TA/Prabhupada 0697 – என்னை உனது சேவையில் ஈடுபடுத்து என்பதே கோரிக்கையாய் இருக்கவேண்டும்

Revision as of 07:52, 28 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பிரபுபாதா: ஆம்.

பக்தர்: நாம் 'பஜ ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா' என்று பாடும்போது, ​​" ஸ்ரீ கிருஷ்ண சைதன்யாவை வழிபடுங்கள்' " என்று சொல்கிறோம். நாம் பஜ என்று சொல்கிறோம், எனவே ...

பிரபுபாதா: பஜ, ஆம். பஜ என்றால் அவருடைய சேவையில் ஈடுபட்டு இருங்கள். அதாவது, வழிபாடு தானாகவே அங்கு வருகிறது. நீங்கள் சேவையில் ஈடுபடும்போது, வழிபாடு என்பது ஏற்கனவே உள்ளது.

பக்தர்: (தெளிவற்ற பேச்சு)

பிரபுபாதா: ஹ்ம்?

பக்தர்: இதன் நோக்கம் என்னவென்றால், இதை வணங்குவதில், பக்தி சேவையில் வழிநடத்துவதா?

பிரபுபாதா: ஆம். அது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். கிருஷ்ணர் உடனான நம் நோக்கங்கள் ... இறைவன் சைதன்ய நமக்கு கற்பித்து இருக்கிறார். நீங்கள் பிரார்த்திக்கும் போது, ​​எந்தவொரு பொருளுக்கும் நீங்கள் பிரார்த்திக்க கூடாது இறைவன் சைதன்யா இந்த வழியில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்: ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே (சை.ச அந்த்ய 20.29, ஸிக்ஸஸ்தக 4). "என் அன்பான ஆண்டவரே," ஜகத்-ஈசா ஜகத் என்றால் பிரபஞ்சம் என்றும் ஈசா என்றால் கட்டுப்படுத்தி என்றும் பொருள். எனவே பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர், ஜகத்-ஈசா. கிருஷ்ணா அல்லது ராமா என்று சொல்வதற்கு பதிலாக… இதை, எந்தவொரு சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள முடியும். அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், அவர் ஜகத்-ஈசா முழு பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்துபவர். எனவே அவர், " என் அன்பான பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளரே" அல்லது இறைவனே என்று கூறுகிறார் ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் ந கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே. "நான் உங்களிடமிருந்து எந்தவிதமான செல்வத்தையோ அல்லது எத்தனை ஆதரவாளர்களையோ, அல்லது எந்த அழகான பெண்ணையோ பிரார்திக்கவில்லை," இவை பௌதீக வேண்டுதல்கள் மக்கள் பொதுவாக இந்த பௌதீக உலகில் ஒரு சிறந்த தலைவராக மாற விரும்புகிறார்கள். ஃபோர்டு அல்லது ராக்பெல்லர் போன்ற ஒருவர் மிகவும் பணக்காரராக மாற முயற்சிக்கிறார், யாரோ ஒருவர் ஜனாதிபதியாக மாற முயற்சிக்கிறார், யாரோ ஒருவர் என்னென்னென்னவாகவோ முயற்சிக்கிறார், ஒரு நல்ல தலைவராக மாறுவதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் பின்பற்றலாம் என்ற எண்ணத்தினால். எனவே இவை பௌதீக கோரிக்கைகள். "எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள், எனக்கு சில ஆதரவாளர்களை கொடுங்கள், எனக்கு ஒரு நல்ல மனைவியைக் கொடுங்கள், "அவ்வளவுதான். ஆனால் இறைவன் சைதன்யா மறுக்கிறார். அவர் கூறுகிறார், "எனக்கு இவை அனைத்தும் தேவையில்லை." ந ஜனம் ந தனம் . தனம் என்றால் செல்வம் என்றும் ஜனம் என்றால் ஆதரவாளர்கள் என்றும் பொருள். ந ஸுந்தரீம் கவிதாம் , "அல்லது அழகான மனைவி." பிறகு நீங்கள் எதற்காக வழிபடுகிறீர்கள்? நீங்கள் பக்தராக மாறுவது எதற்கு? அவர் கூறுகிறார் மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே (சை.ச அந்த்ய 20.29). அவர் விடுதலை கூட கேட்கவில்லை. யோகிகள், அவர்கள் விடுதலையை விரும்புகிறார்கள், அவர்களுக்கு தேவை இருக்கிறது பௌதீகவாதிகளுக்கும் கோரிக்கை இருக்கிறது, "எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டும், எனக்கு அது வேண்டும்." எனவே ஆன்மீகவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களும் விடுதலையைக் கோருகிறார்கள். அதுவும் ஒரு தேவை. ஆனால் சைதன்யா மஹாபிரபு கூறுகிறார், "இது போல எதையும் நான் விரும்பவில்லை" நான் உங்கள் சேவையில் ஈடுபட மட்டுமே விரும்புகிறேன். "ஜன்மனி ஜன்மனி - பிறப்பிற்கு பிறகு பிறப்பு அதாவது, "இந்த பிறப்பு மற்றும் இறப்பு நோயை நிறுத்துங்கள்" என்றும் அவர் கேட்கவில்லை. இது பக்தி-யோகத்தின் நிலை. இறைவனிடத்தில் எந்த கோரிக்கையும் இல்லை. உங்கள் சேவையில் நீங்கள் என்னை ஈடுபடுத்த வேண்டும் என்பதே ஒரே பிரார்த்தனை.

