TA/Prabhupada 0692 – யோகக் கொள்கைகளில் பக்தியோகம் மிக உயர்ந்த அடித்தளமாக உள்ளது



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர் : " தவம் புரிபவன்,ஞானி மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவர்களை காட்டிலும், யோகி சிறந்தவன் ஆவான். எனவே, அர்ஜுனா எல்லா சூழ்நிலைகளிலும் யோகியாக இருப்பாயாக.

பிரபுபாதா : யோகி, இதுதான் பௌதீக வாழ்வின் உயர்ந்த பக்குவ நிலை. இந்த பௌதீக உலகத்திற்குள் வாழ்க்கை பல்வேறு நிலைகளில் இருக்கிறது. ஆனால், ஒருவன் தன்னை யோகக் கொள்கையில் நிலைநிறுத்திக் கொண்டானென்றால், குறிப்பாக பக்தி யோகத்தின் கொள்கைகளில் நிலை நிறுத்திக் கொண்டால், அவன் மிக பக்குவமான நிலையில் வாழ்வதாக அர்த்தம். எனவே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பரிந்துரைக்கிறார், "எனது அன்பு அர்ஜுனா, எல்லா சூழ்நிலைகளிலும், நீ ஒரு யோகி, யோகியாக இருப்பாய்". ஆம் தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : மேலும் எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்பு தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லோரையும் விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.

பிரபுபாதா : இப்போது, இது இங்கே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது எல்லா யோகிகளுக்கு மத்தியில்-- பல வகையான யோகிகள் உள்ளார்கள். அஷ்டாங்க யோகி, ஹட யோகி, ஞான யோகி, கர்ம யோகி, பக்தி யோகி. எனவே யோக கொள்கைகளில், மிக உயர்ந்த தளம், பக்தி யோகம் ஆகும். எனவே கிருஷ்ணர் இங்கே கூறுகிறார், "எல்லா யோகிகளுக்கு மத்தியில்"-. பல வகையான யோகிகள் உள்ளனர். "எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவன் ஒருவன் எப்போதும் என்னில் நிலைத்து" - கிருஷ்ணரில் நிலைத்து, என்னில் என்றால், கிருஷ்ணர் என்னில் என்று குறிப்பிடுகிறார். அதாவது ,எப்போதும் தன்னை கிருஷ்ண உணர்வில் வைத்திருப்பவன். பெரும் நம்பிக்கையுடன், எப்போதும் என்னில் நிலைத்து, எனக்கு திவ்யமான அன்பு தொண்டு புரிகின்றனோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும், எல்லாரையும் விட உயர்ந்தவனும் ஆவான். சாங்கிய யோகம் எனும் இந்த அத்தியாயத்தின் முக்கியமான அறிவுரை இதுதான். அதாவது, நீங்கள் உன்னத தளத்தில் உள்ள பக்குவமான யோகி ஆக விரும்பினால், உங்களை கிருஷ்ண உணர்வில் வைத்துக்கொள்ளுங்கள், இதனால் நீங்கள் முதல்தர யோகி ஆவீர்கள்.

பக்தர் : பொருளுரை :பஜதே என்னும் சொல் இங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பிரபுபாதா : இந்த பஜதே எனும் வார்த்தை, மூல சமஸ்கிருத ஸ்லோகத்தில் உள்ளது.

யோகி3னாம் அபி ஸர்வேஷாம்'
மத்3-க3தேனாந்தர்-ஆத்மனா
ஷ்2ரத்3தா4வான் ப4ஜதே யோ மாம்'
ஸ மே யுக்ததமோ மத:
(ப.கீ 6.47)

இந்த பஜதே எனும் வார்த்தை ,சமஸ்கிருத வார்த்தை, இது பஜ் தாது, பஜ் எனும் மூலத்திலிருந்து, வருகிறது. இது ஒரு வினைச்சொல்- பஜ் தாது. பஜ் என்றால் சேவை செய்வது என்று பொருள். பஜ. ஆக இதே வார்த்தை தான் இந்த ஸ்லோகத்தில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது, பஜ் தாது அதன் பொருள் பக்தராகிய ஒருவர். பக்தரை தவிர வேறு யார் கிருஷ்ணருக்கு சேவை செய்வார்கள்? நீங்கள் இங்கே சேவை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏன்? நீங்கள் வேறு எங்காவது சேவை செய்யலாமே, உங்களுக்கு ஆயிரமும் அல்லது 2 ஆயிரம் டாலர் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ஆனால், நீங்கள் இங்கு வந்து எந்த கட்டணமும் இல்லாமல் உங்கள் சேவையை தருகிறீர்கள். ஏன்? காரணம், கிருஷ்ணர் மீதான அன்பாகும். எனவே இந்த பஜ, இந்த சேவைக்கு அடிப்படை கடவுள் மீதான அன்பே. இல்லை என்றால், ஏன் ஒருவர் எந்த அவசியமும் இன்றி தன்னுடைய நேரத்தை வீணடிக்கிறார்? இங்கே மாணவர்கள் பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் தோட்ட வேலை செய்கிறார்கள், சிலர் தட்டச்சு செய்கிறார்கள், சிலர் சமைக்கிறார்கள், சில வேறு ஏதாவது, இப்படி எல்லாவற்றையும் செய்கிறார்கள். ஆனால் அது கிருஷ்ணருடன் தொடர்புடையது. எனவே கிருஷ்ண உணர்வு எப்பொழுதும் இருக்கும். எப்பொழுதும் 24 மணி நேரமும். இதுவே மிக உயர்ந்த யோக முறை. யோகம் என்றால் உங்களது உணர்வை விஷ்ணு அல்லது முழுமுதற்கடவுளான கிருஷ்ணருடன் எப்போதும் தொடர்பில் வைத்திருப்பது. இதுவே யோகத்தின் பக்குவ நிலை. இங்கு இது தானாகவே நடக்கிறது, ஒரு சிறு குழந்தை கூட இதை செய்ய முடியும். அந்தக் குழந்தை தனது தாயாரோடு வந்து தலை வணங்குகிறது. "கிருஷ்ணா, நான் தலை வணங்குகிறேன்" எனவே அவனும் கிருஷ்ண உணர்வில் உள்ளான். ஒரு சிறு குழந்தை, அவன் கை திட்டுகிறான். ஏன்? "ஹரே கிருஷ்ணா" எனவே, ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டுள்ளனர். கிருஷ்ண உணர்வில் இருத்தல். இங்கு இருக்கும் ஒரு சிறு குழந்தை கூட மிக உயர்ந்த யோகி ஆவான். இது எமது தற்பெருமை அல்ல. இது பகவத் கீதை போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம், நமது தற்பெருமைக்காக இந்த வார்த்தைகளை கூறவில்லை. இல்லை, இது உண்மைதான். கோவிலில் இருக்கும் ஒரு சிறு குழந்தையும் தன்னை யோகப் பயிற்சியின் உயர்ந்த தளத்தில் வைத்துக் கொள்ளலாம். இதுவே ,கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் மிக உயர்ந்த பரிசாகும்.