TA/Prabhupada 0693 – சேவை குறித்து பேசும்போது எந்த நோக்கமும் இல்லை – சேவை அன்பானது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0693 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0692 - Bhakti-yoga is the Highest Platform of Yoga Principles|0692|Prabhupada 0694 - Placed Again Into That Service Attitude. That is the Perfect Cure|0694}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0692 – யோகக் கொள்கைகளில் பக்தியோகம் மிக உயர்ந்த அடித்தளமாக உள்ளது|0692|TA/Prabhupada 0694 – சேவை மனப்பான்மையில் நிலைப்பதே மிகச்சரியான குணமடைதலாகும்|0694}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 08:00, 25 June 2021



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர்: ப4ஜதே எனும் சொல் ப4ஜ் எனும் வினைச்சொல்லிருந்து வருவது. இவ்வினைச்சொல் சேவை என்னும் பொருளில் உபயோகிக்க படுவதாகும். வழிபடுதல் எனும் தமிழ்ச் சொல் ப4ஜ் எனும் பொருளில் உபயோகப்படுத்தப் முடியாததாகும். வழிபடுதல் என்றால் தகுந்த நபருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்குவது என்று பொருள். ஆனால் அன்புடனும் நம்பிக்கையுடனும் தொண்டு புரிவது என்பது புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு மட்டுமே உரியதாகும்.

பிரபுபாதா : ஆம். வழிபடுதல் மற்றும் சேவை செய்தல் இரண்டும் வேறுபட்டவை. வழிபடுதல் என்றால் அதில் ஒரு நோக்கம் இருப்பதாகப் பொருள். நான் எனது நண்பரையோ அல்லது ஏதோ ஒரு பெரிய மனிதரையோ வழிபடுகிறேன். எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறது: அதாவது இந்தப் பெரிய மனிதன், இவன் பெரிய வியாபாரி. நான் இவனை திருப்தி செய்தால் இவன் எனக்கு சில வியாபாரத்தைக் கொடுக்கலாம், நான் சில லாபத்தைப் பெறலாம். ஆக தேவர்களின் வழிபாடும் அத்தகையதே. சில நோக்கங்களுக்காக அவர்கள் பல்வேறு தேவர்களை வழிபடுகிறார்கள். இது பகவத்கீதையில் கண்டிக்கப் பட்டுள்ளது. நீங்கள் இதனை எட்டாம் அத்தியாயத்தில் காணலாம். காமைஸ் தைஸ் தைர் ஹ்ரு'த-ஜ்ஞானா: ப்ரபத்3யந்தே'ன்ய-தே3வதா:(ப.கீ 7.20) ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், ஒரு நோக்கத்துடன் தேவர்களை வழிபடுகின்றனர். எனவே வழிபாட்டைப் பற்றி நாம் பேசும்போது அதில் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் சேவையைப் பற்றி குறிப்பிடும் போது அதில் எந்த நோக்கமும் இல்லை. சேவை என்றால் அன்பு. தாய் தன் குழந்தைக்கு சேவை செய்வதைப் போல. அதில் எந்த நோக்கமும் இல்லை.அதில் அன்பு மட்டுமே உள்ளது. எல்லோரும் அந்த குழந்தையை நிராகரித்தால் கூட, தாயால் நிராகரிக்க முடியாது. காரணம் அன்பு. அதைப்போலவே, ப4ஜ், சேவையைப் பற்றிய கேள்வி எழும் போது அங்கே நோக்கத்துக்கு இடமே இல்லை. மேலும் இதுவே கிருஷ்ண உணர்வின் பக்குவ நிலை.