எனவே நம்முடைய, இந்த கோஷம் - ஹரே கிருஷ்ணாவும் அதே விஷயம்.இதையும் சைதன்யா கற்பிக்கிறார். ஹரே என்றால் இறைவனின் ஆற்றலை நினைவுபடுத்துவது; கிருஷ்ணா - இறைவன், ராமா - இறைவன். ஏன்? தயவுசெய்து என்னை உங்கள் சேவையில் ஈடுபடுத்துங்கள், அவ்வளவுதான். அது தான் கோரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சேவையில் என்னை ஈடுபடுத்துங்கள். நம் நோய் என்னவென்றால் நாம் கடவுளை சேவிக்க மறந்துவிட்டோம். ஏனென்றால், "நான் ஒரு கடவுள். நான் வேறு எந்த கடவுளை சேவை செய்ய ? என்ற எண்ணம் தான் நானே கடவுள். "அதுதான் ஒரே நோய். கடைசி வலை. முதலில் நான் ஜனாதிபதி, அமைச்சர், ராக்பெல்லர், ஃபோர்டு ஆக முயற்சிக்கிறேன், இது, அது, நான் தோல்வியுற்றால், நான் கடவுளாக விரும்புகிறேன். அது மற்றொரு ஜனாதிபதி எனவே பக்தி-யோகாவில் அத்தகைய கோரிக்கை இல்லை. சேவை மட்டுமே. அனைத்து ஜனாதிபதி பதவியும் தோல்வியுற்றால், கடவுள் என்னும் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை நான் கோருகிறேன். பார்த்தீர்களா? வேண்டுதல்கள் இருக்கிறது, நோய் இருக்கிறது. தன் நோய் இன்னும் இருக்கிறது என்பதை அவர்களால் அறிய முடியாது. நான் உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கோருகிறேன். ஆனால் பக்தி-யோகா இதற்கு நேர்மாறானது. வேலைக்காரனாக ஆக. வேலைக்காரனின் வேலைக்காரன் (சை.ச மத்திய 13.80). சற்று எதிர். இறைவன் அல்லது ஜனாதிபதியாக ஆக வேண்டும் என்று கோரும் கேள்வியே இங்கு இல்லை நான் சேவை செய்ய விரும்புகிறேன், அவ்வளவுதான். அதுவே முக்கியமான சோதனை. சேவைதான் அசல் இயல்பு. இப்போது இந்த பௌதீக உலகிலும் நீங்கள் சேவை செய்கிறீர்கள். நீங்கள் ஜனாதிபதியாக ஆக விரும்பினால், வாக்காளர்களுக்கு "நான் உங்களுக்கு சேவை செய்வேன்" என்று பல முறை வாக்குறுதி அளிக்க வேண்டும். சேவை உறுதிமொழி இல்லாமல், ஜனாதிபதி பதவி கோரும் கேள்வியே இல்லை எனவே உண்மையில் எனது நிலைப்பாடு சேவையை வழங்குவதாகும். ஒன்று நான் ஜனாதிபதி அல்லது மந்திரி ஆகிறேன் அல்லது இது அல்லது அது. அவர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒன்று நான் மிக உயர்ந்த நிர்வாகி ஆனாலும், ஜனாதிபதி ஓ, நான் என் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டும், இல்லையெனில் உடனடியாக அவர்கள் என்னை பதவி நீக்கம் செய்வார்கள் எனவே எனது உண்மையான நிலை சேவை. ஆனால் இங்கே சேவை மிகவும் ஆபத்தானது - சேவையில் சிறிதளவு முரண்பாடு இருந்தால், ஜனாதிபதி உடனடியாக நீக்கப்படுவார். உங்கள் ஜனாதிபதி திரு கென்னடி ஏன் சுடப்பட்டார்? ஏனென்றால் நீங்கள் நல்ல சேவையை வழங்குகிறீர்கள் என்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதுதான் மூல உண்மை. எனவே நீங்கள் சேவையால் இங்கு திருப்தி அடைய முடியாது. இந்தியாவில் எங்கள் காந்தி, அவரும் கொல்லப்பட்டார். அவர் வாழ்நாள் முழுவதும் சேவையை வழங்கினார், ஆனால் அந்த நேரத்தில் மக்கள் அதை விரும்பவில்லை. "ஓ, நீங்கள் அந்த சேவையை வழங்கவில்லை." எனவே இதுதான் நிலை. எனவே ஒருவர் அறிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் இந்த பௌதீக நோக்கங்களுக்கு சேவை செய்ய வேண்டியதில்லை நான் எனது சேவையை முழுமுதற் கடவுளுக்கு வழங்க வேண்டும். அதுவே வாழ்க்கையின் முழுமை.