திருப்திக்காக செயல்படுகிறது. அதேபோல் ஜீவாத்மாக்கள், தனது சுய திருப்திக்காக இல்லாமல், முழுமுதற் கடவுளின் திருப்திக்காக மட்டுமே செய்லபடுவது, பூரணமான சந்நியாசியும் பூரணமான யோகியுமாவார்.

"சந்நியாசிகள் சில சமயம் செயற்கையாக எண்ணிக் கொள்வார்கள் அதாவது அனைத்து பௌதிக கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டதாக, ஆகையினால் அவர்கள் அக்னி ஹோத்ர யக்ஞங்கள் செய்வதை நிறுத்திவிடுகிறார்கள்."

பிரபுபாதர்: சில யக்ஞைகள் தூய்மைப்படுத்துவதிற்காக அனைவராலும் நிறைவேற்றப்படுகிறது. ஆகையால் ஒரு சந்நியாசி இந்த யக்ஞை செய்ய தேவையில்லை. யக்ஞையில் செயல்படுத்தும் சடங்குகளை நிறுத்துவதனால், சில சமயங்களில் அவர்கள் தாங்கள் விடுதலைப் பெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே, அவர் கிருஷ்ண உணர்வின் தரமான தளத்திற்கு வந்தாலேயன்றி, விடுதலை என்னும் கேள்விக்கே இடமில்லை. தொடரவும்.

பக்தர்: "ஆனால் உண்மையிலேயே, அவர்கள் சுயநலமிக்கவர்கள் ஏனென்றால் அவர்களுடைய குறிக்கோள் அருவ பிரம்மனுடன் இணைவதாகும்." பிரபுபாதர்: ஆம். அங்கே கோரிக்கை உள்ளது. மாயாவாதிகளுக்கு ஒரு கோரிக்கை உள்ளது, அதாவது மிக உயர்ந்த ப்ரம்மத்தோடு ஒன்றாக இணைவது. ஆனால் ஒரு பக்தனுக்கு கோரிக்கை இல்லை. கிருஷ்ணரின் திருப்திக்காக, அவர் வெறுமனே கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அவர்கள் பதிலுக்கு எதையும் விரும்புவதில்லை. அதுதான் தூய பக்தி. எவ்வாறு என்றால், பகவான் சைதன்ய கூறுவதுபோல், ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத் ஈஷ காமயே (சி.சி. அந்திய 20.29, சிக்ஸஸ்தாக 4) "எனக்கு எந்த ஐசுவரியமும் வேண்டாம், எனக்கு எந்த எண்ணிக்கையிலும் தொண்டர்கள் வேண்டாம், எனக்கு அழகிய மனைவி வேண்டாம். வெறுமனே உங்கள் தொண்டில் ஈடுபட என்னை அனுமதியுங்கள்." அவ்வளவு தான். இதுதான் பக்தி யோக செயல்முறை. ப்ரகலாத மஹாராஜ் நரசிம்ம பகவானால் வினவப்பட்ட போது, "என் அன்பு சிறுவனே, எனக்காக நீ அதிகமாக கஷ்டப்பட்டாய், ஆகையால் உனக்கு என்ன வேண்டுமோ, அதை நீ கேள்." ஆனால் அவன் மறுத்தான். "என் அன்பு எஜமானரே, நான் தங்களுடன் வியாபாரம் செய்யவில்லை, அதவாது நான் தங்களிடமிருந்து, என்னுடைய சேவைக்கு கைம்மாறு பெற்றுக் கொள்ள." இது தூய்மையான பக்தி. ஆகையால் யோகிகள் அல்லது ஞானிகள், அவர்கள் கோரிக்கைவிடுகிறர்கள் அதாவது அவர்கள் பிரம்மனுடன் ஒன்றாக வேண்டும் என்று. ஏன் பிரம்மனுடன்? ஏனென்றால் அவர்களுக்கு கசப்பான அனுபவம் உள்ளது, பௌதிக வேறுபடுத்தலால். ஆனால் ஒரு பக்தருக்கு அவ்வாறு ஏதும் இல்லை. பக்தர் தொடர்ந்து இருப்பார், பகவானிடமிருந்து வேறுபடுத்தப்பட்டாலும், பகவானுக்கு செய்யப்படும் தொண்டை முழுமையாக அனுபவிக்கிறார். தொடரவும்.