இதுவே ஸ்ரீமத் பாகவதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள, முதல்தர சமயக் கொள்கையாகும். அது என்ன?ஸ வை பும்'ஸாம்' பரோ த4ர்மோ யதோ ப4க்திர் அதோ4க்ஷஜே (ஸ்ரீமத். பா 1.2.6). இந்த பக்தி, இந்த ப4ஜ் என்னும் மூலத்திலிருந்து தோன்றியது, முதல்தர சமயக் கொள்கை. அது என்ன?யதோ ப4க்திர் அதோ4க்ஷஜே. இதனை பயிற்சி செய்வதால் ஒருவர் தன்னுடைய கடவுள் உணர்வை அல்லது கடவுள் மீதான அன்பை, வளர்த்துக் கொள்கிறார், அவ்வளவுதான். உங்களால் கடவுள் மீதான உங்கள் அன்பை வளர்த்துக் கொள்ள முடிந்தால், நீங்கள் எந்த சமயக் கொள்கையை பின்பற்றினாலும் பரவாயில்லை, ஆனால் கட்டாயமாக நீங்கள்....... எந்த அளவிற்கு கடவுள் மீதான உங்கள் அன்பை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் கேள்வி . ஆனால், உங்களுக்கு ஏதாவது நோக்கம் இருந்தால்- அதாவது இந்த சமயக் கொள்கையை பயிற்சி செய்வதால், என்னுடைய பௌதீக தேவைகள் நிறைவேற்றப்படும்- இது முதல் தரமான சமயம் அல்ல, இது மூன்றாம் தர சமயம். முதல்தர சமயம் என்பது கடவுள் மீதான உங்கள் அன்பை வளர்த்துக் கொள்ள உதவுவது. அஹைதுக்யப்ரதிஹதா.எந்தக் காரணமும், எந்தத் தடையும் இல்லாமல். இதுவே முதல் தரமானது. இதுவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த யோக முறை, கிருஷ்ண உணர்வு, நீங்கள் இதனை மதம் என்று எடுத்துக் கொண்டால் கூட இது முதல் தரமானது. ஏனென்றால் இதில் எந்த நோக்கமும் இல்லை. அவர்களுக்கு இது வேண்டும், அது வேண்டும், என்பதற்காக அவர்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வில்லை. அப்படி இல்லை. சில விஷயங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதைப்பற்றி கவலை இல்லை. அவர்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அது இது என எல்லாவற்றிற்கும் எந்த பஞ்சமும் இல்லை. அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. கிருஷ்ண உணர்வு உடையவர் ஆவதால் ஒருவர் ஏழை ஆகிவிடுவார் என்று நினைக்காதீர்கள். இல்லை. கிருஷ்ணர் இருக்கிறார் என்றால் எல்லாமே இருக்கிறது. ஏனென்றால் கிருஷ்ணரே எல்லாம்.. எனவே.... ஆனால் நாம் கிருஷ்ணரை வைத்து எந்த வியாபாரமும் செய்யக்கூடாது. "கிருஷ்ணா எனக்கு இதைக் கொடுங்கள், அதை கொடுங்கள்".கிருஷ்ணருக்கு உங்களைக் காட்டிலும் நன்றாக தெரியும். ஒரு குழந்தை, தன் பெற்றோரிடம் எதையும் வேண்டாததை போல, "அன்பான தந்தையே, அன்பான தாயே எனக்கு இதை கொடுங்கள் அதை கொடுங்கள்" அந்தக் குழந்தையின் தேவை என்ன என்பது தந்தைக்குத் தெரியும். எனவே கடவுளிடம் கேட்பது என்பது அவ்வளவு நல்ல செயல் அல்ல, "எனக்கு இதை கொடுங்கள் அதை கொடுங்கள்". நான் ஏன் அவ்வாறு கேட்க வேண்டும்? கடவுள் எல்லா சக்தியும் படைத்தவர் என்றால், அவருக்கு என்னுடைய தேவையும் தெரியும், என்னுடைய விருப்பங்களும் தெரியும். இது வேதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏகோ ப3ஹூனாம்' வித3தா4தி காமான். அந்த ஒரே கடவுள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கானவர்களுக்கு தேவையானதை அளிக்கிறார். எண்ணற்ற கணக்கிலடங்காத உயிரினங்கள் உள்ளன.

