TA/Prabhupada 0661 – இச்சிறுவர்களைவிட சிறந்த ஜெபவீரர்கள் இல்லை – வெறுமனே இவர்கள் கிருஷ்ணரிடம் லயித்திரு

Revision as of 07:26, 28 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969

ஒருவர் என்மீது தியானிக்க வேண்டும். இறுதியில், தியானம் எங்கே. சூனியத்தில் இல்லை. விஷ்ணுவின் மேல், இந்த விஷ்ணு ரூபம். அதுதான் ஸாங்க்ய யோகம்.

இந்த ஸாங்க்ய யோகத்தை முதலில் பயிற்சி செய்தவர் கபிலதேவர். அவர் கிருஷ்ணரின் அவதாரம். இதுதான் யோகத்தின் இரகசியம். இது, நான் சொல்வது, நேராக உட்கார்ந்து உங்கள் மூக்கின் நுனியைப் பார்க்கும் செயல்முறை, இவையெல்லாம் விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் ரூபத்தின் மேல் மனதை ஒருமுகப்படுத்த உதவும். ஒருவர் என்மீது தியானம் செய்ய வேண்டும். இந்தத் தியானம் என்றால் கிருஷ்ணரைப் பற்றிய தியானம். எனவே இங்குக் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நேரடியாகக் கிருஷ்ணர் மேல் செய்யப்படுகிறது, இங்கு வேறொன்றுமில்லை. ஆகையால் இந்த இளைஞர்களைவிடச் சிறந்த தியான யோகிகள் வேறு எவரும் இல்லை. அவர்கள் வெறுமனே கிருஷ்ணரின் மீது கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் முழு வேலையுமே கிருஷ்ணர் தான். தோட்டவேலை செய்யும் போதும், பூமியைத் தோண்டும் போதும், "இங்கு அழகான ரோஜாப்பூ இருக்கும் அதனைக் கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கலாம்." தியானம். நடைமுறை தியானம். நான் ரோஜாவை வளர்ப்பேன், அது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படும். மண்ணை தோண்டுவதில் கூடத் தியானம் இருக்கிறது. பார்த்தீர்களா? அவர்கள் நல்ல உணவுப்பொருட்களைத் தயாரிக்கிறார்கள், "ஓ, இதனைக் கிருஷ்ணர் உண்பார்" என்று எண்ணுகின்றனர். எனவே சமையலிலும் தியானம் இருக்கிறது. பார்த்தீர்களா? மேலும் நாம உச்சாடனம் மற்றும் நடனம்பற்றி என்ன பேச வேண்டும். இவையெல்லாம்... இவர்கள் 24 மணி நேரமும் கிருஷ்ணரைப் பற்றிய தியானத்தில் இருக்கின்றனர். இவர்களே பூரணமான யோகிகள். யார் வேண்டுமானாலும் வந்து சவால் விடட்டும். இந்த இளைஞர்கள் பூரண யோகிகள்.

நாங்கள் பூரணமான யோக முறையைக் கற்பிக்கிறோம். மனம் போன போக்கில் அல்ல. பகவத் கீதையின் அதிகாரத்தில் செய்கிறோம். நாங்கள் எதையும் கற்பனையால் உருவாக்கவில்லை, இங்கே இருக்கிறது பிரமாணம். நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் மனதை வெறுமனே கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் மீது செலுத்த வேண்டும். அவர்களுடைய செயல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன அவர்கள் கிருஷ்ணரை தவிர்த்து வேறு ஒன்றை சிந்திக்க முடியாது, சிந்திக்க முடியாது, ஆனால் கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா. எனவே அவர்கள் உயர்ந்த தியாகிகள். "மனதில் என்னை நினைத்து என்னையே வாழ்வின் குறிக்கோளாக ஆக்குங்கள்." எனவே கிருஷ்ணரே வாழ்வின் இறுதிக் குறிக்கோள். அவர்கள் தங்களை கிருஷ்ண லோகத்திற்கு கொண்டு செல்வதற்காகத் தயார் படுத்திக் கொள்கின்றனர். எனவே இதுவே பூரணமான யோகம். பூரணமான யோகத்தை அவர்கள் பயிற்சி செய்கின்றனர். மேலும் தொடருங்கள்.