பக்தர்: "இத்தகைய விருப்பம் வேறு எந்த பௌதிக விருப்பத்தையும்விட சிறந்தது. ஆனால் இது சுயநலமற்ற விருப்பம் கிடையாது. அதேபோல் பாதி முடிய கண்களுடன் யோக பயிற்சி செய்யும் யோகியும், அனைத்து பௌதிக செயல்களையும் நிறுத்திவிட்டு, தனது சுயநலத்திற்காக திருப்தியை நாடுகிறான். ஆனால் கிருஷ்ண உணர்வில் செயல் புரியும் ஒருவர் ...

பிரபுபாதர்: உண்மையிலேயே யோகிகள் சில பௌதிக சக்திகளை விரும்புகிறார்கள். அதுதான் யோகியின் பூரணத்துவம். பூரணத்துவம் அல்ல, அதுவும் ஒரு செயற்பாட்டு முறை. எவ்வாறு என்றால் உண்மையிலேயே நீங்கள் யோகாவின் ஒழுங்கு நெறிமுறையை பயிற்சி செய்துக் கொண்டிருந்தால், பிறகு நீங்கள் எட்டு வகையான பூரணத்துவம் பெறலாம். நீங்கள் பஞ்சுவைவிட இலேசாகலாம். நீங்கள் கல்லைவிட கடினமாகலாம். உங்களுக்கு எதுவும், விரும்பும் எதுவென்றாலும், உடனடியாக கிடைக்கும். சில நேரங்களில் நீங்கள் கோள் கிரகம் கூட உருவாக்கலாம். அத்தகைய சக்திமிக்க யோகிகளும் உள்ளனர். விஸ்வாமித்ர யோகி, அவர் உண்மையிலேயே அதைச் செய்தார். அவர் பனை மரத்திலிருந்து மனிதனை உருவாக்க விரும்பினார். "மனிதன் ஏன் தாயின் கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறக்க வேண்டும்? அவர்கள் சும்மா பழங்களைப் போல் உற்பத்தி செய்யப்படுவார்கள்." அவர் அதை அதுபோலவே செய்தார். ஆக சில நேரங்களில் யோகிகள் சிறந்த சக்தி உள்ளவர்கள், அவர்களால் செய்ய முடியும். ஆக இவை அனைத்தும் பௌதிக சக்திகள். இத்தகைய யோகிகள், அவர்களும் அழிந்துவிட்டார்கள். இந்த பௌதிக சக்தியில் உங்களால் எத்தனை காலத்திற்கு இருக்க முடியும்? ஆகையால் பக்தி யோகிகள், இது போன்று எதையும் விரும்பவில்லை. தொடருங்கள். ஆம்.

பக்தர்: "ஆனால் கிருஷ்ண உணர்வில் செயல்படும் ஒருவர் சுயநல நோக்கமின்றி பூரணத்தின் திருப்திக்காகவே செயலாற்றுகிறார். கிருஷ்ண உணர்வின் பக்தருக்கு சுய திருப்தியில் எவ்வித விருப்பமும் இல்லை. கிருஷ்ணரின் திருப்தியே அவரது பிரமாணமாக கருதுகிறார். எனவே அவர்தான் பக்குவமான சந்நியாசி அல்லது பக்குவமான யோகியுமாவார். கிருஷ்ண உணர்வில் சந்நியாசத்தின் மிகவும் உயர்ந்த நிலைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பகவான் சைதன்ய, இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: எல்லாம் வல்ல பகவானே, பொருள் சேர்க்கும் ஆசை எனக்கில்லை, அழகிய பெண்களை அனுபவிக்கும் ஆசையும் எனக்கில்லை. என்னைப் பலபேர் பின்பற்றுவதும் எனக்கு வேண்டாம். நான் விரும்பவது பிறவிதோறும் வாழ்க்கையில் தங்களுக்கு பக்தி தொண்டு ஆற்றுவதற்கான காரணமற்ற கருணையே."

பிரபுபாதர்: ஆகையால் பக்தர் வீடுபேறு கூட அடைய விரும்பவில்லை. பகவான் சைதன்ய ஏன் "பிறவிதோறும்" என்று கூறினார்? வீடுபேறு அளிப்பவர், அவர்கள் நிறுத்த விரும்புகிறார்கள், வெற்றிடயாளர், அவர்கள் இந்த பௌதிக வழக்கை முறையை நிறுத்த விரும்புகிறார்கள். ஆனால் பகவான் சைதன்ய "பிறவிதோறும்" என்று கூறினார்." அது யாதெனில் அவர் பிறவிதோறும் பௌதிக வாழ்க்கையின் பல மாதிரியான துன்பத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் அவருக்கு என்ன வேண்டும்? அவர் வெறுமனே பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புகிறார். அது தான் பூரணத்துவம். நீ நிறுத்தலாம் என்று நினைக்கிறேன. இங்கே நிறுத்து.