எனவே நாம் கடவுள் மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். அவரிடம் எதையும் கோரக் கூடாது. நம்முடைய தேவைகள் ஏற்கனவே நிறைவேற்றப்படுகின்றன. பூனைகளும் நாய்களும் கூட தங்களுக்கு தேவையானதை பெறுகின்றன. அவை கோயிலுக்கு செல்வதில்லை, கடவுளிடம் எதையும் கேட்பதும் இல்லை, ஆனால் அவை பெறுகின்றன. எனவே ஏன் ஒரு பக்தர் பெறமாட்டார்? ஒரு பூனையும் நாயும் தன் வாழ்க்கைக்கு தேவையானதை கடவுளிடம் கேட்காமலேயே பெறும்போது, நான் ஏன் கடவுளிடம் "எனக்கு இது வேண்டும், அது வேண்டும்" என்று கேட்க வேண்டும். இல்லை. நான் அவர் மீது அன்பு செலுத்த மட்டும் முயற்சிக்க வேண்டும். அது எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிடும். இதுவே யோகத்தின் உயர்ந்த தளமாகும். தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : "ஒருவன் மதிப்புமிக்க மனிதனையோ, தேவரையோ வழிபடாமல் இருக்க முடியும். அவனை பண்பற்றவன் என்று அழைக்கலாம்; ஆனால் முழுமுதற் கடவுளுக்கு தொண்டு புரிவதை எவரும் தவிர்க்க முடியாது. அவ்வாறு தவிர்ப்பவன் கடுமையான இகழ்ச்சிக்கு உள்ளாவான். ஒவ்வொரு உயிர்வாழியும் பரம புருஷ பகவானின் அம்சம், அங்கத்துணுக்கு, என்பதால், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஸ்வரூப நிலையில் முழுமுதற் கடவுளுக்கு தொண்டாற்ற கடமைப்பட்டவர்கள்.

பிரபுபாதா : ஆம், இது இயற்கையானது. நான் கடவுளின் ஒரு அம்சமாக இருந்தால், என்னுடைய கடமை சேவை செய்வது. இந்த உதாரணத்தை நான் பலதடவை கூறியிருக்கிறேன். இந்த விரல் என்னுடைய உடலின் ஒரு அங்கத் துணுக்கு என்பதைப்போல, எனவே விரலின் கடமை என்ன? விரலின் கடமை, முழு உடலுக்கும் சேவை செய்வது தான். அவ்வளவுதான். சில சமயம் ,எனக்கு அரிப்பு ஏற்பட்டால், உடனே என்னுடைய விரல்கள் வேலை செய்கின்றன. பார்த்தீர்களா? நான் பார்க்க விரும்பினால், என்னுடைய கண்கள் உடனே வேலை செய்கின்றன. நான் எங்காவது செல்ல விரும்பினால், உடனே என்னுடைய கால்கள் என்னை எடுத்துச் செல்கின்றன. ஆக, என் உடலின் உடைய அங்கங்கள் எனக்கு உதவுவதைப் போல , முழு உடலுக்கு, நான் சாப்பிடுகிறேன். வயிறு சாப்பிடுகிறது. அதைப்போலவே, கடவுள் அவருடைய அங்க துணுக்குகளான நம்மிடம் இருந்து சேவை பெறுவதற்காகவே இருக்கிறார். அவர் சேவை செய்வதற்காக அல்ல. இந்த சேவை, உடலின் அங்கங்கள் உடலுக்கு சேவை செய்தால், உடலின் எல்லா அங்கத்திற்கும் தானாகவே சக்தி கிடைக்கிறது. அதைப்போலவே நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்தால் நம்முடைய எல்லாத் தேவைகளும் , சக்தியும் உடனடியாகப் பெறலாம். யதா2 தரோர் மூல-னிஷேசனேன (ஸ்ரீமத்.பா 4.31.14) வேருக்கு நீர் ஊற்றுவது போன்ற உதாரணம் உடனடியாக இலை கிளை என எல்லாவற்றிற்கும் சக்தி கிடைக்கிறது-உடனடியாக. அதைப் போலவே, கிருஷ்ணருக்கு அல்லது கடவுளுக்கு சேவை செய்வதால் மட்டுமே, நீங்கள் எல்லாவற்றிற்கும் சேவை செய்கிறீர்கள். வேறு தனிப்பட்ட சேவை என்ற கேள்விக்கு இடமில்லை. (தெளிவாக கேட்கவில்லை) எல்லாம் தானாகவே கிடைக்கும். எல்லாமே....

மனிதர்களிடத்தில் மட்டுமல்ல விலங்குகளிடம் கூட கருணை வரும். கடவுள் உணர்வு, கிருஷ்ண உணர்வு மிக அருமையானது. கடவுள் உணர்வில்லாமல், கிருஷ்ண உணர்வு இல்லாமல், மற்ற உயிர்வாழிகளுக்கான கருணை என்பது அளவானது தான். ஆனால் கடவுள் உணர்வுடன், கிருஷ்ண உணர்வுடன் இருக்கும்போது, மற்ற எல்லா உயிர்வாழிகளுக்கான கருணை, பூரணமாக இருக்கிறது. இதுவே முறையாகும். தொடர்ந்து படிக்கவும்.