TA/Prabhupada 0710 – நாம் கோடானுகோடி யோசனைகளைச் செய்து, அந்த யோசனைகளிலேயே சிக்கிக் கொள்கிறோம்

Revision as of 07:27, 28 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 3.26.39 -- Bombay, January 14, 1975

எந்த யோக முறையாக இருந்தாலும், ஹத யோகமோ, ஞான யோகமோ அல்லது..... கர்ம யோகம் என்பது கீழான தரம் ஆகும். அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக பக்தியோகம். எனவே, பக்தி யோகத்திற்கு வரும்போது அதுவே வாழ்வின் பக்குவ நிலை. ப₄க்தி-யோகே₃ந மநஸ ஸம்யக் ப்ரணிஹிதே அமலே (SB 1.7.4). ப₄க்தி-யோகே₃ந அமல : "மனம் தூய்மை அடைகிறது." சேதோ-த₃ர்பண-மார்ஜநம் (CC Antya 20.12). அதுவே பக்தி யோகத்தின் நேரடி விளைவாகும். மனம் இப்போது களங்கம் அடைந்துள்ளதால், மேலும் புலன்கள் மற்றும் புலங்களின் செயல்களின் உருவாக்கத்தால், நாம் பல கோடிக்கணக்கான எண்ணங்களை உருவாக்கி, அந்த எண்ணங்களில் சிக்கிக் கொள்கிறோம். நாம் கோடிக்கணக்கான உடல்களையும் ஏற்க வேண்டியுள்ளது மேலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறோம். இதுவே அதன் உட்கருத்து. எனவே மனதை தூய்மைப்படுத்த வேண்டும். அதுதான் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல். சேதோ-த₃ர்பண-மார்ஜநம் ப₄வ-மஹா-தா₃வாக்₃நி-நிர்வாபணம். நம் மனம் தூய்மை அடைந்ததும்...... அதுவே மஹா-தா₃வாக்₃நி. இந்த மனதில், ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான எண்ணங்களின் விரிவாக்கம், இதுவே ப₄வ-மஹா-தா₃வாக்₃நி. ப₄வ-மஹா-தா₃வாக்₃நி. இது ஒரு குருவினுடைய கடமை. ப₄வ-மஹா-தா₃வாக்₃நியிலிருந்து, தனது சீடனை வெளியேற்றுவது. ஸம்ஸார-தா₃வாநல-லீட₄-லோக-த்ராணாய காருண்ய-க₄நாக₄நத்வம். காருண்ய, கருணை. எனவே, குரு என்றால் என்ன? குரு கருண்யத்தைப் பெற்றவர். காருண்ய என்றால் எப்படியெனில், மேகமானது கடலிலிருந்து நீரை பெறுகிறது, அதைப்போல ஒரு ஆன்மீக குருவும், கருணையின் மேகத்தைப் பெருகிறார் கருணைக்கடலான கிருஷ்ணரிடமிருந்து பெறுகிறார். க₄நாக₄நத்வம். ஒரு மேகம்தான் காட்டுத் தீயை அணைக்க முடியும். ஸம்ஸார. வேறு எந்த நீர் பாய்ச்சும் முறையும் உதவாது. காட்டில் தீப்பிடித்தால், தீயணைப்புத்துறையும், வாளி வாளியாக தண்ணீரும் உதவாது. அது சாத்தியப்படாது. நீங்களும் அங்கே செல்ல முடியாது, உங்களின் தீயணைப்புத் துறையும் வாளியும் எந்த உதவியும் செய்ய முடியாது. பிறகு எப்படி அந்தத் தீ அணைக்கப்படும்? க₄நாக₄நத்வம். வானத்தில் ஒரு மேகம் தோன்றி, மழையைப் பொழிந்தால், பிறகு அந்த பரந்த காட்டுத்தீயானது உடனடியாக அணைந்துவிடும். எனவே குருவானவர் ஒரு மேகத்தைப் போன்றவராக கருதப்படுகிறார். அவர் நீரைப் பாய்ச்சுகிறார். ஷ்₂ரவண-கீர்தந-ஜலே கரயே ஸேசந (CC Madhya 19.152). அந்த தண்ணீர் எது? அந்த தண்ணீர் இந்த ஷ்₂ரவண-கீர்த்தனம். ப₄வ-மஹா-தா₃வாக்₃நி, இந்த ஜட வாழ்க்கை எனும் காட்டுத்தீ, தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிகிறது. எனவே இதனை மேகத்திலிருந்து பொழியும் மழை மூலம் அணைக்க வேண்டும், அந்த மழை என்பது ஷ்₂ரவண-கீர்த்தனம். ஷ்₂ரவணம் என்றால் கேட்டல், மற்றும் கீர்த்தனம் என்றால் பாடுதல். ஒரே வழி அது மட்டும் தான். ஷ்₂ரவண-கீர்தந-ஜலே கரயே ஸேசந.